வியாழன், 4 ஜூன், 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

சமீபத்தில் நடந்த முடிந்த தேர்தலில்
திமுக கூட்டணியில் வேலூர் தொகுதியில் மட்டும்
ஒரு இடத்தை மட்டும் வாங்கி நின்று யாரும் எதிர்பாராதவிதமாக வெற்றியைப்பெற்ற
அன்பு சகோதரர் ஈமான் பொதுச்செயலாளர்
அண்ணன் முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு இனயம் சார்பாக
மனமார வாழ்த்துகிறோம்.

கேரளாவில் முஸ்லீம் லீக்
அவர்கள் தமது வாக்குகளை
கனிசமாக வைத்துள்ளார்கள்..
அவர்கள் தமது வேட்பாளர்களை
நிறுத்தி வைத்து வெற்றி பெறுகிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் இந்த நிலையா?
இதற்கு என்ன காரனம்?
தன்னார்வ தொண்டு நிறுவனமான த.மு.மு.க.
அரசியல் கட்சியாக மாறியது ஏன்?
இது தமிழக தலைமை சிந்திக்க வேன்டும்?




இது தமிழகத்தில் கட்சி புத்துணர்வு பெற
நல்ல காலம் என்று கூட சொல்லலாம்.
காரனம், காதர்மைதீன் நின்றால் இத்தனை ஓட்டுக்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே?
ஆனால், அப்துல் ரஹ்மானுக்கு கிடைத்தது
என்ன காரனம்?
இள ரத்தம் , புதுமுகம்,
துபாயில் அனைவருடனும் நல்ல பழக்கம்,
பல உயர் அதிகாரிகளை தெரியும்.
மக்களுக்கும் ஒரு நம்பிக்கை.
அதான் ஒரு லட்சத்திற்கு மேல்
வாக்கு வித்தியாசம்..
பல அரசியல்வாதிகளே தினறிய இந்த தேர்தலில் இவருக்கு எப்படி கிடைத்தது?
இந்த மக்களின் நம்பிக்கை வீண்போகக்கூடாது.
இன்னும் கொஞ்சம் ஓவராக சொல்லப்போனால்,
தமிழகத்தில் இருந்து சென்ற எம்.பி.க்களில் மக்களுக்காக பேசக்கூடியவர்கள்
என நாம் பார்த்தோமானால்,
திரு. தொல்.திருமாவளவனையும்,
அப்துல் ரஹ்மானையும் சொல்லலாம்.



இது வைக்கோவும், ஜவாஹிருல்லாவும்
இல்லாத குறையைப்போக்கும்
என்பதில் சந்தேகமில்லை.

அப்துல் ரஹ்மானின் வேலை
பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் இல்லாமல்
தமிழத்தில் பட்டி தொட்டியெங்கும்
அனைத்து ஊர்களிலும் நிர்வாகிகளை தேர்ந்து எடுத்து
கட்சியை வளர்க்க வேன்டும்.
பொன்விழா கண்ட ஒரு அரசியல் கட்சி
அழிவின் பாதையில் இருந்து மீன்டு
மீன்டும் செழித்தோங்க நல்ல பாதைகள்
அமைய வேன்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக