வியாழன், 31 டிசம்பர், 2009

நாளைய விடியலுக்காக..

உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம் வந்து
உலகமே தலைகீழாக மாறிப்போய்
எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்
என வியக்கும் அளவுக்கு உலகத்தின் நிலை ஆனது.

2008 ஜூலை, ஆகஸ்ட் முதல் ஏற்பட்ட
அமெரிக்க வங்கிகளின் நிலை,
வலுவடைந்து பெரும் சுனாமியை ஏற்படுத்தி உலகத்திற்கு இந்த அளவுக்கு ஒரு அழிவை ஏற்படுத்தியது..
அமெரிக்காவில் பல நகரங்களில்
மக்களின் வாழ்வே மாறியது.
அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தவர்கள்
எல்லாம் காடுகளில் சென்று வசிக்கும் நிலை.

எத்தனையோ முன்னனி நகரங்கள்
'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற
வள்ளுவனின் வாக்கைப்போல
அமைதியாக அடங்கிப்போனது.
இந்த பின்னடைவில் இருந்து இன்னும்
உலகம் எழவில்லை.
எனது நண்பர் ஒருவர் தகவல் தொழில் நுட்ப துறையில் புதியதாக தொழில் தொடங்கி
கையை சுட.. நிறுவனத்தை மூடிய நிலை..
இது நடந்தது சென்னையில் தான்.
அட என இதற்கே வியந்தா எப்படி?
இது போல ஏராள்னமா சம்பவங்களை சொல்லலாம்.
இந்த பொருளாதார தேக்கத்தில்
உலகம் முழுவதும் வேலை இழந்தோர்
எண்ணிக்கை சொல்லி உங்களை பயமுறுத்த விரும்பவில்லை.. இதற்காக பாதிக்கப்பட்டவர்களை,
நஷ்டமடைந்தவர்களை, சிரமப்பட்டவர்களை,
இறைவன் தண்டித்துவிட்டான் என நினைக்காதீர்கள்.
அப்படி சொல்லவும் வேண்டாம்.
ஏனென்றால்,
'காலச்சக்கரத்தை நாமே சுழலவிடுவோம்'
என்ற வேதவரிகளை மறக்கவேண்டாம்.
நம்ம தஞ்சாவூர்பக்கம் தான் சொல்வாங்களே?!
'முப்பது வருசம் வாழ்ந்தவனும் இல்லை
முப்பது வருசம் வீழ்ந்தவனும் இல்லை' என..'

ஆனால் உலகத்தின் நம்பிக்கை சற்றே துளிர்கிறது.
டிஸம்பர் இறுதி வாரத்தில் தொடங்கிய விடுமுறைகள் தொடர்கிறது.
இந்த வருடம் போகட்டும் என...,
பலரும் காத்திருக்கிறார்கள்..
பலரும் புதிய தொழில் தொடங்க,
2010 வரட்டும் என இருக்கிறார்கள்.
எப்படியோ 2009 ஒரு நஷ்டமான வருடமாக இருந்தது
என்பதில் வியப்பில்லை,..
சரி போகட்டும் என உலகம்
உற்சாகத்திற்கு தயாராகி விட்டது.
குடந்தை போன்ற நகரங்களில் கூட
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விளம்பரங்கள்.
மக்கள் நாளைய விடியலுக்கு தயாராகி
ஆட்டம் போட தயாராகி விட்டனர்.

ஆஸ்திரேலியாவின் ஒபேராய் ஹவுஸில் தொடங்கி
ஹாங்காக், ஷங்கைய், சிங்கை, சென்னை ,
துபாய் வழியாக
ஐரோப்பிய நாடுகள் வழியாக
அமெரிக்க நகரங்களை
இந்த புத்தாண்டு செல்ல இருக்கிறது.
காலத்தை குறை சொல்லாமல்
இறைவனை மறக்காமல்
வட்டி இல்லா பொருளாதரத்தை தேடி
இந்த உலகம் சென்று
ஆரோக்யமான காற்றை சுவாசிக்கட்டும்.

'every sunset gives us one day
less to live! but,
every sunrise give us,
one day more to hope!
so, hope for best.
have a lovely day!'

செவ்வாய், 22 டிசம்பர், 2009

அன்புள்ள பிரதமருக்கு

அன்புள்ள பிரதமருக்கு

அன்புடன் எழுதிக்கொண்டது..
நலம் நலமறிய பேராவல்...
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

தாங்கள் அமெரிக்கா சென்ற போது
அங்கே கூறினீர்கள்..
வெளி நாடு வாழ் இந்தியர்கள்
அனைவரும் இந்தியா திரும்ப வேண்டும்.
இன்னும் சொன்னீர்கள்
அறிவுசார்ந்த இந்தியர்கள் இந்தியா வரவேண்டும்.
நீங்கள் வெளிநாடு சென்றதால் இந்தியாவில் பின்னடைவு ஏற்பட்டது ..
இன்னும் சொன்னீர்கள்
உங்களுக்கு இதேபோல பதவிகள் இந்தியாவில் கிடைக்கும் என..
நன்றி .. மன்மோகன் ஜி.. நன்றி..



நாங்கள் அறியாமை காலம் முதல்
இன்று வரை வெளிநாடுகளில் வாழ்ந்து
பழக்கப்பட்டு விட்டோம்.
காலையில் எழுந்து மஸ்கா சிலைஸ் தின்றே எங்களுக்கு பழக்கமாகி விட்டது.
இன்னும் நாங்கள் ஊரில் இருந்தால்
எங்கள் குடும்பங்களில் பிரச்சனையே இருக்காது...??!!
சரி அது போகட்டும்..
நீங்கள் சொன்னீர்கள்
அறிவு சார்ந்த இந்தியர்கள் வரவேண்டும் என...

முதல் பயணம் வந்து ஊர் திரும்பும் போது நிச்சயமும்,
இரண்டாவது பயணத்தில் திருமணத்தை முடித்தும்,
மூன்றாவது பயணத்தில் குழந்தையை பள்ளியில் சேர்த்தோம்,
நான்காவது பயணம் போகும் போது சொன்னார்கள்
பிள்ளை பெரிய மனுசியாகி விட்டாள்...
பின்னர் மாப்பிள்ளை பார்த்து
பண்டிகைக்கு கைலியும் சட்டையும் எடுத்து கொடுத்து..
அப்படியே வழக்கமாகி
வெளி நாடுகளிலேயே வாழ்க்கையை தொலைத்த
எங்களை போன்றவர்களை என்ன செய்ய சொல்றீங்க?

எங்களுக்கு உட்வர்ட்ஸ் வாங்குவதற்கு முன்னால்
கடவுசீட்டு தான் எடுத்து தந்தார்கள்.


அறிவுசார்ந்த மக்களுக்கு மட்டும் அதேபோல பதவியா?
அப்போ எங்க குஞ்சாலிக்கும்,
மூஸா காக்கவுக்கும் ஒரு கப்டீரியா(tea stall) கிடையாதா?



சரி அறிவு சார்ந்த மக்களை கூப்பிடுறீங்க
நாங்களும் சென்னை அல்லது புனே,
அல்லது பெங்களூரு, அல்லது மாதப்பூருக்கு பெட்டிக்கட்ட தயார்.
அதற்கு முன் எங்களுக்கு சில வேண்டுவன இருக்கே..
* லஞ்சம் இல்லாத இந்தியா
* ஜாதி சண்டைகள் இல்லாத இந்தியா
* கூலிப்படைகளின் அச்சுறுத்தல்
* அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள்
* மின்வெட்டு இல்லாத தமிழகம்
என இப்படியே பட்டியல் எங்களிடம் இருக்கு..
இருந்தாலும் நல்ல இந்தியர்களாக
எங்களை இனம் கண்டு
நேர்மையான அரசியல் செய்யவும்,
நல்ல நிர்வாகம் செய்யவும்,
பரந்து விரிந்த இந்த பாரத பூமியிலே,
நீங்கள் விரும்பியவாறு தொழில் செய்யுங்கள்
உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும்
எமது அரசாங்கம் செய்யும் என,
நம்பிக்கையின் மேல் நம்பிக்கை வைத்து
நல்ல தொழில்கள் தொடங்கி,
நிம்மதியாக உற்றர் உறவினர்களோடு,
மனைவி குழந்தைகளோடு,
நிம்மதியாக தாய்பூமியில் வாழுங்கள் என,
அக்கரையில் எங்களை பார்த்து
அக்கறையுடன் அழைத்த
முதல் இந்திய பிரதமரே,
உமது பாசத்திற்கும், அன்பிற்கும்,
புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் சார்பாக 'சல்யூட்'.
என்றும் அன்புடன்..

திங்கள், 7 டிசம்பர், 2009

அவஸ்தைகள் பலவிதம்

தமிழகத்தில் நடைபெறும் அன்றாட
குடும்ப சூழல் ஒரு பார்வை.

அன்றைய காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும்
குறைந்தது 5,6, பிள்ளைகள், பாட்டிகள், பெரியவர்கள்,
அடிக்கடி பார்க்கவும், குசலம் விசாரிக்கவும் உறவுகள்..
எத்தனை எத்தனை ஆனந்தம்..
அட்டகாசமான நினைவுகள்..

அன்றைய காலங்களில் மருமகள்களாக வந்த பெண்களும்
தனது மாமியார் வீட்டின் கெளரவத்தை தூக்கி தலை நிமித்தினார்கள் என்றால் மிகையல்ல.
அன்றைய மருமகள்கள் தனது நாத்தனார்களுக்கு கொடுத்த மரியாதை,
நாத்தனாரிடம் நயந்து கொண்டது,
அதேபோல சின்னமாமியார்களுக்கு மரியாதை
அவர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை கொண்டாடும் விதம் அற்புதம்...அற்புதம்...

அன்றைய பெண்களின் மன நிலை எப்படி இருந்தது என்றால்,
புகுந்த விட்டுக்கு சென்றால் அங்கே உள்ள நல்லது கெட்டது
சுக துக்க நிகழ்சிகளில் பங்கு கொண்டு, நல்லவை கெட்டவை அனைத்தையும்
தனது தோளில் சுமந்து, தனது கணவன் வலதா, இடதா என தடுமாறும்போது,
அவனுக்கு சரியான திசையை சொல்லி,
அந்த குடும்பத்தை சீர்தூக்கி,
இன்னார் வீட்டு பெண் இந்த வீட்டில்
இப்படி வந்து வாழ்கிறது
என பலரிடமும் பெயர் பெற்ற
மருமகள்கள் இருக்கிறார்கள்.
அதேபோல மாமியார் மெச்சும் மருமகளும்
இந்த தமிழகத்தில் இல்லாமல் இல்லை.
கணவன் மனைவியின் அற்புதமான உறவை
அவர்களின் நடைமுறையை கூட
கண்ணதாசன் ஆபாசம் இல்லாமல்
அழகாக ஒரு பாடலில் வர்னித்து இருப்பார்.
எப்படி என பாருங்கள்...

'காலளந்த நடையினிலே
காதலையும் தான் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே தான் மலர்வாள்'

என்ன ஒரு அழகான குடும்ப நடை
கணவன் மனைவி உறவை அழகாக சொல்கிறார்.

இன்றைய காலங்களில் இதுபோல
நடைமுறை தமிழகத்தில் ஒரு சில
குடும்பங்களில் தான் பார்க்கலாம்.
பெரும்பாலும் மருமகள்கள் மாமியார் வீட்டில் குடும்பம் நடத்த செல்வதில்லை.
சில மருமகள்கள் சுக, துக்க நாட்களில்
மட்டும் சும்மா ஒரு விசிட்.
இன்னும் சில மருமகள்களுக்கு
அந்த பக்கமே அலர்ஜி.
இன்னும் சிலர் அட்டகாசம்
நாற்பது நாட்கள் மாமியார் வீட்டில்
குடும்பம் நடத்தியதில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைக்க
என்ன என வினவினேன்.. ஒரு முக்கியமான சேதி பேசவேண்டும்.
நேரில் வந்து பேசனும் ..
என்ன என வினவினேன்..
அவர் சொன்ன சேதி இதான்
மனைவியின் விவகாரம்
மாமியார் வீட்டுக்கு செல்வதில்லை.
இதை கணவர் சொன்னாலும் அவனை மதிப்பதில்லை.
இதை சொல்கிறான் என்பதால் அவன் போன் செய்தாலும் போனை எடுப்பதில்லை..
அட என இதற்கே ஆச்சர்யபட்டால் எப்படி?
இன்னோரு சம்பவம் பாருங்கள்
நான்கு, ஐந்து, ஆண்பிள்ளைகள் உள்ள ஒரு பெரியவீடு
ஆனால், அந்த வீட்டில் எந்த மருமகளும் இல்லை.
இதைவிட ஒரு உண்மை என்னவென்றால்,
அந்த பெண்களுக்கு அறிவுரை சொல்லாமல்
முழு சுதந்திரமும் கொடுப்பது யார்
தெரியுமா?! அந்த பெண்களின் தாய்மார்கள் தான்.
என்னமோ போங்க?!
இந்த விசயத்தை பொறுத்த வரை
பொறுப்பு யாருக்கு வரவேன்டும் என்பது
மருமகளுக்கு மட்டுமல்ல
அந்த பெண்களின் தாய்மார்களுக்கு தான்.
தனது பெண் இன்னார் வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து
பெயரெடுத்து அதைப்பார்த்து உள்ளம் பூரிக்கவேண்டும்..
இல்லயேல் அதுவரை
மீனாட்சி ஆட்சி தான்...
அப்போ??
திருப்பாச்சி
துருப்பிடிச்சிப்போய்டும்...)))))j/k

டிஸம்பர் - 6

டிஸம்பர் - 6 வந்தாலே நம்மிடம்
இறையில்லச் சிந்தனை வந்து
நம்மிடம் ஒரு சோகம்
நம்மை அறியாமல் வந்து சேரும்.
இது சுதந்திர இந்தியாவில் நடந்த
கேவலம் என்றால் மிகையல்ல.
இன்றைய தினத்தில்
ஏராளனமான நமது அமைப்புகள்,
ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும்,
கையெழுத்து வேட்டையும்,
கண்டன போஸ்டர்களும் என
தனது எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.

இதை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை.
இறைவனை தொழக்கூடிய ஆலயங்கள்
இடிப்பதை கண்டிக்காமல் இருக்கமுடியாது.
அதை மீட்கவும் முயற்சிகள் தொடரவேண்டும்...




ஆனால் இங்கே சில சிந்தனைகள் சொல்லவேண்டும்
இறைவனின் இல்லத்திலிருந்து
தினமும் ஐந்து நேரம் இறைவனை வணங்குவதற்காக
அழைப்புகள் வந்து கொண்டே
இருந்தது.. இருக்கிறது..இருக்கும்..
அந்த அழைப்பை காதில் வாங்கி கொள்ளாமல்
எருமைமாட்டின் மேலே
மழை பெய்த மாதிரி சென்றுவிட்டு
இடித்தபின் ஆர்ப்பாட்டங்களுக்கு செல்வது
எந்த விதத்தில் நியாயம்?!
அந்த ஒரு தினத்தில் கூடி
தமது உணர்வை வெளிப்படுத்துவது
எந்த விதத்தில் நியாயம்..?!
எங்கே அல்லாஹ்வின் நல்லடியார்களே
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..
இறை இல்லத்தில் இருந்து வரக்கூடிய அழைப்பை
ஏதோ மோதினாரின் அழைப்பு என கருதாமல்
இறைவனை வணங்க பள்ளிக்கு செல்லுங்கள்
தொழுகையால் இறைஇல்லத்தை அலங்கரியுங்கள்.
'மூமினான ஆண்களுக்கும்
மூமினான பெண்களுக்கும்
குறிக்கப்பட்ட நேரத்தில்
தொழுகை கட்டாய கடமையாகும்.'

வியாழன், 26 நவம்பர், 2009

இயற்கையின் சீற்றம் - நீலகிரி மாவட்டம்.

இயற்கை கண் இமைத்தால் கூட போதும் மனித இனம் துவண்டுவிடுகிறது. சுனாமிகளும், புயல்களும், நில நடுக்கங்களும், சென்ற 10 ஆண்டுகளில் மிக அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. இந்த இடர்களும் உலகமயமாகிவிட்டது என்பதை மறந்து இன்னமும் பொருளாதாரத்தின் உச்சியில் இருக்கும் நாடுகள் இந்த சுழல் மாறுபாட்டை உணர மறுத்து செயல்படாமல் லாப நஷ்ட கணக்கையும், போட்டி மனப்பான்மையுடன் மற்ற நாடுகளை குறை கூறுவதும், நிர்பந்தம் செய்வதும் வருகின்ற சமுதாயதிற்கு நாம் செய்யும் துரோகம் என்பதில் ஐயமில்லை.

பார்க்கும் பொழுதெல்லாம் மனதை கவரும் “கேத்தி பள்ளதாக்கு” இந்த வருட வடகிழக்கு பருவ மழையில் மண் சரிவினால் மக்களுக்கு பெரும் துன்பத்தை தந்துள்ளது. நீலகிரி மாவட்டமே சோகத்திலுள்ளது.

தமிழகத்தில் குறிபிட்ட இடத்தில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை கேத்தியில் பதிவான 820mm என பத்திரிகைகள் கூறுகின்றன. 10 கி.மீ தள்ளியுள்ள உதகை 190mm, குன்னூர் 310mm கோத்தகிரி 270mm, என்ற அளவில் மழை பெய்துள்ளது. தமிழகத்தின் சராசரி வருட மழையளவு சுமார் 950+ mm என்பதை மனதில் கொள்ளவும்.

இயற்கை தென்இந்தியாவிற்கு தந்த பரிசான வெட்டிவேர் இந்த பாதிப்பை கணிசமான அளவிற்கு நிச்சயம் குறைத்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. உலகிலுள்ள அனைத்து மக்களும் இதனை “வெட்டிவேர்” என்ற தமிழ் பெயரில்தான் அழைக்கிறார்கள் என்பது வியப்பளிக்கலாம். உலகில் 100 நாடுகளுக்கு மேல் பல்வேறு காரணங்களுக்கு வெட்டிவேரை பயன்படுத்தினாலும் மண் அரிப்புக்கு நம் தென்இந்திய வெட்டிவேரைத்தான் அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்கு பெருமைதான். இந்த புல்லிற்காக வலையமைப்பை ( http://www.vetiver.org/ )உருவாக்க பொருளுதவி தந்து ஊக்கம் அளிப்பது தாய்லாந்து நாட்டின் மன்னர் குடும்பம். ஆனால் அதனைப் பற்றி நாமே தெரிந்து கொள்ளாமல், பயன்படுத்தாமல், பேரிடர் வரும் போது கஷ்டப்படுவது யார் குற்றம்? அலசி ஆராய்வதை விடுத்து ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தினால் வருங்காலத்திலாவது இழப்புக்கள் தவிர்க்கப்படும்.

சனி, 17 அக்டோபர், 2009

இது ஒரு பொன்மாலை பொழுது





வேலி என்கிற முத்துச்சிப்பி பூங்கா



மலை நாட்டிலே
அழகிய குளிர்ச்சியான ரம்மியமான சூழலில்
கடலும் காயலும் கை குலுக்க
அந்த அழகுக்கு அழகூட்ட தென்னந்தோப்புகள்




மிதக்கும் உணவகம்
இதில் உல்லாச பயணிகளின்
உற்சாகத்திற்கு படகு சவாரிகள்
இடையில் ஓடும் காயலை கடக்க
ஒரு அழகான மரத்தாலான மிதவை பாலம்
கலையுட நிலையம் என்றால் மிகையல்ல..



இங்கே இளனீரிலே
எலுமிச்சை கலந்து கிடைக்கிறது
பருகிப்பாருங்கள்..
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்




அரபிக் கடலோரம்...




சேர நாட்டிலே..
என் உள்ளத்தை கொள்ளைக்கொண்ட
ஒரு அழகிய மகள் இவள் தான்
இவள் பெயரே சங்குமுகம்.






சேர நாட்டின் அழகிய கடற்கரைகள்

ஆயுத பூஜை?!



இந்த படங்களுக்கு
ஒன்னும் எழுத வேண்டியதில்லை
என நினைக்கிறேன்...?!!!



புதன், 7 அக்டோபர், 2009

மழை வருது... மழை வருது....

மழை...
மழை...
இறைவன் தரும் அற்புதம்!
இதோ அந்த மழையின் ஒரு பதிவு..


ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

திருவனந்தபுரம்

சேர நாட்டின் பயணங்கள்

நீண்ட நாளாச்சி மலை நாட்டுக்கு போய்
நம்ம நட்புகளையும் உறவுகளையும் பார்க்கலாம் என ஒரு பயணம்.
நமதூரில் இருந்து புதுக்கோட்டை, மதுரை வழியாக நாகர்கோவில் போய்,
மலை நாட்டின் தலஸ்தானமாகிய திருவனந்தபுரம் செல்லனும்..

மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் சென்றால்,
அங்கே 8ம் நம்பர் வரிசை சென்று நாகர்கோவில் பேருந்து கிடைக்கும். அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லனும்.
கிட்டத்தட்ட 13மணி நேரப்பயணம்

நாம் செல்லும் போது கடைசியாக தமிழக எல்லை
களியக்காவிளை வரும். அதற்கு அப்புறம் பரஸ்ஸல.
இதான் கேரளாவில் தொடக்கத்தில் உள்ள ஊர்.
அப்புறம் ' நெய்யாற்றிங்கர' என போய்
கைமணம்.. பாலராமபுரம் வந்தால்
திருவனந்தபுரம் தான்..
பெயர் தான் சேர நாடாக இருந்தாலும்
அதிகம் வாழ்வது நமது தமிழினம் தான்.



கன்யாகுமரி மக்கள் நிறைய பேர் தொழில் நிமித்தம் காரனமாக புலம் பெயர்ந்துள்ளார்கள்.
தலஸ்தானம் சென்றதும் நம்மை முதலில் வரவேற்பது
தம்பனூர் பேருந்து நிலையம். இதன் எதிரே புகைவண்டி நிலையம். பத்து வருடங்களுக்கு பார்த்த அதே தம்பனூர் தான். எந்த மாற்றமும் இல்லை. அதே சர்க்காரின் பான்ட பஸ்கள்.
பிறக்கும் போதே செங்கொட்டி சிந்தாத்துடன் பிறக்கும் மக்கள்.
தனது தோழர்களை சகாவே என
அழைக்கும் பழக்கம் அவர்களுக்கு.
எனது நண்பரின் இல்லத்திற்கு
ஆட்டோவில் செல்லும்போது
சாலையின் இருபக்கமும் பள்ளம்
தோண்டி இருக்கிறது.
அதை கூறும் ஆட்டோ ஓட்டுனர் எப்படி?
இந்த பக்கம் ஜப்பான்காரன் பள்ளம்,
அந்த பக்கம் அமெரிக்காகாரன் பள்ளம்
நடுவில் கேரளத்தில் சாலைகள் என .. அட பேச்சிலுமா சித்தாந்தம்.?!
திருவனந்தபுரம் மாநகராட்சி வெளி கம்பெனிகளுக்கு
சில ஒப்பந்தங்கள் வழங்கியுள்ளது.




தலஸ்தானம் நிறைய மாற்ற்ம்
பார்க்க நமக்கே சந்தோஷம்.
ஆனால், பெரிய பெரிய கட்டிடங்கள் இல்லை.
அதே போல செலவுகளும் கூடுதல் இல்லை.
திருவனந்தபுரம் பண்பாட்டின் நகரம்.(culture city)
ஆகவே பெரிய கட்டிடங்கள் வர வாய்ப்பு இல்லை.
அவை எல்லாம் கொச்சினுக்கு கொடுத்து விட்டார்கள்.
அமைதியாய் அழகாய் அடக்கமாய்
பசுமையாய் ஒரு நகரம்.

