புதன், 7 ஜனவரி, 2009

அலைபேசிகளா? இல்லை ....

இன்றைய நவ நாகரீக உலகில்நாம் நமது வாழ்க்கை வசதிக்காக
என்ன என்னவோ விஞ்ஞான வசதிகளைபெற்று இருக்கிறோம்.
அந்த வகையில் சமீப காலமாக கைகளில் தவழ்வது செல்லிடைபேசிகள். இது இல்லாமல் இப்போது யாரும் இல்லை.ஆயிரத்தில் ஒருவரிடம் தான் செல்போன் இல்லை எனலாம். ஆனால், செல்போன் உபயோகிப்பவர்களிடம் எப்போது ஸ்டெப்னியாக,
மற்றொன்று உள்ளது என்பது உண்மை.
செல்போன் தாங்க தப்பா நினைக்காதீங்க.
இன்னும் சிலரிடம் புதுவகையாக உபயோகிக்கிறாங்க,
அதாவது யாரிடம் இவர்களாக பேசமட்டும் ஒரு செல்போன்.
அந்த நம்பரில் யார் அழைத்தாலும் இவர்கள் எடுக்கமாட்டார்கள். அட தேவுடா!

இந்த செல்லிடைபேசி மிகவும் உபயோகமாக உள்ளதுஎன
எந்த ஒரு தரப்பினரையும் தனியாக சொல்லமுடியாது.
அனைத்து தரப்பினருக்கும் நல்ல ஒரு உபயோகமாக இது இருந்து வருகிறது.
ஆனால், இதனால் உள்ள தீமைகளையும்நாம் இங்கே கட்டாயம் சொல்லியே ஆகவேன்டும்.

சில வருடங்களுக்கு முன் அனைத்து ஊடகங்களிலும் வந்த செய்தி தான்.
தனது அப்பாவை அனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்குதனது குடும்பத்துடன் சென்ற பெண் அங்கே ஒரு செல்லிடை பேசி கிடந்து எடுக்க, அதுவே அந்த குடும்பத்துக்கு பின்னாளில் சனியனாக வந்தது.எப்படியென்றால், அந்த பெண் அதை எடுத்து
வீட்டுக்கு கொண்டு வர அதை தொலைத்த நபர் அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ள,
அந்த பெண்ணிடம் பேச, அந்த பெண்ணும் பேச,காலப்போக்கில் காதலாகி
தற்போது அந்த பெண் வீட்டை விட்டெ அவனுடன் ஓடி விட்டாள்.

இதாச்சும் பரவாயில்லை இன்னொரு சம்பவம்,
டெல்லியில் பள்ளியில் படிக்கும் மாணவன் தனது பள்ளித்தோழியுடன்
படுக்கை அறையை பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல்
அதை செல்போன் வழியாக படமெடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்ப
விபரம் அறிந்த மாணவி தற்கொலை.

இன்னும் சொல்லப்போனால் செல்லிடைபேசிகள்
இன்றைய சமூகத்தில் ஆயிரகணக்கான விவகாரத்துக்களுக்கு
காரனம், என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அதான் உண்மை.

இதை உபயோகிக்க பட்டனங்களில் எல்லாம் விதிமுறை எப்படி தெரியுமா?
கணவன் மனைவி ஆளுக்கொரு செல்போன்,
மனைவிக்கு வரும் அழைப்பை கணவன் எடுக்கக்கூடாது.
கணவனுக்கு வரும் அழைப்பை மனைவி எடுக்கக்கூடாது. அட ...

செல்போன் உபயோகிப்பதால் செல்போனிலிருந்து வரும் ரேடியேஷன்,
மைக்ரோவ் ரேடியேஷன், ரேடியோ பிரிகவுன்சி ரேடியேஷன்,
எலக்ட்ரா மேக்னடிக் ரேடியேஷன் என இதுபோல பாதிப்புகளும் இருக்கு.
இதன் பாதிப்புகள் இப்போது தெரியலை.
இன்னும் சில வருடங்களில் மருத்துவம் சொல்லும்.

இது இல்லாமல் நாம் அன்றாடம் ஊடகங்களில் படித்தது.
அதாவது பல பெண்களும் ஆபாச குறுஞ்செய்தி(sms) பெற்று
தனது உறவினர்களிடம் சொல்லிவிவகாரமான செய்திகள்.
இது இல்லாமல் தவறான அழைப்புகள் பெண்களுக்கு வந்து அதனால்,
அவர்கள் படும் இன்னல்கள், சஞ்சலங்கள்,வேதனைகள், மனப்புழுக்கங்கள்.
இன்னும் இப்படியே எழுதிக்கொண்டே போலாம்.
நாம் இறுதியாக எச்சரிக்கையுடன் முடிப்போம்.
அதாவது, செல்லிடைபேசிகளை 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு
வாங்கி கொடுக்கவேன்டாம். வயதுக்கு வந்து திருமணமாகாத பெண்களுக்கும்
செல்போன் கொடுக்க வேன்டாம். செல்போன் உபயோகிக்க தெரியாத
பெண்களுக்கும் செல்போன் வாங்கி கொடுக்கவேன்டாம்.
தமிழகத்தை பொறுத்தவரை சின்ன சின்ன குக்கிராமங்கள் வரை
தொலை தொடர்பு வசதிகள் பெற்றுள்ளது. எங்கே போனாலும் அங்கே எல்லாம்
தொலைபேசி வசதிகள் உள்ளது.சும்மா ஒரு ரூபாய் போட்டு பேசினால் போதும்
அழகாக தகவல் பரிமாறிக் கொள்ளலாம்.

இறுதியாக உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு யோகா மையத்தில்
யோகா பயில வரும் மாணவர்கள் உள்ளே
செய்திதாள், செல்லிடைபேசி, கடிகாரம், கணினி, என எதுவும் கொண்டு வரக்கூடாது.
அட நிம்மதியா இருக்கே...

சப்தங்கள் இல்லாமல் துயில் கொள்வதும்
கிளிக்கூச்சல்களில் நமது பொழுதுகள் விடிவதும் எப்போது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக