அன்று ஒரு நாள் நமதூரின் கடைவீதியில்
 அமர்ந்து இருந்த போது ஒரு தம்பதியினர் வந்தனர்.
 அதில் அந்த தம்பதியின் கணவருக்கு கண் தெரியாது.
 அவர்கள் அக்ர்பத்தி வியாபாரம் செய்தனர்.
 கண் தெரியாத தம்பதி என்பதால் மனது இரக்கத்தில் நாங்கள் பத்தி வேண்டாம்
 என்று சொல்லி பணம் கொடுத்தோம் அதற்கு அந்த தம்பதிகள்
 எங்களுக்கு சும்மா பணம் எல்லாம் வேண்டாம் பத்தி வாங்கிக்கொண்டு
 பணம் கொடுங்கள் என்றனர்.  அட.டா என்ன ஒரு சுய கெளரவம்.
 என்ன ஒரு மரியாதை
 என்ன ஒரு தன்னம்பிக்கை
 நாம் சும்மா எல்லாம் 
 நமது உடலின் ஊனத்தைச் சொல்லி
 பணம் வாங்கி அதில் வாழவேண்டாம்.
 தினமும் குறைந்தது நூறு ரூபாய் சம்பாதித்தால் போதும்.
 அதற்காக ஒரு சிறு தொழில் செய்வோம்.
 அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து 
 நாம் கெளரவமாக நிம்மதியாக வாழ்வோம் என எண்ணினார்களே..
 அந்த தம்பதியை நினைத்து மனம் பல நாள் அசைபோட்டது.
 நாம் வாழும் இந்திய நாட்டில்
 சமீப காலமாக எத்தனை எத்தனை ஊழல்கள்
 ரோடு பொட வரும் ஒப்பந்தக்காரர்கள் முதல்
 2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ், சுடுகாட்டு ஊழல் என பட்டியல் நீளும்போது,
 நமது நாட்டுக்கு வெளியே அடுத்த நாட்டின் எண்ணெய் வளத்தை
 சுரண்டுவதற்காக கோட்டு சூட்டும் போட்டு பேசும் நாகரீக சீமான்கள் வரை..
 எல்லோரையும் அசைபோடுங்கள்...
 அன்னா ஹஸாரே மாதிரி ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும்
 காந்தியவாதிகளையும் அசைபோடுங்கள்.
 அப்படியே இந்த தம்பதிகளையும் அசைபோடுங்கள்.
 ஊழலும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் .
 உழைத்து சாப்பிடுவோம் என பீகாரில் கை ரிக் ஷா இழுக்கும் இந்திய மன்னர்களும் இருக்கிறார்கள்.
 இதான் இந்தியா!