நான் தங்கி இருந்த இடத்தின் பெயர் அட்டகுளங்கர.
இந்த இடத்தைப்பற்றி சொல்லவேன்டுமானால்,
அட்டகுளங்கர முழுதும் நம்ம
தமிழ் மக்கள் இல்லங்கள்.
இதன் பின்னால் இருக்கும் இடம் சாலை. (chalai)
இது முழுக்க நம்ம மக்கள்
தொழில் செய்யம் கடைவீதி.
அதே போல இதன் எதிரே கோட்டைக்ககம்.(east fort)



இது முழுக்க தமிழ் பிரமாண குடும்பங்கள்..
ஆமாங்க ஆச்சர்யம் வேண்டாம்
நான் தமிழகத்தில் கூட
இன்று வரை இவ்வளவு பெரிய
அக்ரஹாரத்தை பார்த்ததில்லை.
அன்று தான் பார்த்தேன்.
அந்த அக்ரஹாரத்தில் ஒரு வீட்டில்
மெஸ் ஒன்று நடக்கிறது.
சேர நாட்டு சிகப்பரிசி இல்லாமல்
நம்ம தஞ்சாவூர் அரிசியில் தமிழக சுவையுடன்
சுத்தமான ஒரு சைவ சாப்பாடு
ஒரு வெட்டு வெட்ட வேண்டுமானால் ஒரு முறை சாப்பிடுங்கள்.

அதே போல 'சாலையில்' ஒரு பஸ் ஸ்டாப் இருக்கிறது.
இதில் இருந்து சுற்றிப்பார்க்க எங்கேயும் செல்லலாம்.
இதன் எதிரே கோட்டைக்ககம் பஸ் ஸ்டாப்.
இதில் இருந்து எங்கேயும் செல்லலாம்.



சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் எனச் சொன்னால்
கோவளம் கடற்கரை, சங்குமுகம் கடற்கரை, வேலி,
மியூசியம், நேப்பியர் மியூசியம், அரண்மனை, என இப்படியே நிறைய இடங்கள்..
திருவனந்தபுரம் அருகே நெய்யார் அணை,
அதன் அருகே பொன்முடி
பொன்முடி நம்ம ஊட்டி மாதிரி மலை வாழிடம்.


குறைந்தது ஒரு 3 நாள் குடும்பத்துடன் குதுகாலிக்க
நல்ல ஊர். நல்ல பருவனிலை. எங்கே போனாலும் தமிழ் தான்.
தொழுகையாளிகளுக்கு பள்ளிகளும் குறைவில்லை.
அதே போல ஷாப்பிங் விலை மலிவு தான்.
பாலராமபுரம் கைத்தறி புடவைகள் அழகு.. அழகு..
மன சந்தோஷ்த்துடன் ஒரு இனிமையான சுற்றுலா..
நாம் சில நாட்கள் பார்த்தாலும்
நம் கண்ணைவிட்டு அகலாத
அந்த பசுமையான நினைவுகளில்
அரபிக்கடலின் அழகிய கடற்கரையும்,
அந்த பசுமையான தென்னந்தோப்புகளும்..

கலையுட நிலையமே..
கதகளி தேசமே..-----

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

காவேரிமங்கை



வேற ஒன்னும் இல்லைங்க!
சமீபத்தில் காவிரி நதி
தனது அழகிய கூந்தலை அவிழ்த்து
தண்ணீரில் நனைத்தபடி ஆனந்த குளியல் போடும்
'பவானி'க்கு போயிருந்தேன்.





அதைத்தான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
இங்கே 'கூடுதுறை பவானி' என்ற ஆறுகள் சங்கமிக்கும் இடம் இருக்கிறது.
அங்கே ஆடி 18ம் பெருக்கு ரொம்ப விமர்சையாக நடக்குமாம்.



உள்ளங்கையில் உலகம்

சமீபத்தில் புத்தகம் ஒன்று எங்கள் ஊர் நூல் நிலையத்தில் கிடைத்தது.
சரி வேற ஒன்றும் கிடைக்கவில்லை. இதை ஒரு புரட்டு புரட்டலாம் என
புரட்டினேன். அடட... என்ன ஒரு அழகான ஒரு புத்தகம்
என்ன ஒரு அழகான மொழிபெயர்ப்பு.
ஆமாங்க இது வேற்று மொழியில் இருந்து
தமிழுக்கு வந்த நூல். இந்த நூலை எழுதியவர்
தனது வாழ்வில் நடந்த அனுபவங்கள்
பிரயாணத்தில் சந்தித்த அனுபவங்கள்
தனது வாழ்வில் சந்தித்த பெரிய மனிதர்கள்
தான் முதன் முதலாக வேலைப் பார்த்த டாடா குழுமம்
இன்னும் கர்னாடகாவின் வாழ்க்கைகள் , கிராமங்கள் என
அனைத்தையும் மிக அழகாக தொகுத்திருக்கிறார்.
வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!



இந்த நூலை எழுதியவர் சாதாரனமானவங்க இல்லை.
இன்பாசிஸ் பவுன்டேஷன் என்னும் அமைப்பை நடத்தி
இந்தியாவின் கிராம்ப்புறங்களில்
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளை திறந்துள்ளார்.
அட என இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படி?
இவங்க வேற யாரும் இல்லை,
இன்பாசிஸ் நாராயனமூர்த்தியின் மனைவி தான்
இவங்க பெயர் சுதாமூர்த்தி.

வியாழன், 10 செப்டம்பர், 2009

மெட்ரோ சிறக்க...

மெட்ரோ சிறக்க
மனதார வாழ்த்துகிறோம்.







புகைப்படங்கள் உதவி கல்ப் நியூஸ்

புதன், 9 செப்டம்பர், 2009

காதலர்களின் சங்கமம்

'பஞ்சு மிட்டாய் அஞ்சி ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்..'

'நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்..'

என்னன்னு கேட்குறீங்களா இதாங்க ரொமான்ஸ்
இப்போ எல்லாம் ரொமான்ஸ் ஒரு fashion
சமீபத்தில் பல ஊர்களில் நடக்கும் சம்பவங்கள்
ஊடகங்களில் நாம் படித்து வருகிறோம்.
இதை விட கொடுமை என்னவென்றால்
நாம் சுற்றுலா செல்லும் இடங்களில்
நேரிலே சில காதல் ஜோடிகளை பார்த்தோம்.
சமீபத்தில் ஒரு மதிய உணவு வேளையில்
தஞ்சை சிவகங்கை பூங்காவுக்கு சென்றபோது
ஏராளனமான ஜோடிகள் தனது காதலனுடன் கடலையில்,
நம்மை பார்த்ததும்
துப்பட்டாக்கள் காதலன் மடியில் முகம் புதைத்தது.

அதே போல புகார் நகர கடற்கரைக்கு சென்ற போது
அட இது என்ன இளங்கோவடிகள் காலமா என சந்தேகம்,
காரனம், பல காதலர்கள் ,
நமது நினைவுக்கு வந்தது
அவர் வர்னித்த கடலாடு காதல் தான்.
அதே போல தரங்கம்பாடி கடற்கரை
அடடா.. இப்படி ஒரு அமைதியான
அழகான ஆர்ப்பாட்டம் இல்லாத கடற்கரை
காதலர்கள் அமைதியாக எந்த வித கூச்சலும் இல்லாமல்
அங்கே கிடக்கும் கட்டுமரங்களில்
உலகை மறந்து கலிங்கத்து பரணியில் வர்னிப்பது போல
தலைவனும் தலைவியும் மனதால் மட்டும் உரையாட..
இதை விட அருகாமையில் மல்லிப்பட்டினம் மனோராவில்
இன்னும் சில காதலர்கள்
அப்படியே கைகோர்த்தபடி
காதலியுடன் மொக்கை போட்டுக்கொண்டு
என்ன அழகாக ஸ்டெப் போட்டு நடந்து செல்கிறார்கள்.
தம் தன தம் தன ஆ..ஆ..ஆ...
கல்யாணி ராகம் தான் போங்க...

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமாரர்க்கு மாமலையும் கடுகாம்
இது அந்தக்காலம்
இப்போ மாற்றிச்சொல்லனும் எப்படி
'பைக்கின் ஹாரன் சத்தம் காதலன் கொடுத்து விட்டால்
துப்பட்டாக்கள் எந்த பஞ்சாயத்தும் பயப்படுவதில்லை'
இதாங்க நிதர்சனமான உண்மை
பெண்ணை பெத்தவங்க
ஆணை பெத்தவங்க
எவ்வளவு கஷ்டப்பட்டு இவங்களை படிக்க வைக்கிறாங்க..
இதுங்க போடுற ஆட்டம் என்ன!
அடிக்கிற கூத்து என்ன?
இந்த இனக்கவர்ச்சி எப்போ போகுமோ?

இதைப்படிக்கும் நட்பு வட்டங்களே
இந்த இனக்கவர்ச்சியில் இருந்து இவர்கள் மீள
நல்ல ஆலோசனை சொல்லுங்கள்.
காலம் கெட்டு கிடப்பதால்
பெண்ணைப்பெத்தவங்க அதை வெளியே அனுப்பி
அது வீட்டுக்கு திரும்ப வரும் வரை படும் அவஸ்தைகளை எழுத முடியாது.

பாய்பிரன்ட் வேனும் என்ற சிந்தனை விட்டு
நல்ல நட்புகளுடன் குடும்பத்தின் கெளரவத்தை உயர்த்த
நல்ல வழித்தடங்களுடன் தங்கள் பாதங்கள் செல்ல
என்றும் வாழ்த்தியவனாக!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஒரு பிரார்த்தனை

இறையின் பெயரால்..

பன்றிக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாவல் பெற
நாயகம்(ஸல்)கற்றுத்தந்த பிரார்த்தனை

நபி(ஸல்)அவர்கள்
'அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி,
வல் ஜூனுனி வல் ஜூ;.தாமி வஸய்யி இல் அஸ்காமி'
என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் ; அனஸ் (ரழி)அவர்கள்
நூல் ; அபுதாவுத்

'யா அல்லாஹ் தொழு நோய், கருங்குஷ்டம், பைத்தியம் மற்றும்
கொடும் நோய்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்'.

புதன், 12 ஆகஸ்ட், 2009

தமிழர் திருமணமும் இனமானமும்

தமிழர் திருமணமும் இனமானமும்

இந்த நூலின் முதற்பதிப்பு 1993

இந்த நூலுக்கு முன்னுரை என்னும் தோரனவாயில் எழுதியிருப்பவர்
கலைஞர் மு.கருனாநிதி

இந்த நூலை எழுதிய ஆசிரியர்
பேராசிரியர் அன்பழகன்

தமிழர்கள் அனைவரும் அவசியம்
படிக்க வேன்டிய ஒரு புத்தகம்
இந்த நூலில் தமிழகத்தின் வரலாறும்
தமிழர்கள் குறித்தும் நிறைய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் தமிழினத்தைப்பற்றியும் பேராசிரியர் அதிகமாக எழுதி இருக்கிறார்.
அந்த நூலில் இருந்து உங்கள் ரசனைக்காக..




'முப்பதாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
தங்களிடையே பேசும்மொழியாக வளர்த்து,
இருபதாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
நாட்டுப்பா செய்யும் நாவினராய் இலக்கியம் வடித்து,
பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
எழுத்து வடிவம் முறையும் கண்டு,
ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
இயல், இசை, நாடகம் என்னும்
முத்தமிழ் வகைகண்டு வளர்த்து,
மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
வரையப்பட்ட ஐந்திற இலக்கணமாம்
தொல்காப்பியத்தையும் பெற்று,
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்ன பிறந்த இணையற்ற வாழ்வியல் விளக்கும் அற நூலாம் திருக்குறளையும் கொண்டு,
அக்காலத்தை ஒட்டிப்பிறந்த
சங்கத்தமிழ்தொகை நூல்களாம்
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கண்டு,
தொடர்ந்து செந்தமிழ் வளர்க்கும் முத்தமிழ் காப்பியமாம் சிலம்பினையும்,
புத்தம் பரப்பும் மணிமேகலையையும் பெற்று; அடுத்து திருமூலர் திருமந்திரத்தையும்,
மணிவாசகர் திருவாசகத்தையும்,
மூவர் தேவாரத்தையும் ஆழ்வார்கள் பாசுரத்தையும்,
திருத்தக்க தேவரையும், கம்பரையும், சேக்கிழாரையும்,கச்சியப்பரையும்,
செயங்கொண்டாரையும், வில்லிப்புத்தூராரையும்,
அருணகிரியாரையும், தாயுமானவரையும்,
வடலூர் வள்ளலாரையும்,
பாரதியாரையும், பாரதிதாசனாரையும்
காலத்தின் கருவூலங்களாகப்பெற்றுள்ள
பெருமைக்குரிய தமிழ் இனத்தாரின் வாழ்வில் தான் திருமணங்கூட தமிழில் நடைபெறவில்லை..?!

இன்னும் பல ஆழமான கருத்துக்கள் சிந்தனைகள்
இந்த நூலை பூம்புகார் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

புதன், 29 ஜூலை, 2009

பத்மனாதபுரம்










ஆசியாவிலே முழுக்க முழுக்க மரத்தால் ஆன
ஒரு அரன்மனை கட்டப்பட்டு இருப்பது இதுவே ஆகும்
இது கன்யாகுமரி மாவட்டம் தக்கலையின் அருகே அமைந்துள்ளது.
இன்றும் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அரன்மனை அருகே சென்றாலே மலையாள வாடை.
மன்னர் மார்த்தான்டவர்மா கட்டியதாம் இது.
அவசியம் நாம் அனைவரும் பார்க்கவேன்டிய ஒரு ஸ்தலம்.
இது போல ஒரு கொட்டாரம் இன்றும் பராமரிப்பது ஆச்சர்யமான ஒன்று.

தரங்கம்பாடி


ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த ஊர்

இன்று எந்த சத்தமும் வேன்டாம் என்று அமைதியாக
சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டும் தனது பெருமையை சொல்ல..


என்ன ஒரு அமைதியான அழகான் கடற்கரை
இதையொட்டியுள்ள டேனிஷ் கோட்டை.




இதோ நீங்களும் கண்டுகளியுங்கள்

காவிரிபூம்பட்டினம்

புகார் கடற்கரை ஒரு பதிவு

நாம் நுழையும்போது நம்மை வரவேற்க..


அழகிய கடல் தீரம்


கண்ணகி சிலை


அன்றைய புகார் நகர கூட்டம்போல
இன்றும் விடுமுறை நாட்களில் மக்கள் அலைமோத..


வியாழன், 11 ஜூன், 2009

இயற்கை அழகி..!


என்னப்பா இதற்கே அசந்தா எப்படி?
அடுத்தது பார்க்க வேன்டாமா?





எங்கே கண்கள் சோம்பலாக இருந்தது போக
இப்போ எப்படி இருக்கு?
ஆமா ஏதோ கண்ல எரிச்சல் என்றாயே எப்படி இருக்கு?




சரி உனக்கும் நேரம் கிடைக்கும் போது
வீன் அலைச்சல் இல்லாமல்
ஒரு வாரம் இல்லை 4 நாள் ஓய்வு எடு
மச்சான் வாழ்க்கையில் ஓய்வும் வேனும்


அப்போதான் நாம் அடுத்த திட்டத்திற்கு
நமது மனமும் உடலும் தயாராகும்...
ஹா..ஹா... வாழ்க வளமுடன்...