சனி, 2 மே, 2009

மணிமுத்தாறு அருவி

வாழ்க்கைப் பயணங்களில்

நம்மை வாட்டி எடுக்கும் வெயில்
சித்திரை மாதம் சொல்லவா வேன்டும்
உடம்பெல்லாம் வியர்வை
என்ன செய்யலாம்?
நட்பு வட்டங்களுடன் ஒரு ஆலோசனை
ஏதாவது ஒரு அருவிக்கு செல்லலாம் என...
எங்கே செல்வது நெல்லை மாவட்டம் அம்பை பக்கம் தான்.



இந்த மாதிரி கோடையிலும்
தண்ணீர் கொட்டுகிற அருவி
நமக்கு தெரிந்தவரை மணிமுத்தாறு அருவி தான்.
நெல்லை மாவட்டத்தின் கடைகோடியில்
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்
அழகான இயற்கை எழில் சூழலில் அமைந்தது தான்
மணிமுத்தாறு அருவி.
இந்த அருவியின் அழகையும்
அது அமைந்த இடத்தையும் நேரில் பார்த்தால் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.




இந்த அருவிக்கு செல்ல வழி
நெல்லையில் இருந்து கல்லிடைகுறிச்சி சென்று
அங்கிருந்து மணிமுத்தாறு அருவி செல்ல வேன்டும்.
முதலில் நமது கண்ணில் தென்படுவது மணிமுத்தாறு அணை தான்.
அந்த அணையில் இருந்து இடது புறம் செல்லும் சாலையில் சென்று
மலை மேல் சில மைல்கள் சென்றால் பாலத்தின் இடது புறம்
அழகான நீர்வீழ்ச்சி .


இந்த கோடை வெயிலுக்கு அருவியில் குளிக்கும் சுகமே அலாதி தான்.
எவ்வளவு நேரம் குளித்தாலும் தலை துவட்ட மனமே இல்லை.
இருபாலரும் குளிக்க தனித்தனி இடங்கள்.

இந்த குளியலை புகைப்படத்தில் பார்த்தால் தான்
அந்த ஆனந்தம் உங்களுக்கும் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக