திங்கள், 26 ஜனவரி, 2009

இனையவழி உறவுகள்

எங்கள் குடும்பத்தை இங்கே சொல்லவேன்டுமானால்
உங்கள் அனைவரின் கண்திருஷ்டியும் வந்துவிடும்.
ஆமாங்க இனைய உலகில் எங்ககுடும்பம் மிகப்பெரியகுடும்பம்.
நாங்கள் எல்லாம் தமிழகத்தில் மிகப்பிரபலமான ஒரு இனையத்தில்
இனைந்து, இனையம் வழியே ஒரு குவலய குடும்பமாக
வாழ்ந்து வந்தோம். அந்த குடும்பத்தில் நான் இனைந்தது 2001 முதல்.
அன்று முதல் எங்கள் குடும்ப உறவுகளில் பாசமுள்ளவனாக
அதைப்போல எங்கள் குடும்பத்திலும் அனைத்து உறவுகளிலும்
பாசப்பறவைகளாக வாழ்ந்து...சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்.
எங்களுக்கு அலுவலகத்திலோ அல்லது வாழ்விலோ.
ஏதாவது சிரமங்கள் இருந்தால் கஷ்டங்கள் இருந்தால்
அதை அனைத்தையும் போக்கும் சருமரோக நிவாரனி தான் எங்கள் மன்றம்.




அந்த மன்றம் வழியே தான் நாங்கள் உறவாடுவோம்.
எங்க தலைவர் PMKR கூட ஒருமுறை சொன்னார்
அன்வர் நான் உதட்டளவில் சந்தோசமாக இருந்தாலும்
உள்ளத்தளவில் சற்றே தளர்ந்து இருக்கிறேன்.
எங்கள் மன்றத்தில் General,Ladies Corner,Cinema & Music,
Jokes,Kitchen,Literature,என பல பக்கங்கள் இருந்தது.

நாங்கள் அனைவரும் தினமும் வந்து
உரையாடுவோம். எங்கள் குடும்ப உறுப்பினர்கள்
அனைவரையும் சொல்கிறேன். யாரும் சொந்தப்பெயரில்
வந்தது கிடையாது.

Pmkr,Kads,Nachi,Bkris,Veeran,
Mkp,JK,Mirasu,Yash,Girivasan,
SRI,Madhumitha,Buffy,Thamizhan,
Swetha,Aarem,Aarvi,Yedhiri,Vineetha,
Flavor,Drkrish,Confused,Veeran,Arun,Selvi,
SV,Zaphia,Pranith4,Kgr,Malli,Gheetha,Malar,
Niamat,Zephyr,Saint,Erramnaidu,Tnelango,
Ketki,CM,Icecream,Ganesh_th,Ban,Sri_kirtana,
Rsury,Komban,Nomad,Sunny,Shreya,Roshank,Preety,Prerna,
Shruthyponnu,Suresh,Yahu,Darkwish,Mukil..
ம்ம்ம்ம்.. மூச்சு வாங்குது...

இதில் யார் பேரையும் விடப்பட்டு இருந்தால்
இதை படிக்கும் குடும்ப நண்பர்கள் தெரியபடுத்தலாம்.
அப்போது இதுபோல தமிழ் எல்லாம் வந்தது கிடையாது.
ஆகையால், நாங்கள் தமிங்கிலீஷ் ல தான் எழுதுவோம்.




எங்கள் மன்றத்தில் தினமும் குதுகாலம் தான்
அதிலும் பாட்டுக்குப்பாட்டு
ரொம்ப சந்தோசமாக பாடி திரிந்தோம்.

அதைபோல சமையல் பக்கம்
தோசை சுடுவது எப்படி என முதல்,
வத்தல்குழம்பு, வட்லப்பம் வரை நாங்கள் சமைத்ததுண்டு.
அதைப்போல நகைச்சுவை, இலக்கியம்,
எங்களில் எல்லோருக்கும் கதையும், கவிதையும் வரும்.
இதில் இன்னும் சொல்லவேன்டுமானால்,
பஞ்சகல்யானி என்று ஒரு பக்கம் ஆரம்பிப்போம்.
அதில் நாங்க அடித்த அரட்டைகள் மறக்கமுடியாது.





அப்போது நாங்கள் வந்தது எல்லாம்,
சிங்கை, மலேசியா, இந்தியா, மத்தியகிழக்கு நாடுகள்,
ஐரோப்பிய ராஜ்யங்கள் இது அல்லாது அமெரிக்காவில் இருந்தும்.
இப்போது கிட்டத்தட்ட மூன்று, நான்கு வருசங்கள் ஆச்சி.
எல்லோரும் எங்கே போனாங்க?! என்று எங்களுக்கு தெரியாது.
எங்க உறுப்பினர் எங்கே என தேடாமல்,
வெத்திலையிலே மை போட்டு பார்த்ததில்,
அதிகமாக எங்க மக்கள் வசிப்பது
சிகாகோவில் தான் என தெரியவந்தது.
ஒரு சிலரை நேரில் பார்த்து இருக்கிறேன்.
ஒரு சிலர் வீட்டு சுபகாரியங்களில் சென்று வந்து இருக்கிறேன்.

ஒரு சிலர் அவர்கள் வீட்டு விருந்துக்கும் அழைத்ததுன்டு
ஒரு தடவை துபாயில் சந்திக்க முயற்சி செய்து
அனைவரும் பார்த்ததுன்டு.

எங்கே இருந்தாலும் சிஸ்மக்கள் சிஸ்மக்கள் தான்

' பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே..'

3 கருத்துகள்:

  1. என்ன அன்வர் பாய்... எப்படி இருக்கிங்க?. நான் யார்னு தெரியுதா?. நான் தான் சிஸ்-இந்தியா சகோதரன். சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கின்றோம் இல்லயா?... காலங்கள் தான் எப்படியெல்லாம் ஓடுது??? சரி, இப்போ நீங்க எங்க இருக்கிங்க? இன்னும் மத்தியகிழக்கில் தானா?.

    இந்த ஆறாண்டுகளுக்குள்,
    -வீணாபோனவன்.

    பதிலளிநீக்கு
  2. காலம் யாருக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது.. sysindia காலங்கள் மறக்க முடியாதவை.. மலரும் நினைவுகள்.. நன்றி அன்வர்...tnelango

    பதிலளிநீக்கு
  3. இளங்கோ நலமா?
    எப்படி இருக்கீங்க?

    பதிலளிநீக்கு