வியாழன், 12 பிப்ரவரி, 2009

'முல்லை-பெரியார்'

இன்று தினமும் செய்திகளில் அடிபடும் பெயர் 'முல்லை-பெரியார்'.
சென்ற நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில்
மதுரை ராமனாதபுர ஜில்லா மக்கள், பட்டினியால் வாடுவதைக் கண்ட
ஆங்கிலேயர்களின் முயற்சியே, முல்லை-பெரியார் நதிகளிடையே இந்த அணை.

இந்த அணை கட்டும் போது திருவிதாங்கூர் சமஸ்தானமும்,
மதறாஸ் சமஸ்தானமும் போதிய அளவு நிதி ஒதுக்கவில்லை.
இந்த அணையை கட்டிய பொறியாளர் பென்னின் குயிக்,
தனது தாய் நாட்டுக்கு சென்று இந்த அனையை கட்ட தேவையான பொருளாதாரத்தை (தனது சொந்த பணத்தில்) கொண்டு வந்து, இந்த அணையை கட்டி முடித்தார்.
தமிழக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.


இன்றும் அந்த பகுதி மக்கள் (தேனி,கம்பம்,போடி,)
அந்த நன்றிக்கடனை செய்கின்றனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு
பென்னின் குயிக் பெயரை வைக்கின்றனர். நினைத்து பார்க்கவே அற்புதமாக இருக்கிறது.
என்ன ஒரு முயற்சி..என்ன ஒரு துணிச்சலான முடிவு.
அதுவும் சாதாரண கார்யம் அல்ல... ஒரு நீர்தேக்கம்.
தான் பிறந்த நாடும் அல்ல. வாக்கப்பட்ட பூமியும் அல்ல.
தன் கண் முன்னால் எத்தனையோ மக்கள் பசியாலும் பஞ்சத்தாலும் வாழ்வதை பார்த்து, பொறுக்க முடியாமல் இந்த நிரந்தர நண்மையை செய்து முடித்த
அந்த சீமைத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக