வியாழன், 29 ஜனவரி, 2009

நமது குடியரசு சிந்தனைகள்

நமது நாட்டின் குடியரசுதினம்
கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும்
நாமும் அந்த சந்தோசத்தை அடைகிறோம்
என்பதில் ஐயமில்லை.
நமது நாட்டைப்பற்றி சொல்வார்கள்
இந்தியா ஏழ்மையான நாடு
ஆனால் வாழ்வதெல்லாம் பணக்காரர்கள் தான்.
இது சரியான வார்த்தை தான்.
நாம் சென்னை, ஹைதை, மும்பை, தில்லி, பெங்களூரு, போன்ற
பெரு நகரங்களையும் அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் பார்த்தால் தெரியும்.
ஆசியாவின் டெட்ராய்ட் என பெயர் வாங்கியது
நம்ம சென்னை தானே..
இது மட்டுமல்ல..
நமது ஊரிலே பாருங்கள்
எத்தனை செல்லிடைபேசிகளின் கோபுரங்கள்
தகவல் தொடர்பு வசதிக்காக..




இன்னும் நமது இந்தியாவின் வளர்ச்சிக்கு
என்ன என்னமோ சொல்லலாம்.
ஆனாலும், முதல்வன் அர்ஜூன் சொல்வது போல
'இன்னும் காலில் செருப்பு இல்லாமலும்
மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடாமலும்,
வேளை இல்லா திண்டாட்டமும்,
முதிர் கண்ணிகளும், சமூக கொடுமைகளும்,
குடும்ப சூழ் நிலைகளால் பாதிப்புக்கு ஆட்பட்டு
தனது உடலையே தானமாக்கி
'விருந்து சமைக்கும் விறகுகள்' வரை நமது சமூகத்தில் இருக்கிறார்கள்
என்பதை நாம் மறுக்கமுடியாது.





தொழில் துறைகளிலும் அனைத்து வசதிகளிலும் நமது இந்தியா சிறப்பு பெற்று வருகிறது.
ஆனால், நமது தாய் நாடான இந்தியாவிற்கு நாம் என்ன செய்கிறோம்?!.

இதற்காக பெரிய தொழில்துறைகள் தொடங்க
இப்படி கணவு எல்லாம் வேன்டாம்..
நமது இந்திய உற்பத்தி பொருட்களை நாம் வாங்கவேன்டும்.
அவைகளை பயன்படுத்த நாம் பழகி கொள்ளவேன்டும்.
உதாரனமாக, நாம் உபயோகிக்கும் குளியல் சோப், பற்பசை, இதில் இருந்து தொடங்கி சிறுக.. சிறுக.. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவலாம்.
அதிகமான மக்கள் வேலைக்கு அமைந்துள்ள துறை இந்தியாவில் இரன்டு தான்.
ஒன்று அஞ்சலகம்.
இரன்டாவது இந்திய இரயில்வே..





நாம் ஊருக்கு செல்லும் காலங்களில்
இவைகளை பயன்படுத்த முயற்சிக்கவேன்டும்.
அதேபோல நமது பயணங்களில்
புகைவண்டியில் கூட சேரலாம்.
பேருந்துகள் மாதிரி அதிக நெருக்கம் இல்லை.
பயணத்தின் இடையே தேனீர், காபி,
படிப்பதற்கு அன்றைய செய்திதாள்கள்,
கழிவறை வசதி...குடும்பத்தோடு பிரயாணம் செய்ய நல்ல வசதி..




அதேபோல, அஞ்சலங்களில் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றது,
அதே போல அஞ்சலக அடையாள அட்டை,
சமீபத்தில் கூட தங்ககாசுகள் விற்பனை அறிமுகபடுத்தினார்கள்.
இன்னும் என்ன என்னமோ சொல்லலாம்.



நாம பரீட்சை எழுதும் போதே
பள்ளிக்கூட நாட்களில் சொல்லிவிட்டார்கள்
என்ன ஞாபகம் இருக்கா?! 'சுருக்குக' என..
அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேனி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே?!'

திங்கள், 26 ஜனவரி, 2009

இனையவழி உறவுகள்

எங்கள் குடும்பத்தை இங்கே சொல்லவேன்டுமானால்
உங்கள் அனைவரின் கண்திருஷ்டியும் வந்துவிடும்.
ஆமாங்க இனைய உலகில் எங்ககுடும்பம் மிகப்பெரியகுடும்பம்.
நாங்கள் எல்லாம் தமிழகத்தில் மிகப்பிரபலமான ஒரு இனையத்தில்
இனைந்து, இனையம் வழியே ஒரு குவலய குடும்பமாக
வாழ்ந்து வந்தோம். அந்த குடும்பத்தில் நான் இனைந்தது 2001 முதல்.
அன்று முதல் எங்கள் குடும்ப உறவுகளில் பாசமுள்ளவனாக
அதைப்போல எங்கள் குடும்பத்திலும் அனைத்து உறவுகளிலும்
பாசப்பறவைகளாக வாழ்ந்து...சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்.
எங்களுக்கு அலுவலகத்திலோ அல்லது வாழ்விலோ.
ஏதாவது சிரமங்கள் இருந்தால் கஷ்டங்கள் இருந்தால்
அதை அனைத்தையும் போக்கும் சருமரோக நிவாரனி தான் எங்கள் மன்றம்.




அந்த மன்றம் வழியே தான் நாங்கள் உறவாடுவோம்.
எங்க தலைவர் PMKR கூட ஒருமுறை சொன்னார்
அன்வர் நான் உதட்டளவில் சந்தோசமாக இருந்தாலும்
உள்ளத்தளவில் சற்றே தளர்ந்து இருக்கிறேன்.
எங்கள் மன்றத்தில் General,Ladies Corner,Cinema & Music,
Jokes,Kitchen,Literature,என பல பக்கங்கள் இருந்தது.

நாங்கள் அனைவரும் தினமும் வந்து
உரையாடுவோம். எங்கள் குடும்ப உறுப்பினர்கள்
அனைவரையும் சொல்கிறேன். யாரும் சொந்தப்பெயரில்
வந்தது கிடையாது.

Pmkr,Kads,Nachi,Bkris,Veeran,
Mkp,JK,Mirasu,Yash,Girivasan,
SRI,Madhumitha,Buffy,Thamizhan,
Swetha,Aarem,Aarvi,Yedhiri,Vineetha,
Flavor,Drkrish,Confused,Veeran,Arun,Selvi,
SV,Zaphia,Pranith4,Kgr,Malli,Gheetha,Malar,
Niamat,Zephyr,Saint,Erramnaidu,Tnelango,
Ketki,CM,Icecream,Ganesh_th,Ban,Sri_kirtana,
Rsury,Komban,Nomad,Sunny,Shreya,Roshank,Preety,Prerna,
Shruthyponnu,Suresh,Yahu,Darkwish,Mukil..
ம்ம்ம்ம்.. மூச்சு வாங்குது...

இதில் யார் பேரையும் விடப்பட்டு இருந்தால்
இதை படிக்கும் குடும்ப நண்பர்கள் தெரியபடுத்தலாம்.
அப்போது இதுபோல தமிழ் எல்லாம் வந்தது கிடையாது.
ஆகையால், நாங்கள் தமிங்கிலீஷ் ல தான் எழுதுவோம்.




எங்கள் மன்றத்தில் தினமும் குதுகாலம் தான்
அதிலும் பாட்டுக்குப்பாட்டு
ரொம்ப சந்தோசமாக பாடி திரிந்தோம்.

அதைபோல சமையல் பக்கம்
தோசை சுடுவது எப்படி என முதல்,
வத்தல்குழம்பு, வட்லப்பம் வரை நாங்கள் சமைத்ததுண்டு.
அதைப்போல நகைச்சுவை, இலக்கியம்,
எங்களில் எல்லோருக்கும் கதையும், கவிதையும் வரும்.
இதில் இன்னும் சொல்லவேன்டுமானால்,
பஞ்சகல்யானி என்று ஒரு பக்கம் ஆரம்பிப்போம்.
அதில் நாங்க அடித்த அரட்டைகள் மறக்கமுடியாது.





அப்போது நாங்கள் வந்தது எல்லாம்,
சிங்கை, மலேசியா, இந்தியா, மத்தியகிழக்கு நாடுகள்,
ஐரோப்பிய ராஜ்யங்கள் இது அல்லாது அமெரிக்காவில் இருந்தும்.
இப்போது கிட்டத்தட்ட மூன்று, நான்கு வருசங்கள் ஆச்சி.
எல்லோரும் எங்கே போனாங்க?! என்று எங்களுக்கு தெரியாது.
எங்க உறுப்பினர் எங்கே என தேடாமல்,
வெத்திலையிலே மை போட்டு பார்த்ததில்,
அதிகமாக எங்க மக்கள் வசிப்பது
சிகாகோவில் தான் என தெரியவந்தது.
ஒரு சிலரை நேரில் பார்த்து இருக்கிறேன்.
ஒரு சிலர் வீட்டு சுபகாரியங்களில் சென்று வந்து இருக்கிறேன்.

ஒரு சிலர் அவர்கள் வீட்டு விருந்துக்கும் அழைத்ததுன்டு
ஒரு தடவை துபாயில் சந்திக்க முயற்சி செய்து
அனைவரும் பார்த்ததுன்டு.

எங்கே இருந்தாலும் சிஸ்மக்கள் சிஸ்மக்கள் தான்

' பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே..'

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

பனிவிழும் பாலைவனத்திலே

ஒரு அதிசயமான உண்மை
சொன்னால் நம்ப மாட்டீர்கள்
ஆமாம் அப்படியான உண்மை
அமீரக நகரங்களில் ஒன்றான
ராஸ் அல் கைமாவில் இருந்து
25கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பிரதேசத்தில்
சென்ற வெள்ளி இரவு எத்தனை டிகிரி தெரியுமா?
(-3.0) ஹா..ஹா....



புகைப்படங்கள் பார்த்தால்
இது என்ன காஷ்மீரா என கேட்கத்தோனும்.




பனி சறுக்கு விளையாட்டுக்கள்
இங்கு தொடங்கினாலும் ஆச்சர்யமில்லை.

இதோ உங்களுக்காக புகைப்படங்கள்
புகைப்படங்கள் உதவி : கல்ப் நியூஸ்







இறைவனின் நாட்டம்
அவனுக்கு எல்லாமே எளிது

வியாழன், 22 ஜனவரி, 2009

நட்பு வட்டங்கள்

முஸ்தபா..முஸ்தபா..டோன்ட் ஒர்ரீ முஸ்தபா... என்ற பாடல்
தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் தமிழர்கள் வாழும் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது,
இந்த பாடல் சொன்னது என்ன? மூழ்காத ஷிப்பே பிரட்ஸ்ஷிப் தான் என...
ஆனால், இன்று உள்ள காலகட்டங்களில் அப்படி பாடமுடியுமா என்றால் ?
சற்றே நமக்கு ஏற்படுவது சங்கோஜம் தான். நட்புகள் நம்மிடம் உள்ளது பலவகை.
ஒரு தெருவில் கட்டிப்புரன்ட புழுதி தோழர்கள்,
பள்ளியில் ஒரு சேர படித்த நண்பர்கள்,
கல்லூரி சாலையில் பயனித்த நண்பர்கள்,
அலுவல் நிமித்தமாக சங்கமிக்கும் நண்பர்கள்,
இவையல்லாமல் இலக்கியம், சங்கங்கள், சுற்றுலா என மட்டுமல்லாமல்,
நமது வாழ்வில் உயர கை கொடுக்கும் உற்ற தோழர்கள் என,
நாம் மிகப்பெரிய பட்டியலே போடலாம். ஆனால், இவைகளில் தலையாய
நட்புவட்டம் யார்? நமது புழுதி தோழர்கள் தான்.




அன்றும் இன்றும் நமக்கு என்றும்
உன்னத நட்பு இவர்களிடம். ஆனால், இன்று இந்த நட்புகள் ஏன் எனத்தெரியவில்லை..
ஒரு சேர அமர்ந்து படித்து, ஒரு தட்டில் அமர்ந்து சாப்பிட்டு,
ஒரு கூட்டமாக சுற்றுலா சென்ற காலமெல்லாம் மறந்து,
இன்று வட்டத்திற்குள்ளே வந்தது என்ன தெரியுமா? என்னமோ ஈகோவாம்.
என்ன புன்னாக்கோ? எங்கேயோ போற மாரியாத்தா ஏன் மேலே வந்து
ஏறிட்டு போறாங்கிற மாதிரி,





அடிக்கடி உறவுகளில் விரிசல்கள்,
அதுவும் எப்படி? அவனுக்கு நாம எப்படி போன் அடிக்கிறது, அவன் அடிக்கட்டுமே..?
நட்பில் கூட கெளரவமா? அட தேவுடா? இதில் இன்னும் குறைகள் வேறு?
நம்ம பெண்களை போல நீ என்னிடம் சொல்லவில்லை ? நீ என்னிடம் கேட்கவில்லை என? அட நட்பின் மறுபக்கம் பாருங்கள் ஒரு பொட்டலம் கடலை வாங்கி பிரித்து தின்றோம்.
நம்ம ஊரு பாலத்தடியில் கொட்டும் பனியிலும் அமர்ந்து பேசினோம்.
ஒரு சேர குளிக்க சென்று ஒரு குழுவினராக சைக்கிளில் உலா வந்து,
ஒன்றாக ஊரிலே அடிக்கிற வெயிலை எல்லாம் தலையிலே வாங்கி,
ஒன்னுக்கும் உதவாத உதவாக்கரைகள் என திட்டு வாங்கியது எல்லாம் மறந்துட்டோமா?




இன்னைக்கு நமக்கு என்ன? வந்துச்சி? கல்யாணம் தானே பண்ணியிருக்கோம்.
பூ முடிச்சி, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, அதானே...,
இல்லை கவிதை நடையில் சொன்னால்,
சின்ன நெற்றியில் சந்தனமிட்டுக்கொண்டு
பின்னலிடாத ஈரக்கூந்தலோடு..
பட்டு சரசரக்க..
நாம் கூப்பிடும் போதெல்லாம் அலங்கமலங்க.. பதறிய படி ஒரு பூச்சரம்..
அது இருக்கட்டுமே... யாரு வேண்டாம்னு சொன்னது?
நமக்கு நட்பும் வேனும்னு தான் சொல்றோம்.
இந்த ஊரிலே வேலைதான் முக்கியம் நேரம் கிடைப்பது அரிது தான் பிரச்சனையில்லை நேரம் கிடைக்கும் போது ஒரு போன் ஹாய் நல்லா இருக்கியா?
வாரம் ஒரு முறை இல்லை மாதத்தில் ஏதாவது ஒரு முறை நட்பை வளர்க்கலாமா?



இறைவன் நமக்கு கொடுத்த வரம் என்னங்க? நல்ல நட்புகள்..
அது என்றும் நல்ல உறவுகளாக நம்மிடம் இருக்கனும்..
நட்பு என்றால் சாதாரனம் அல்லங்க.. அது ஸ்னேகிதம்
அதுவும் எப்படி வெல்லம் போட்ட ஸ்னேகிதம்..
எங்கே ஒரு சந்தோசமாக நட்பு வட்டத்திற்கு போன் அடிங்க...

செவ்வாய், 13 ஜனவரி, 2009

காடு வெளஞ்சென்ன மச்சான்?

காடு வெளஞ்சென்ன மச்சான்
நம்ம கையும் காலும் தானே மிச்சம்
என பட்டுக்கோட்டையாரின் சிந்தனைகள்
இன்றும் நமது செவிகளில் ரீங்காரமிடும்போடு
காலை முதல் அந்தி வரை வயக்காடுகளில் பாடுபடும்
அந்த உழவர் பெருமக்களை நினைக்காமலில்லை.





தமிழகத்தில் பொங்கல் திருநாளை
உழவர் திருனாளாக நினைத்து நாம் கொண்டாடும்போது
அந்த உழவும் விவசாயத்தொழிலும்
அதற்கு அடிப்படையாக உள்ள வயல்வெளிகள் மறைவது
நமது மனதிற்கு வேதனையளிக்காமல் இல்லை.



எங்கள் பகுதியை இன்று அல்ல
' சங்ககாலம் முதலே சோழனாடு சோறுடைத்த நாடு'
என்ற பெருமையை தக்கவைத்துள்ளோம்.
ஆனால் சங்ககாலம் தொட்டே நம்முடன் தொற்றி வந்த இந்த விவசாயம்
கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு மறைந்து விடுமோ,
என்ற அச்சம் நம்மை விட்டு அகலாமல் இல்லை.
காரனம், பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தின் எந்த நகருக்கு
பயணம் செய்தாலும் சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு
பச்சைபசேல் பின் தொடரும். ஆனால், இன்றோ விவசாயத்தை கொன்றதன்
அடையாளமாக நடுகல் நடப்பட்டு வீட்டுமனைகளாக இருப்பதைக்கானலாம்.
அதே போல பல இடங்களில்
விவசாய நிலங்களில் தென்னம்பிள்ளைகள்
நடப்பட்டு அவை தோப்பாக மாறுவதையும் பார்க்கிறோம்.




ஆனால், தமிழக அரசியல் சாசனம் என்ன சொல்கிறது?
விளை நிலத்தை வீட்டுமனையாக மாற்றவேன்டும் என்றால்
அந்த நிலத்தில் சில ஆண்டுகளாக, தொடர்ந்து விவசாயம் நடைபெறவில்லை
என்பதற்கான சான்று முக்கியம்.
இதெல்லாம் இப்போ யாரு பார்க்குறா?
நவீன உலகம் வந்துடுச்சி? கிராமங்களில் உள்ள இளைஞர்களிடமும், இளசுகளிடமும்
நவ நாகரீக மோகம் வந்துடுச்சி. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம், கனினி மோகம், சினிமாக்களின் தாக்கம், இவை தான் விவசாய தொழிலை பாதிக்கிறது.
கிராமங்களை விட்டு வெளியேறும் விவசாய தொழிளார்கள் ஏராளம்.

திங்கள், 12 ஜனவரி, 2009

சுவையான பிரியானி

நட்பு வட்டங்கள் சந்திப்பதும்
அவர்கள் அரட்டை அடிப்பதும்
உலகில் புதிதல்ல. அந்த வகையில்
எங்கள் நட்பு வட்டங்கள் சென்ற புத்தாண்டு தினத்திற்கு
கூடலாம் என முடிவெடுத்து அனைவரும் ஷார்ஜாவில் உள்ள
எங்கள் நண்பர் இல்லத்தில் சந்தித்தோம்.

இந்த சந்திப்பில் எங்கள் நண்பர்
ஒருவரை அழைத்து அரபியர் வீடுகளில் செய்வது போல
நல்ல சுவையாக மசாலா கூடுதலாக இல்லாமல்
கம கம என நறுமணம் வர
எவ்வளவு தின்னாலும் திகட்டாத
மட்டன் பிரியானி செய்து





ஒரு வெட்டு வெட்டியதை தான்
இங்கே சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
ஏய் மக்கா சும்மா கண்ணு போடாதே
ஏதோ ஆசைப்பட்டு குழந்தை-பிள்ளைகள் சாப்பிடுறோம்.





அன்று உணவுக்காக தயார் செய்தது
பிரியானி தக்காளி சட்னி போல ஒன்று
அது கூட பகுதுர்னி...
பிரியானியின் நறுமணத்தை
நாங்கள் கூடத்தில் அமர்ந்து இருந்தபோது
நுகர்ந்த எனது நண்பர் வெற்றியின் சின்னத்தை
புன்னகையோடு சொல்கிறார் பாருங்கள்




சோறுன்னா சட்டி தின்போம்
சொன்ன பேச்சி கேட்க மாட்டோம்
ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடியற்காலம் முழிக்க மாட்டோம்
இளவட்டம் இளவட்டம் தான் ...ஹேய்ய்..

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

பயணக்கட்டுரைகள்

சலாலாஹ்
இது மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமானில் உள்ளது.
நமது பாலைவன நகரங்கள் போல இல்லாமல், இது முற்றிலும் மாறுபட்டு
பசுமை போர்த்திய மலைகளுடன் இயற்கை எழில் கொஞ்ச,
தென்னையும்- வாழையும், இன்னும் பல கனிவர்க்கங்களும் பூத்து குலுங்க
அழகிய வனாந்தரமாக காட்சியளிக்கும் இந்த புனிதபூமியை பார்த்தவர்களால்
எளிதில் மறக்க முடியாது. என்ன புனித பூமியா இதானே உங்கள் கேள்வி?
ஆமாங்க இது புனித பூமி தான். நாம் நினைப்பது போல இது சுற்றுலா ஸ்தலம்
மட்டும் இல்லை. இஸ்லாமிய வரலாற்றில் வரும் பலரும் வந்த இடம்.
இது இன்றைய சலாலாஹ் நகர் இல்லை. பண்டைக்கால முதல் இந்த நகர் உலகில் சிறப்ப்புற்று இருக்கிறது. இது என்னோட கருத்து என நினைக்காதீர்கள் இதற்கான சான்றுகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். பண்டைய சேர நாட்டில் ஆட்சி செய்த
சேரமான் பெருமாள் என்ற மண்ணர் ஒரு முறை இரவு நேரத்தில் வெளிய உலாவி கொண்டிருக்கையில் ஒரு அற்புதமான காட்சியை காண்கிறார். என்ன வென்றால்,







நிலவு இரன்டாக பிளந்து மீன்டும் மூடும் காட்சி. இதை பார்த்ததும் அவருக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. அப்போதே இது சம்பந்தமான விசாரனையை தொடங்குகிறார். அதன் விபரம் அவருக்கு தெரிவிக்கின்றனர். அதாவது, அரபு தேசத்தில் முஹம்மது(ஸல்) என ஒருவர் இருக்கிறார். அவர் இறைவனின் தூதராம். அவர் தான் இந்த அற்புதத்தை செய்து இருக்கிறார் என சொல்ல, அவர் சேர தேசத்தில் இருந்து புறப்பட்டு பெருமானாரை சந்தித்து, அவரு இஸ்லாத்தை தழுவியதாக கேள்விபட்டு இருக்கிறோம். அவரின் அடக்கஸ்தலம் இருப்பது சலாலாஹ்வில் தான். அப்போ கிட்டத்தட்ட 1500வருடங்களுக்கு முந்திய நகரம். இரன்டாவதாக இங்கு நபி இம்ரான் அடக்கஸ்தலம் இருக்கிறது. நபி இம்ரான் யார் தெரியுமா? மர்யம் (அலை) அவர்களின் தகப்பனார். ஈஸா நபியின் பாட்டனார்.
கிறிஸ்தவர்கள் சொல்வதை போல சொன்னால், இயேசு நாதரின் பாட்டனார்.
அப்போ இது எந்த காலத்து நகரம். அதே போல இங்கு அயூப் நபியின் அடக்கஸ்தலமும் இருக்கிறது. அயுப் நபியா ஆச்சர்யம் வேன்டாம். உண்மை தான்.
அப்போ இது எந்த காலத்து நகரம் என .. யோசிக்க வேன்டியது தான்.


அதே போல இங்கே அல் பலீத் என ஒரு நகர் உள்ளது,
இந்த நகர் தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பில் உள்ளது.
இங்கே பார்வையாளர்கள் அனுமதி உள்ளது. இந்த நகர் அதாவது 4ம் நூற்றான்டு முதல் பத்தாம் நூற்றாண்டுவரை மக்கள் வாழ்ந்ததாக செப்பேடுகள் சொல்கிறது.
இப்போது சலாலாஹ்வை பார்ப்போம். நாம் துபாயில் இருந்து தரை மார்க்கமாக
ஹட்டா வழியாக சென்று அங்கிருந்து மஸ்கட் சாலையை பிடித்து..
செல்லும்போது நிஸ்வா- சலாலாஹ் சாலை தனியாக பிரியும்.
அதன் பின்னர் நேராக ஒரே சாலை தான்.
ஹட்டா- நிஸ்வா- சலாலாஹ் - ஆதம்- தும்ரியத்- சலாலாஹ்.
கிட்டத்தட்ட 15மணி நேரம் பயணம். அதாவது சராசரி வேகத்தில் செல்வோமானால், இன்னும் சிலர் வேகமாக கூட செல்வதுன்டு. விசா இங்கேயே வாங்கி செல்வது நல்லது. அதே போல போகும் வழியில் அடிக்கடி கடைகளோ, பெட்ரோலோ கிடைப்பதில்லை.
சர்வ சாதாரனமாக 150 கி.மீ. அல்லது 200 கி,மீ தான்.
அதனால் கிடைக்கும் போது நமக்கும் வண்டிக்கும் தீனி போடுவது நல்லது.



அதே போல சாலையின் இருபக்கமும் பாலைவனம் தான்.
எங்கு பார்த்தாலும் சுடுமணல் தான். (காடு பொட்டல் காடு...)
ஆகையால், நாம் இங்கே பார்ப்பது போல எங்கேயும் மக்களை பார்க்கமுடியாது.
அதே போல கடும் வேகமாக மணல்காற்று அங்கு வீசுவதன்டு.(sand dunes) எனவே, வாகனத்தில் செல்லும் போது அதை அனுசரித்து செல்வது நல்லது.
சலாலாஹ்விற்கு செல்ல சற்று தைரியமும் வேன்டுமென்றால் மிகையல்ல.
சரி இனி சலாலாஹ்வை பார்ப்போம். இவ்வளவு நேரம் அலுத்து நாம் பயணம் செய்த பலன் சலாலாஹ் நெருங்க 30 கி.மீ இருக்கும் போது, அதன் மாற்றம் தெரிகிறது. வெறும் மலைகளில் பசுமை, ஊட்டி மலை ஏறும்போது உள்ளது போல வழியோர காட்சிகள் பருவனிலைகளில் மாற்றம், வாவ்வ்வ்வ் சற்றே நாம் உஷாராகி கண்கள் குளிர்ச்சியுடன்


நகரில் பயனிக்க அழகான மலையில் இருந்து இறங்கி சாலைகளில் அழகு மற்றும் பூத்துக்குலுங்கும் பூக்களுடன் நமது மனதில் சந்தோசத்துடன் .. முதலில் நமது இடதுபுறம் வரவேற்பது லூலு..ஹா..ஹா.. அங்கேயும் LuLu Hypermarket இருக்கு.
அதன் சிக்னலில் இருந்து வலது பக்கம் போனால் 23rd july street.
இங்கே தான் நாம் தங்கனும். நாம் தங்குவதற்கு இங்கே லாட்ஜ் கிடையாது.
எங்கே போனாலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் fully furnished flats.
ஒரு நாள் தங்குவதற்கு அதிகமில்லை 15 அல்லது 20 ரியால். oman riyals.
நல்ல வசதியாக டபுள் பெட்ரூம் + ஹால். எல்லா வசதிகளுடன்.
சலாலாஹ்வில் ஜாஸ்தி ஜனக்கூட்டம் இல்லை அதிக நெரிசல்கள் இல்லை.

பல உணவகங்களும் இரவு நேர வியாபாரம் மட்டும்.
சாலைகள் நேர்த்தியாக இருக்கிறது. சாலைகளில் எங்கும் U TURN கிடையாது.
எங்கும் அமைதி எங்கும் நிசப்தம் அந்த மக்களிடம் நமது வாழ்க்கை போல
ஒரு பரபரப்பான வாழ்க்கையை பார்க்க முடியவில்லை. சுகூன்...... சுகூன்.....
எதிலும் அவர்களிடம் ஒரு நிதானம். பொறுமைக்கு உதாரனமாக நம்ம பெண்கள்
அயூப் நபியை சொல்வார்கள். அந்த பொறுமையை அவர்களிடம் நாம் உணரமுடிகிறது.




ஒரு வேளை அவர்கள் வாழ்ந்த பூமி என்பதால் என்னவோ?!!
சலாலாஹ்வில் ஜூலை ஆகஸ்ட் மாதம் அரபு நாட்டு வெயில் இல்லை.
கூடுதலாக சொல்ல வேன்டுமானால் 24 , 25 டிகிரி தான்.
அடிக்கடி மழை பெய்வதுன்டு. ஒரு வீதி வழியே இந்தக்கடைசியில் இருந்து
அந்தக்கடைசி வழியே கேரளாவை நினைவு படுத்துவது போல
இளனீர் மட்டும் வாழை பழங்கள் விற்கும் கடைகள். அதே போல அந்த பகுதி
கடற்கரையை பார்த்தால் ஏதோ கோவாளம் கடற்கரைக்கு போனது மாதிரி இருக்கிறது. காரனம், கடற்கரையை தென்னந்தோப்புகள் சூழ்ந்துள்ளது. சாலையின் இருபக்கமும்
வாழை தோப்புகள் அதன் இடையிடையே வீடுகள்... வீதிகள் நம்ம தமிழகத்தில் இருப்பது போல நினைவு, பார்க்க வேன்டிய இடங்கள் அங்கெ சென்றாலே நமக்கு கிடைத்து விடும். சில நீரூற்றுகளும் இருக்கு. அழகிய பூங்காங்கள், கடற்கரைகள், விலைவாசி ஜாஸ்தி இல்லை. அங்கே தமிழ் உண்வு வேன்டுமா? இருக்கவே இருக்கு அன்னபூர்னா. இது இருப்பது (al safsaf restaurant local name) இது இல்லாமல் வேறு ஒரு உடுப்பி உணவகமும் இருக்கு. இங்கேயும் நம்ம தோசை, இட்லி என எல்லாம் கிடைக்கும். இன்னும் கூடுதலாக.. நேரம் கிடைக்கும் போது சொல்லலாம். சலாலாஹ்வை விட்டு வெளியே நாம் வர
நமது மனம் மட்டும் அந்த நகரில் உலாவர....

அவஸ்தைகள் பலவிதம்-1

ஒரு முறை காரில் என்.எஸ்.கலைவானர் செல்ல
அவருக்கு அருகே காரில் ஒருவரும் பயனிக்க..
என்.எஸ். அவருடன் பேசிக்கொண்டு வரும்போது,
அந்த பேச்சில் என்.எஸ். சொன்னாராம்.. அருகே இருந்தவரிடம்,
தம்பி நீங்கள் எல்லாம் கலைத்துறைக்கு வாங்க.. இப்போ காலம் ரொம்ப கெட்டுப்போச்சி.. என்ன என்னவோ எல்லாம் பாட்டிலே எழுதுறாங்க?? என சொல்லி..
இப்போ ஒரு பாட்டு வந்துருக்கு, அது ரொம்ப ஆபாசமா இருக்கு என சொல்லி,
அந்த பாட்டையும் சொன்னாராம்.. என்ன பாட்டு தெரியுமா?
'அத்தைமடி மெத்தையடி....ஆடி விளையாடம்மா?'
அடப்பாவமே இதையா சொன்னார் என ஆச்சர்யமா? அது அந்த மாதிரி காலம்.
தலைவனும் தலைவியும், அன்பே .. நாதா.. என கொஞ்சிய காலம்.

இன்று நமது தமிழ் பாடல்களை கேட்டு பாருங்க?
படுக்கையறையில் உள்ள முக்கல் முனகல் வரை பாடல்களாக பதிவாகிறது.
இதை நாம் சினிமாக்களில் பார்க்காமல் இருந்தாலும்,
நாம் வெளியே பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது
இது போன்ற ஆபாச சங்கடங்களுக்கு ஆளாக நேர்கிறது.
இந்த கட்டுரையில் பல பாடல்களை உதாரனமாக சொல்லலாம்.
ஆனால், பல பெரியவர்களும் இங்கே வந்து படிப்பதால்,
அதன் கண்ணியத்தை கருதி நான் எழுதவில்லை.

நாம் நமது வீடுகளில், சில சமயங்கள் இது போன்ற சங்கடங்களில் ஆளாகிறோம்.
அதே போல பொது இடங்களில் உதாரனமாக, பேருந்து நிலையங்களில்??
ஏன் பேருந்துக்குள்ளே.. அதுவும் ஒலியும்..ஒளியுமாய்....)))))))) அது போல திருவிழாக்களில், ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் போதும்,
பலரும் இது போன்ற சங்கடங்களில் ஆளாகின்றோம். பலரும் நினைக்கலாம்.
அதற்காக பக்திப்பாடல்களாக எழுதனும் என? அப்படியில்லை.
நான் சொல்ல வருவது காதல் காட்சிகளாக இருந்தாக்கூட,
பாடல் வரிகளில் காதல் மூடி மறைப்பது போல இருந்தால் சரி?

கண்ணதாசன் எழுதாத ஆபாசமா? இன்று வரை ரசித்து கேட்கிறோமே?
ஏன் இன்னும் சொல்லவேன்டுமானால், 'கண்ணன் ஒரு கை குழந்தை ..' என்ற பாடலை பல இல்லங்களில் விடியல் பொழுதுகளில் ஒலிக்க கேட்டு இருக்கிறோம்.
இது என்ன பக்திப்பாடலா? காதல் பாடல் தானங்க..?!!
இது போல அன்றைய கால பாடல்களை பல பாடல்களை உதாரனமாக சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக வெளிப்படையாக ஆபாசத்தை தந்த பாடல், 'பூஜைக்கேத்த பூவிது..' இதில் தொடங்கியது
இன்று டோலு..டோலு.தான்.. என வந்து
ஆபாசம் கலந்து ஒலித்துக்கொண்டு தான் இருக்கு.

இதனால் என்ன என தானே கேட்கிறீங்க?
இது போன்ற கலாச்சார சீரழிவால் வளர்ந்து வரும் தலைமுறைக்கு
அவர்களின் பண்பாட்டை, கண்ணியத்தை பாதிக்கும்.
நண் மக்கள் தானே ..
நல்ல தலைமுறைகள் தானே..
நல்ல சந்ததிகள் தானே..
மண்ணுக்கு பெருமை.

லைவ் இன் ரிலேசன்ஷிப் தெரியுமா?

லைவ் இன் ரிலேசன்ஷிப் தெரியுமா?
இது என்னடாவென்றால் இது ஒரு புது மாதிரியான வாழ்க்கை முறை.
இதிலே பெண்பார்க்கும் படலம் இல்லை.
மாமியார்... நாத்ஸ்...தொல்லைகள் இல்லை.
அம்மி மிதிக்கவேன்டியதில்லை.
அருந்தது நட்சத்திரம் பார்க்கவேன்டியதில்லை.
செவ்வாய்..புதன்..தோஷங்கள் இல்லை.
அய்யர்கள் வேதமந்திரங்கள் ஓதவேன்டியதில்லை.
உன்னை எனக்கு பிடிச்சிருக்கு, உனக்கும் என்னை பிடிச்சிருக்கா?!!
வா வாழலாம். ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேன்டியது.
இவர்கள் நண்பர்களை அழைத்து பால்காய்ச்ச..
இவர்கள் வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டனர். அட தேவுடா....

இந்த வாழ்க்கை எங்கேயோ இல்லை.
டெல்லி, மும்பையில் தொடங்கி
இப்போ நம்ம சிங்கார சென்னையிலும்.
எப்போ வேன்டுமானாலும் பிரிந்துக்கொள்ளலாம்..
எந்த பதிவிலும் இவர்கள் பதிந்து கொள்வதில்லை.
தகவல் தொழில் நுட்பம் வந்துச்சி சார். வேலை தேடி போனாங்க..
வேலை வேற, தங்கனுமே.. தங்க வீடு வேனும். அங்க நமக்கு தகுந்த மாதிரி..
ஒரு ப்ரன்ட் வேனும்.. அது கேர்ள் ப்ரன்டா இருந்தா நல்லா இருக்கும்.
சமைக்க..லூட்டி அடிக்க.. வாழ்க்கை தித்திப்பா இருக்க..


இருவருக்கும் கை நிறைய சம்பளம்,
பெரிய நகரங்களில் மன அழுத்தம் நிறைந்த வேலை..
இதுக்கெல்லாம் ஒரு ரிலாக்ஸ் தான். Live in relationship.

இதுக்கு சமீபத்தில் மகாராஷ்ரா அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது.
இவர்கள் சில வருசங்கள் சேர்ந்து வாழ்ந்தால் இவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என அறிவித்துள்ளது.என்ன இது புதுசு என நினைக்கிறீங்களா?



இருபது வருடங்களுக்கு முன்னரே இது போல ஒரு வாழ்க்கை நடைமுறை சென்னையில் வாழ்வது போல நான் ஒரு கதையில் படித்து இருக்கிறேன். புத்தகப்பெயர் 'ஆசை எனும் வேதம்'.

புதன், 7 ஜனவரி, 2009

அலைபேசிகளா? இல்லை ....

இன்றைய நவ நாகரீக உலகில்நாம் நமது வாழ்க்கை வசதிக்காக
என்ன என்னவோ விஞ்ஞான வசதிகளைபெற்று இருக்கிறோம்.
அந்த வகையில் சமீப காலமாக கைகளில் தவழ்வது செல்லிடைபேசிகள். இது இல்லாமல் இப்போது யாரும் இல்லை.ஆயிரத்தில் ஒருவரிடம் தான் செல்போன் இல்லை எனலாம். ஆனால், செல்போன் உபயோகிப்பவர்களிடம் எப்போது ஸ்டெப்னியாக,
மற்றொன்று உள்ளது என்பது உண்மை.
செல்போன் தாங்க தப்பா நினைக்காதீங்க.
இன்னும் சிலரிடம் புதுவகையாக உபயோகிக்கிறாங்க,
அதாவது யாரிடம் இவர்களாக பேசமட்டும் ஒரு செல்போன்.
அந்த நம்பரில் யார் அழைத்தாலும் இவர்கள் எடுக்கமாட்டார்கள். அட தேவுடா!

இந்த செல்லிடைபேசி மிகவும் உபயோகமாக உள்ளதுஎன
எந்த ஒரு தரப்பினரையும் தனியாக சொல்லமுடியாது.
அனைத்து தரப்பினருக்கும் நல்ல ஒரு உபயோகமாக இது இருந்து வருகிறது.
ஆனால், இதனால் உள்ள தீமைகளையும்நாம் இங்கே கட்டாயம் சொல்லியே ஆகவேன்டும்.

சில வருடங்களுக்கு முன் அனைத்து ஊடகங்களிலும் வந்த செய்தி தான்.
தனது அப்பாவை அனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்குதனது குடும்பத்துடன் சென்ற பெண் அங்கே ஒரு செல்லிடை பேசி கிடந்து எடுக்க, அதுவே அந்த குடும்பத்துக்கு பின்னாளில் சனியனாக வந்தது.எப்படியென்றால், அந்த பெண் அதை எடுத்து
வீட்டுக்கு கொண்டு வர அதை தொலைத்த நபர் அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ள,
அந்த பெண்ணிடம் பேச, அந்த பெண்ணும் பேச,காலப்போக்கில் காதலாகி
தற்போது அந்த பெண் வீட்டை விட்டெ அவனுடன் ஓடி விட்டாள்.

இதாச்சும் பரவாயில்லை இன்னொரு சம்பவம்,
டெல்லியில் பள்ளியில் படிக்கும் மாணவன் தனது பள்ளித்தோழியுடன்
படுக்கை அறையை பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல்
அதை செல்போன் வழியாக படமெடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்ப
விபரம் அறிந்த மாணவி தற்கொலை.

இன்னும் சொல்லப்போனால் செல்லிடைபேசிகள்
இன்றைய சமூகத்தில் ஆயிரகணக்கான விவகாரத்துக்களுக்கு
காரனம், என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அதான் உண்மை.

இதை உபயோகிக்க பட்டனங்களில் எல்லாம் விதிமுறை எப்படி தெரியுமா?
கணவன் மனைவி ஆளுக்கொரு செல்போன்,
மனைவிக்கு வரும் அழைப்பை கணவன் எடுக்கக்கூடாது.
கணவனுக்கு வரும் அழைப்பை மனைவி எடுக்கக்கூடாது. அட ...

செல்போன் உபயோகிப்பதால் செல்போனிலிருந்து வரும் ரேடியேஷன்,
மைக்ரோவ் ரேடியேஷன், ரேடியோ பிரிகவுன்சி ரேடியேஷன்,
எலக்ட்ரா மேக்னடிக் ரேடியேஷன் என இதுபோல பாதிப்புகளும் இருக்கு.
இதன் பாதிப்புகள் இப்போது தெரியலை.
இன்னும் சில வருடங்களில் மருத்துவம் சொல்லும்.

இது இல்லாமல் நாம் அன்றாடம் ஊடகங்களில் படித்தது.
அதாவது பல பெண்களும் ஆபாச குறுஞ்செய்தி(sms) பெற்று
தனது உறவினர்களிடம் சொல்லிவிவகாரமான செய்திகள்.
இது இல்லாமல் தவறான அழைப்புகள் பெண்களுக்கு வந்து அதனால்,
அவர்கள் படும் இன்னல்கள், சஞ்சலங்கள்,வேதனைகள், மனப்புழுக்கங்கள்.
இன்னும் இப்படியே எழுதிக்கொண்டே போலாம்.
நாம் இறுதியாக எச்சரிக்கையுடன் முடிப்போம்.
அதாவது, செல்லிடைபேசிகளை 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு
வாங்கி கொடுக்கவேன்டாம். வயதுக்கு வந்து திருமணமாகாத பெண்களுக்கும்
செல்போன் கொடுக்க வேன்டாம். செல்போன் உபயோகிக்க தெரியாத
பெண்களுக்கும் செல்போன் வாங்கி கொடுக்கவேன்டாம்.
தமிழகத்தை பொறுத்தவரை சின்ன சின்ன குக்கிராமங்கள் வரை
தொலை தொடர்பு வசதிகள் பெற்றுள்ளது. எங்கே போனாலும் அங்கே எல்லாம்
தொலைபேசி வசதிகள் உள்ளது.சும்மா ஒரு ரூபாய் போட்டு பேசினால் போதும்
அழகாக தகவல் பரிமாறிக் கொள்ளலாம்.

இறுதியாக உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு யோகா மையத்தில்
யோகா பயில வரும் மாணவர்கள் உள்ளே
செய்திதாள், செல்லிடைபேசி, கடிகாரம், கணினி, என எதுவும் கொண்டு வரக்கூடாது.
அட நிம்மதியா இருக்கே...

சப்தங்கள் இல்லாமல் துயில் கொள்வதும்
கிளிக்கூச்சல்களில் நமது பொழுதுகள் விடிவதும் எப்போது?

உங்களுடன் ஒரு அறிமுகம்

அன்பானவர்களே!
இனைய தமிழ் உலகில் பல பெயர்களில் வந்து
தாங்கள் அனைவரும் வந்து கலக்கும்போது
நாம் மட்டும் ஏன் வரக்கூடாது?
சும்மா ஏன் அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கவேன்டும்?
என சிந்தனையில், இனி வரும் காலங்கள் உங்களுடன்
இனையம் வழியே உறவாட உங்களுக்கு பிடித்தமான்
நலம் நலமறிய என்ற பெயரில் புதியதாக துவங்கி உலா வர இருக்கிறேன். இனிவரும் காலங்கள் நல்ல சிந்தனைகளுடன் நமது எண்ணங்கள் பகிர்ந்து கொண்டு நாம் இங்கே உறவாடலாம்.