செண்பக தீவு படித்து இருக்கிறீர்களா?
பார்த்திப மகராஜா காஞ்சியில் இருந்து நாடு கடத்தப்பட்டப்போல்
ஏராளமான சோழ நாட்டு மக்களால் வரவேற்கப்பட்டாரே.. அதாங்க செண்பகதீவு..
ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் உற்சாகமாக உலாவந்து கண்டதில்
செண்பகதீவாகத்தான் இருக்கும் என நான் கருதும் ஒரு தீவு பினாங்கு.
பல நூற்றான்டுக்கு முன்னரே தமிழக வரலாற்றில் இருந்தாலும்
ஆங்கிலேயர்கள் வந்த பின் இதன் அழகை பார்க்கலாம்.
1786ம் ஆண்டு போர்ட் கோர்வால்லிஸ் தனது பாதத்தை பதித்தபோது
அழகிய வனந்தரத்தையும்,உடலுக்கு உற்சாகத்தை தரும் காலனிலையும் கண்டபோது
அந்த சீமைத்துரைக்கு இதை விட மனசு வரவில்லை..
ஆங்கிலேயர்களின் நிர்வாகமும் அவர்களின் விவேகமும் இனைந்தது.
அந்த அழகிய தீவில் மனிதர்களின் நடமாட்டமும்..
மனிதர்களின் வாழ்வாதரமும் தொடங்க..
லைட் தெருவில் ஐரோப்பியர்களும் ..சைன்யமும் குடியேற..
இன்று லெபு தெரு என அழைக்கப்படும் தெருவில் யுரோசியா மக்கள் குடியேற..
பிஷப் தெருவிலும்.. மார்க்கெட் தெருவிலும் மக்கள் குடியேற..
அச்சீன் தெருவில் மலேயா மக்கள் குடியேற..
தமிழக முஸ்லிம் மக்கள் சூலியா தெருவில் பால் காய்ச்ச..
உலகின் முன்னனி நகரங்களில் ஒன்றாக பினாங்கு விளங்கியது.
ஆசியாவில் காலணியர் ஆதிக்கத்தில் வளர்ச்சியடைந்த நகரங்களில்
சிங்கப்பூர், ஹாங்காங், யோகோஹாமாவுக்கு அடுத்த படியாக
பினாங்கு சிறந்து விளங்கியது.
இந்த நகரத்தில் ஏற்றுமதி இறக்குமதி சிறந்து விளங்கியது.
ஏராளமான பணப்பயிர்கள்,ஆயத்த ஆடைகள், சாக்லேட்ஸ், பிஸ்கட்ஸ் என
பினாங்கில் தயாராகும் பொருட்கள் உலகில் விலையானது.
இது மட்டுமல்லாமல் 1970 வாக்கில் எலக்ட்ரானிக்ஸ் உருவான போது
பினாங்கில் உற்பத்தியும் அதே போல ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக்ஸ் என
இன்னும் பல தொழில்களிலும் வளர்ச்சி அடைந்த பூமி.
ஆங்கிலேயர்கள் தடம் பதித்தால் கல்வி இல்லாமல் இருக்குமா?
ஏராளமான கல்விச்சாலைகள். இப்படியே இன்னும் சொல்லலாம்.
200வருடம் பழமையான multicultural city.
இன்று சுற்றுலா வாசிகளின் சொர்க்கபூமி.
அதிக வெப்பமும் இல்லை.. அதிக குளிரும் இல்லை..
அதிக பட்சம் 26.c குறைந்தது 18.c
அதே போல மழை வருடத்திற்கு சராசரியாக 2500mm.
தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி லிட்டில் இந்தியா.
இங்கு தமிழத்தில் இருப்பதுபோல தான் இருக்கும் என்பது உண்மை
அதே போல தைப்பூசம் இங்கே சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இங்கு தமிழ் சங்கம் ஒன்றும் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள் www.penangpage.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக