செவ்வாய், 13 ஜனவரி, 2009

காடு வெளஞ்சென்ன மச்சான்?

காடு வெளஞ்சென்ன மச்சான்
நம்ம கையும் காலும் தானே மிச்சம்
என பட்டுக்கோட்டையாரின் சிந்தனைகள்
இன்றும் நமது செவிகளில் ரீங்காரமிடும்போடு
காலை முதல் அந்தி வரை வயக்காடுகளில் பாடுபடும்
அந்த உழவர் பெருமக்களை நினைக்காமலில்லை.





தமிழகத்தில் பொங்கல் திருநாளை
உழவர் திருனாளாக நினைத்து நாம் கொண்டாடும்போது
அந்த உழவும் விவசாயத்தொழிலும்
அதற்கு அடிப்படையாக உள்ள வயல்வெளிகள் மறைவது
நமது மனதிற்கு வேதனையளிக்காமல் இல்லை.



எங்கள் பகுதியை இன்று அல்ல
' சங்ககாலம் முதலே சோழனாடு சோறுடைத்த நாடு'
என்ற பெருமையை தக்கவைத்துள்ளோம்.
ஆனால் சங்ககாலம் தொட்டே நம்முடன் தொற்றி வந்த இந்த விவசாயம்
கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு மறைந்து விடுமோ,
என்ற அச்சம் நம்மை விட்டு அகலாமல் இல்லை.
காரனம், பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தின் எந்த நகருக்கு
பயணம் செய்தாலும் சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு
பச்சைபசேல் பின் தொடரும். ஆனால், இன்றோ விவசாயத்தை கொன்றதன்
அடையாளமாக நடுகல் நடப்பட்டு வீட்டுமனைகளாக இருப்பதைக்கானலாம்.
அதே போல பல இடங்களில்
விவசாய நிலங்களில் தென்னம்பிள்ளைகள்
நடப்பட்டு அவை தோப்பாக மாறுவதையும் பார்க்கிறோம்.




ஆனால், தமிழக அரசியல் சாசனம் என்ன சொல்கிறது?
விளை நிலத்தை வீட்டுமனையாக மாற்றவேன்டும் என்றால்
அந்த நிலத்தில் சில ஆண்டுகளாக, தொடர்ந்து விவசாயம் நடைபெறவில்லை
என்பதற்கான சான்று முக்கியம்.
இதெல்லாம் இப்போ யாரு பார்க்குறா?
நவீன உலகம் வந்துடுச்சி? கிராமங்களில் உள்ள இளைஞர்களிடமும், இளசுகளிடமும்
நவ நாகரீக மோகம் வந்துடுச்சி. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம், கனினி மோகம், சினிமாக்களின் தாக்கம், இவை தான் விவசாய தொழிலை பாதிக்கிறது.
கிராமங்களை விட்டு வெளியேறும் விவசாய தொழிளார்கள் ஏராளம்.

2 கருத்துகள்: