வியாழன், 30 டிசம்பர், 2010

மழைக்காலங்களில்









நாம் புகைப்படத்திற்காக உலாவும் போது
நமது புகைப்பட பெட்டியின் சில பதிவுகள்

வியாழன், 23 செப்டம்பர், 2010

முகமது ரபியின் ....

அன்றைய காலங்களில் வெளி நாட்டு பயணங்கள் என்பது
மிகவும் சிரமமான வேலை.. சிலரால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
அந்த மாதிரி காலங்களில் பயணம் செல்வது என்றால் பம்பாய் செல்லனும்
அங்கே யாராவது ஒரு ஏஜென்டிடம் பணம் கட்டி, பயணத்திற்காக காத்து இருக்கனும்.
அது சில வாரங்களும் ஆகும், சில மாதங்களும் ஆகும்,
இன்னும் சொல்லப்போனால் சிலருக்கு வருடங்கள் கூட ஆகி இருக்கிறது.
இப்போது உள்ளது போல அத்தனை சுலபம் அல்ல..

அது போல பம்பாய் சென்ற நமது மக்கள், முகமதுஅலி சாலையிலும்,
செம்பூரிலும், சீத்தாகேம்பிலும், முசாபர்கானாவிலும் வாழ்ந்தார்கள்,
அது போல மொழி தெரியாத ஒரு மானிலத்தில், ஒரு நகரத்தில் இருந்த இவர்களுக்கு
மிகவும் பரிச்சயமான ஒரு குரல் இன்றுவரை என சொல்லப்போனால் அது முகமதுரபியின் குரல்தான்..

சமீபத்தில் முகமது ரபியின் மறைந்த தினம் சென்றபோது
காலம் சென்ற ரபியின் ஞாபகம் வருகிறது.
அந்த முகம், வழுக்கை தலை, உதட்டில் இருக்கும் சிரிப்பு..
இப்போது உள்ளவர்களுக்கு அவரை தெரிய வாய்ப்புகள் கம்மி.
ஆனால், அன்றைய காலங்களில் அவரது வாய்ஸ்க்கு நல்ல மவுசு இருந்தது..

அன்றைய புராதான மும்பையில் பழைய கட்டிடங்களில் நடுவே,
நெரிசலான சாலைகளில், குறுகலான சந்துகளில் நாம் உலாவரும்போது
எங்கேயோ இருந்து ஒலிக்கும் அந்த ஹிந்துஸ்தானி ஹிந்தி பாடல்கள் வாவ்வ்..

எப்படி மலபார் முஸ்லிம்களுக்கும் பழைய ஹிந்தி பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதோ,
அதுபோல நமது மக்களுக்கும் பழைய பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
அதனால் தான் நமது மக்கள் பலர் இன்னும் ரபியின் பாடல்களை ரசித்துக்கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இதை படிக்கும் நமது மக்களுக்கு அன்றைய நாட்களின் எண்ணங்களை
அசைபோட வைக்கும் என்பதில் ஐயமில்லை. அதுபோல பழைய
பின்டிபஜாரை ஞாபக படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

அன்றைய காலத்தில் நமது இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவர்
பெயர் ஞாபகம் இல்லை... அவர் காஷ்மீர் சென்ற போது
பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்கிறார்..
நீங்கள் முகமதுரபியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என..
அதற்கு அவர் சொன்னார் 'இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கு யுத்தம் தொடங்கும் நேரத்தில்,
முகமதுரபியின் பாடலை ஒலிபரப்பினால், உடனே இரு நாட்டினரும் சொல்வார்களாம்,
இந்த பாடல் முடிந்த பின்பு யுத்தம் தொடங்கலாம் என...))))'
எவ்வளவு பெரிய செய்தி.. இன்றும் பலர் முகமதுரபியின் பாடல்கள் என்றால் போதும்..
பலர் எப்போதும் காரில் ஒலிக்க கேட்டுச் சொல்வார்கள்...
அவரது பல பாடல்கள் புகழ்பெற்ற பாடல்கள்..
'aanese uske....'

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அழகிய பசுமைகள்


அழகான பசுமையான கிராமங்கள்
தஞ்சையின் பசுமைகள்


காலங்கள் மழை காலங்கள்


என்ன அழகான மழை

நொங்கு வாங்கலையா?

நொங்கு திங்க ஆசையா இருக்கா?
ஒரு கோடை கால பயணத்தில்
தஞ்சை ஜில்லாவில் உலா வந்தபோது
எடுத்த புகைப்படம்....


என்ன அழகான கிராமிய சூழலில் நொங்கு சீவுகிறார்கள்?!

அடி நீலகிரி....



திங்கள், 19 ஜூலை, 2010

அவஸ்தைகள் பலவிதம்

'விவேக் ஒரு படத்தில் சொல்வது போல
ஏய் சர்தார்ஜி ஆளில்லா டீக்கடையிலே
யாருக்கடா டீ ஆத்துறே?!
உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
--------------)))))))ha..a..a'


சமீபத்தில் எனது நண்பர் ஒருவருடன்
அலைபேசியில் உரையாடும்போது ஒரு சேதி சொன்னார்.
நீங்கள் எனது அருகாமையில் இருந்து இருந்தால்,
அந்த தகவல் எனக்கு கிடைத்து இருக்கும்,
நீங்கள் இல்லாததால்
எனக்கு சேதி கிடைக்கவில்லை..
அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன் என்றார்.
என்ன வென்றால், எனது நண்பருக்கு மிகவும் முக்கியமான சேதி ஒன்று தெரிந்தது.
ஆனால் அது காலதாமதமாக பதினைந்து தினங்கள் கழித்து தான் தெரிந்தது...
காரனம், அந்த நண்பருக்கு அருகாமையில்
நான் வேலைபார்த்துக்கொண்டு இருக்கும்போது
எந்த தகவலாக இருந்தாலும் உடனே தெரிவித்து விடுவேன்.. அது இரவு நேரங்களாக இருந்தாலும்,

இதைப்போல நமது உலகில் ஏராளனமான நண்பர்கள்
அவர்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்து கொண்டு இருப்பார்கள்,
அவர்கள் நம்மிடம் இருந்து எதையும்
எதிர்பார்க்க மாட்டார்கள்.

உதாரனமாக பத்திரிகை துறையில் பாருங்கள்..
வாரா வாரம், வார இதழ்களை படித்து விட்டு
உடனே அதற்கு
ஏதாவது கருத்துக்கள் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி விடுவார்கள்.
அதே போல இன்னும் சில நேயர்கள்
வானொலி கேட்டு
அதற்கு கடிதம் எழுதுவார்கள்..
இன்னும் சிலர் தாம் படிக்கும் பத்திரிகைக்காக
ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி
அவர்களுடன் உறவுகள் ஏற்படுத்தி
அதில் தமது பணிகளை செய்வார்கள்..
இன்னும் சிலர் தமது நட்பு வட்டத்தை விடாமல்
அடிக்கடி தொலைபேசி அல்லது அலைபேசியில் உறவாடுவார்கள்..

ஆனால், நம்மில் பலர் எதுவுமே செய்யமாட்டார்கள்
ஆனால் அது போன்று செய்பவர்களை கிண்டல் செய்வோம்.. கேலி செய்வோம்.
இவர்களுக்கு வேற வேலை இல்லை.. என...

ஆனால் அவர்கள் அருகாமையில் இல்லாதபோது
அவர்கள் தனது வேலைகளை நிறுத்தும்போது
அவர்களின் அருமை நமக்கு தெரிகிறது..
எனது நண்பர் அலைபேசியில் என்னிடம் ஆதங்கப்பட்டதும் அதான்..
ஆனால் நம்மில் பலரோ அது போன்ற வேலைகளை செய்வதும் இல்லை,
செய்பவர்களை பாராட்டுவதும் இல்லை,
ஆனால், கிண்டல் மட்டும்
ஏராளமாக ,,, தாராளமாக,,

நம்ம வடிவேலு பானியிலே
சொல்லவேண்டும் என்றால்
ஏன்.. ஏன் இந்த கொலை வெறி?
.........)))))))))))ha ha...

இங்கே ஊரிலே பாருங்கள்
முகம் பாராத எத்தனையோ சகோதரர்கள்
தினமும் காலையில் அல்லது மாலை நேரங்களில்
குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்..

இன்னும் சொல்லப்போனால் எனது நண்பர் ஒருவர்
பொதிகை தொலைக்காட்சி பார்த்து விட்டு
அதற்கு கடிதம் எழுதுவார்.
அவர் வாழ்வது வெளி நாட்டில்?

நாம் அந்த வேலைகளை செய்யா விட்டாலும்
அது போன்று செய்பவர்களை
நக்கலும், நையான்டியும் செய்யாமல் இருப்போமே?!

சனி, 19 ஜூன், 2010

கண்களின் சுவையான பதிவுகள்



மேற்கு தொடர்ச்சி மலையில்
சற்றே உலாவிய போது



கண்களின் சுவையான பதிவுகள்

இதோ பருவ மழை தொடங்கும் நேரத்தில்...

கண்களின் சுவையான பதிவுகள்



இதோ பருவ மழை தொடங்கும் நேரத்தில்

வியாழன், 4 மார்ச், 2010

'கதவை திறந்தால் வருவது யாரோ'

அட வெட்கக்கேடே உன் பெயர் தான் சாமியாரா?
என்று காரசாரமான தலைப்பில் ஒரு நாளிதழ்..
அப்படி என்ன தான் நடந்தது என யாரும் யோசிக்க தேவையில்லை.
சன் தொலைக்காட்சியும்
தினகரன் நாளிதழும் வெளியிட்ட செய்திகள்
தமிழகமே பரபரப்பாகி விட்டது.
நேற்று தினகரன் நாளிதழ் எங்கேயும் கிடைக்கவில்லை.

'கதவை திறந்தால் வருவது யாரோ' என்ற
நித்தியானந்த ஸ்வாமிகளும்,
போதையேறிப்போச்சி
புத்திமாறிப்போச்சி என பாடி ஆடிய தமிழ் நடிகையும்,
கொஞ்சிக்குலாவியதை தமிழகமே பார்த்து சிரித்தது என சொல்லலாம்.

இதற்கு முன் இது போல சாமியார்களின் லீலைகளை
தமிழ் உலகம் பார்க்காமல் இல்லை.
நமது நினைவில் வருவது
சங்கராச்சாரியார்,அடுத்து சென்னையில் ஒரு சாமியார்,
அம்மா, மகள் இருவருமே இவரிடம் மயங்கியது, வெளிச்சமானது,
சமீபத்தில் மன்மத குருக்கள், இப்போ சொல்லவேண்டியதில்லை.


33 நாடுகளில் 1200 கிளைகள் வைத்து இருந்தாலும்,
வார இதழ்களில் கட்டுரைகளை பல வாசகர்கள் படித்தாலும்,
சராசரி மனிதன் என்பதை இந்த உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
எந்த சாமியாரும் கடவுள் இல்லை.
கடவுளின் அவதாரமும் இல்லை.


(picture.nithyanandavedictemple.org)
பில்கேட்ஸ் சொன்னார்;
'ஏழையாய் பிறப்பது குற்றமல்ல,
ஏழையாய் வாழ்வது தான் குற்றம் என...'

பலரும் பிழைப்பை தேடி என்ன என்னமோ செய்கிறோம்.
அதில் ஒருவகை தான் போலியான சாமியார்கள்.
இவர்கள் தனது பிழைப்புக்காக நல்ல இடத்தை
தேர்வு செய்து ஆசிரமத்தை அமைக்கிறார்கள்.
நம்ம மக்களுக்கா சொல்லவேண்டும்?!,
இது போன்ற சாமியார்களை ஊக்குவிப்பதே நமது தாய்குலம் தான்.
ஆனால் அவர்களுக்கும் சக மனிதர்களுக்கு உள்ள ஆசைகள் இருக்கு.
முற்றிலும் துறந்தவர்கள் இல்லை என சொல்லலாம்.
காமத்தைப்பற்றி ஒரு தமிழ் கவிஞன் அழகாக எழுதினான்.
ஒரு பாடலில்...
' அது வேதம் சொன்ன குருவை கூட விடுவதில்லையே..?!'
இந்த வரிகள் உண்மை என இப்போதும் கூட உணர்த்துகிறது.

இன்னொரு தமிழ் பாடல் சொல்கிறது.
'பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..?'
இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

துறவறம், துறவற வாழ்க்கை,
இன்றைய காலகட்டங்களில் மேற்கொள்வது
அரிது.. அரிது.... அரிது..
இன்னும் சொல்லப்போனால்,
அப்படி சொல்பவர்களின் படுக்கை அறையில்
இன்னும் கேமரா செல்லவில்லை என சொல்லலாம்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

சாத்தான்குளம் என்றாலே...

சாத்தான்குளம் என்றாலே...
நமது நினைவில் வருவது
நமது நண்பர் ஆசிப் தான்.
சமீபத்தில் அந்த வழியாக சென்றபோது
நமது நண்பரின் ஞாபகத்திற்காக
பேருந்து நிலையத்தில் ஒரு பதிவு.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கலைப்பொருட்கள்





நமது இந்திய பாரம்பர்யத்தில்
ஆழமாக வேரூன்றியது கலை என்றால் மிகையல்ல.
அது போல நமது இந்தியர்களிடம் கலையார்வமும் அதிகம்
பலரும் பல ஊருக்கு பிரயாணங்கள் செல்லும்போது
சில அபூர்வமான பொருட்களை வாங்கி
தனது வீட்டில் அலங்கரிப்பது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் நண்பர் ஒருவர்
ஒரு கலைக்கூடத்துக்கு சென்ற போது
ஒரு சில புகைப்படங்களை நமக்காக அள்ளி வந்தார்.
அவற்றில் சில...





வியாழன், 4 பிப்ரவரி, 2010

யாழ் இசைத்து பாடலாமா?


புன்னை மரச்சோலையிலே
பொன்னளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி
அவர் கன்னல்மொழி பகிர்ந்ததெல்லாம்
நினைவுதானொடி..சகியெ
கனவு தானோடி....



நெடுஞ்சாலை பயணத்தில்
ஒரு அழகான ஏரியை பார்த்த
நமது கண்களின் சுவையை தான் இங்கே ரசிக்கிறீர்கள்.

அதுவும் இது நீர் நிலைகள் நிறைந்து இருக்கும் மாதம்
அழகுக்கு சொல்லவா வேனும்...
அதை விட்டு அகல மனமே இல்லை..




வீரானம் ஏரிக்கு வேட்டைக்கு சென்றபோது
மணிமேகலை யாழ் இசைத்து பாடிய பாடல்
ஞாபகம் வருதா?!!!

என்ன அழகான ஏரி
இதை கொடுத்த இறைவனுக்கே நன்றிகள்!!

திங்கள், 1 பிப்ரவரி, 2010

அழகான சாலைகள்









சேது சமுத்திர திட்டம்
சிங்கள தீவிற்கு ஒரு பாலம் அமைப்போம்
என்ற பாரதியின் கணவு நனவாகுமோ இல்லையோ..
தமிழக கடற்கரை ஓரத்தில் வந்த அழகான சாலைகள்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

அன்று பெய்த மழை



கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
இதோ கலா ரசிகனின் பதிவுகள்
உலகில் இறைவன் தருபவைகளை
ரசிப்பவர்கள் ஏராளம்..
அந்த வகையில் ஒரு ரசனை தான் மழை..
அடாத மழையில் விடாமல் நாம் செய்த பதிவுகள்..





தாராசுரம்





தஞ்சையை ஆண்ட சோழ மண்ணர்களின்
தடங்களில் முக்கியமானது அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள்.
அன்றைய காலத்தில் சோழ தேசத்தின் தலை நகராகிய பழையாறையில்
கட்டப்பட்ட கோவில் ஒன்றை சமீபத்தில் பார்த்த போது
அதன் பதிவுகள் இதோ...





புதன், 27 ஜனவரி, 2010

61வது குடியரசு தினம்

நாட்டின் அதாங்க
நம்ம தாய் திரு நாட்டின்
61வது குடியரசு தினம் கொண்டாடினோம்.
குண்டு துளைக்காத மேடையில் முக்கிய தலைவர்கள் இருந்தனர்.
அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பதால்,
சரி அது போகட்டும்..

இந்த 61வது குடியரசு தினம் முதல்
மக்கள் தங்கள் அலுவல்களை சுலபமாக வழி வகுக்கப்படுமா?
என்பது உங்கள் சிந்தனைக்கு தர விரும்புகிறேன்.
உதாரனமாக..
வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இல்லை.
சரி அதற்காக தனியாக ஒரு ஆள் வருவார் என்றார்கள்.
அவரும் வந்தார்.. கேட்டதற்கு அது வி.ஒ. அலுவலகத்தில் தான் செய்யவேண்டும்
என சொல்லிவிட்டு அவர் போய்ட்டார்,
சரி என அங்கே கேட்டதற்கு இங்கே இல்லை அவரிடம் தான்
கேட்க வேண்டும் என அவர்கள் சொல்ல..
நண்பர் ஒருவரை சந்திக்கும்போது
பேரூராட்சியில் இதற்கு என
விண்ணப்பம் இருக்கு அதை எழுதி கொடுத்தால் போதும்
என சொல்ல அங்கே விரைந்தால்...
(மூச்சி வாங்குதடி முத்துப்பேச்சி...)

அவர்கள் கூலாக...
நாங்கள் இருப்பதை மட்டும் சரிபார்ப்போம்
நீங்கள் புதியதாக பதியவேண்டும் என்றால்
தாலுகா ஆபிஸ் தான் போகனும் என சொல்ல..
இப்படி ஓரளவு விபரம் தெரிந்தவர்களையே அலைக்கழிக்க
ஒன்றும் அறியாத பாமர மக்களை
இந்த அரசு அதிகாரிகள் என்ன பாடுபடுத்துவார்கள்.
அட தேவுடா...

மக்களை மடையர்களாக்க...
இலவச திட்டங்கள்..
வாக்கு வாங்க பணம்..
யாரு இதை பத்தி எல்லாம் கவலை படப்போறா?


சரி இதற்கு தான் இப்படி என்றால்
கடவுச்சீட்டு அலுவலகம் போய்
அது சரி இல்லை
இது சரி இல்லை என திரும்பும் மக்கள்
அதே மாதிரி
பிறப்பு இறப்பு சான்றிதழ்
ஒரு அம்மணிக்கு மாற்று சான்றிதழ் (transfer certificate) வேண்டுமாம்.
எந்த வருசம் முடித்தது என ஞாபகம் இல்லை
காமாட்சி அம்மா டீச்சர் என பெயர் மட்டும் ஞாபகம்
என்னமோ போங்க ஒவ்வொரு வேலைக்கு இது போன்ற
ஏராளனமான லொள்ளுகள்...
ஆனால் கேட்கும் போது அழகாக பதில் சொல்வார்கள்
குடும்ப அட்டை நகல் இருந்தால் போதும் என..
அதை கொண்டு போய் காண்பித்தால்
இதிலே உங்க போட்டோ இல்லையே?
அட புண்ணாக்கு
இதில் என்ன குரூப் போட்டோவா ஒட்ட முடியும்?!
யாராவது ஒரு போட்டோ தானே தர முடியும்?
சரி இது போகுது நம்ம தொலை தொடர்பு இருக்கே?
அங்கே இதை விட நகைச்சுவைகள் கூடுதல்?
கஸ்டமர் சர்வீஸ் என்றால் என்ன என தெரியாத மக்கள்?
என்னமோ போங்க...

61 வது குடியரசு தினம் நகர்கிறது.
இந்தியா ஒளிர்கிறது
கொஞ்சம் நிதானமான நாடு
நாம தான் பொறுமையா இருக்கனும்.
சாரே ஜ்ஹான்சே அச்சா..................

செவ்வாய், 19 ஜனவரி, 2010

அட்டிங்கல்




சேர நாட்டில் பயணம் செய்தபோது
அது ஒரு மாலை நேரம்
அதுவும் பொன் மாலை நேரம்
சாலை வழியே திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பே
அட்டிங்கல் என்ற ஒரு ஊர் உள்ளது.
சரி ஊரைப் பார்க்கலாம் என ஒரு உலா
சின்ன ஊர் தான்.. நமது வழக்கில் சொன்னால் பேரூராட்சி.
அங்கே பேருந்து நிலையம் அருகே ஜும்மா பள்ளி
பின்னர் அப்படியே இரவு உணவு சாப்பிட
கேரளத்தில் மிகவும் சுவையான சிக்கன் வகைகள்





இரவு உணவுக்கு நாங்கள் சொன்னது
புரோட்டா, நெய் பத்தரை (கேரள உணவு)
மலபார் சிக்கன், சிக்கன் 65, ஹாங்காக் சிக்கன்,
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சொல்லும் போதே நாக்கு சப்பு கொட்டுது..


அத்துடன் நண்பருக்காக ஒரு பழச்சாறு ஒன்று.
இரவு நேரத்தில் பழச்சாறு அதிக குளிர் என்பதால்
நான் கொஞ்சம் தான் சுவைத்தேன்..
ஆனால், சுவையோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சனி, 16 ஜனவரி, 2010

பொங்கி வரும் காவிரி



கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா
இருக்கட்டுமே என தான்
இதை போட்டேன்.
ஏய் மாப்ளே என்ன இப்படி பாக்குறே,
நல்லா இருக்கா?

வியாழன், 14 ஜனவரி, 2010

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்பான அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ஒரு வருடம் ஆகிவிட்டது.
என்னமோ இப்போ வந்து வலைப்பதிவு எழுத வந்தமாதிரி இருக்கு.
ஒரு வருடம் போனது தெரியலை..

இனையங்களுக்காக கட்டுரைகள் எழுதுவது வழக்கம்.
அதுபோல நான் எழுதிய கட்டுரை ஒன்றை
எனது நண்பர் சேர நாட்டில் வாழும் 'வசந்த்'
அவர்களுக்கு அனுப்ப அவர் படித்து விட்டு,
இதை நீங்கள் வலைப்பதிவில் எழுதினால்
அனைவரும் படித்து பயன் பெறுவார்களே எனக்கூற..
சரி முயற்சி பண்ணலாம் என
தொடங்கப்பட்டது தான் இந்த வலைப்பதிவு.
'எனது வாழ்க்கைப் பயணங்களில்'
சோழ தேசத்தின் மண்வாசனையுடன், பண்பாட்டுடன்,
இந்த வலைப்பதிவில் எழுதி வருகிறேன்.

எனது நட்பு வட்டங்கள் மட்டுமல்லாது
எனது முகம் தெரியாத எத்தனையோ பேர்
எடுத்து படித்து வருகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இதுவரை 40 நாடுகளில் இருந்து வந்து இருக்கிறீர்கள்.
சரி ஒரு வருடம் ஆகிவிட்டது.
வலைப்பதிவை அழகு படுத்துவோம் என அழகுபடுத்தி
இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்.
இனி வரும் காலங்கள்
இனிதே செல்ல
எல்லாம் வல்ல இறைவனிடம்
பிரார்த்தித்த வண்ணம்
நமது எழுத்து பயணத்தை தொடருவோம்.
என்றும் அன்புடன்