வியாழன், 4 மார்ச், 2010

'கதவை திறந்தால் வருவது யாரோ'

அட வெட்கக்கேடே உன் பெயர் தான் சாமியாரா?
என்று காரசாரமான தலைப்பில் ஒரு நாளிதழ்..
அப்படி என்ன தான் நடந்தது என யாரும் யோசிக்க தேவையில்லை.
சன் தொலைக்காட்சியும்
தினகரன் நாளிதழும் வெளியிட்ட செய்திகள்
தமிழகமே பரபரப்பாகி விட்டது.
நேற்று தினகரன் நாளிதழ் எங்கேயும் கிடைக்கவில்லை.

'கதவை திறந்தால் வருவது யாரோ' என்ற
நித்தியானந்த ஸ்வாமிகளும்,
போதையேறிப்போச்சி
புத்திமாறிப்போச்சி என பாடி ஆடிய தமிழ் நடிகையும்,
கொஞ்சிக்குலாவியதை தமிழகமே பார்த்து சிரித்தது என சொல்லலாம்.

இதற்கு முன் இது போல சாமியார்களின் லீலைகளை
தமிழ் உலகம் பார்க்காமல் இல்லை.
நமது நினைவில் வருவது
சங்கராச்சாரியார்,அடுத்து சென்னையில் ஒரு சாமியார்,
அம்மா, மகள் இருவருமே இவரிடம் மயங்கியது, வெளிச்சமானது,
சமீபத்தில் மன்மத குருக்கள், இப்போ சொல்லவேண்டியதில்லை.


33 நாடுகளில் 1200 கிளைகள் வைத்து இருந்தாலும்,
வார இதழ்களில் கட்டுரைகளை பல வாசகர்கள் படித்தாலும்,
சராசரி மனிதன் என்பதை இந்த உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
எந்த சாமியாரும் கடவுள் இல்லை.
கடவுளின் அவதாரமும் இல்லை.


(picture.nithyanandavedictemple.org)
பில்கேட்ஸ் சொன்னார்;
'ஏழையாய் பிறப்பது குற்றமல்ல,
ஏழையாய் வாழ்வது தான் குற்றம் என...'

பலரும் பிழைப்பை தேடி என்ன என்னமோ செய்கிறோம்.
அதில் ஒருவகை தான் போலியான சாமியார்கள்.
இவர்கள் தனது பிழைப்புக்காக நல்ல இடத்தை
தேர்வு செய்து ஆசிரமத்தை அமைக்கிறார்கள்.
நம்ம மக்களுக்கா சொல்லவேண்டும்?!,
இது போன்ற சாமியார்களை ஊக்குவிப்பதே நமது தாய்குலம் தான்.
ஆனால் அவர்களுக்கும் சக மனிதர்களுக்கு உள்ள ஆசைகள் இருக்கு.
முற்றிலும் துறந்தவர்கள் இல்லை என சொல்லலாம்.
காமத்தைப்பற்றி ஒரு தமிழ் கவிஞன் அழகாக எழுதினான்.
ஒரு பாடலில்...
' அது வேதம் சொன்ன குருவை கூட விடுவதில்லையே..?!'
இந்த வரிகள் உண்மை என இப்போதும் கூட உணர்த்துகிறது.

இன்னொரு தமிழ் பாடல் சொல்கிறது.
'பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..?'
இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

துறவறம், துறவற வாழ்க்கை,
இன்றைய காலகட்டங்களில் மேற்கொள்வது
அரிது.. அரிது.... அரிது..
இன்னும் சொல்லப்போனால்,
அப்படி சொல்பவர்களின் படுக்கை அறையில்
இன்னும் கேமரா செல்லவில்லை என சொல்லலாம்.