புதன், 10 ஜூன், 2009

செஞ்சிலுவை சங்கம்

இன்றைய அவசர உலகில்
பலருக்கும் அவசியமான ஒன்று..
ஏதாவது சிரமங்களில் அவசர உதவிகள்
இந்த உதவிகள் மதம் பார்ப்பதில்லை,
நிறம் பார்ப்பதில்லை,
அவனது இல்லை அவளது தோற்றம் பார்ப்பதில்லை.

உதவிகள் செய்து முடித்த பின் அவர்களின் மனதார நன்றிகள்
இல்லை பிரார்த்தனைகள் அதற்கு ஈடு இனை எதுவும் இல்லை.
இன்னும் சிலபேர் அந்த நன்றிகள் மறவாமல்
தனது வாழ்னாள் முழுவதும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
அரபிய நாடுகளில்
இறைவன் உனக்கு நற்கூலியை தருவானாக! என்பார்கள்.





உலகில் பல நாடுகளில் செயல்படும் ஒரு அமைப்பு
இதன் கிளை நமது ஊரிலும் இருக்கிறது..
சற்றே ஒரு பார்வை பார்ப்போம்.

பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களின் மனதில் சேவை எண்ணத்தை விதைக்க,
ஒவ்வொரு பள்ளி, கல்லூரியில் நூறு மாணவ, மாணவியரை தேர்ந்துடுத்து முறையாக
அவர்களுக்கு முதலுதவி, இடர்ப்பாடு மீட்புப் பயிற்சி, போக்குவரத்து விதிகள்,
இரத்ததானம், கண்தானம், பார்வையற்ற மாணவர்களுக்கு பாடங்களை படித்துக்காட்டுதல்
போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றோம்.





தஞ்சாவூரில் ஒரு ரத்த வங்கியை உருவாக்க முன்வந்தோம்.
மலேசியத் தொழிலதிபர் சிராஜ்தீன் 35 லட்சம் செலவில் கட்டிடம் கட்டித் தந்தார்.
இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஒன்பது லட்சம் மதிப்புள்ள ரத்த வங்கிக்கு
தேவையான சாதனங்கள் நன்கொடையாக கிடைத்தன.
இதைப்போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்களின் நல்ல முயற்சியால்
இரத்தவங்கி சிறப்பாக செயல்படுகிறது.



இரத்த வங்கி சேவையை மேம்படுத்துவது,
ஆம்புலன்ஸ் சேவையை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்துவது,
இரத்ததான திட்டம், எய்ட்ஸ் விழிப்புனர்வுத் திட்டம்,
குழந்தை நலன், மகளிர் நலன், ஊனமுற்றோர் மேம்பாட்டு நலன்..
போன்ற நலத்திட்டங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்லப்போகிறோம்.

சமீபத்தில் தஞ்சாவூர் செஞ்சிலுவை சங்கத்தின் கெளரவச் செயலாளர்
கோவி. ராஜமகேந்திரன் அவர்களிடம் உரையாடிய போது



ரெட்கிராஸ் அமைப்பில் தன்னார்வமிக்க எவரும் உறுப்பினராகச் சேரலாம்.
தனிநபர், வாழ்னாள் உறுப்பினர், புரவலர், துனைப்புரவலராகவும் சேரலாம்.

1 கருத்து:

  1. எனது தந்தையை பற்றிய உங்கள் பதிவை படித்து நெகிழ்ந்தேன்!

    என் தந்தை திரு. ராஜமகேந்திரன் அவர்கள் 14 ஜூலை 2009 அன்று காலமானார்!


    அவரை பற்றிய ஒரு காணொளி:
    http://mounampesummozhi.blogspot.com/2011/01/dedicated-to-my-dad.html

    உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு