திங்கள், 12 ஜனவரி, 2009

சுவையான பிரியானி

நட்பு வட்டங்கள் சந்திப்பதும்
அவர்கள் அரட்டை அடிப்பதும்
உலகில் புதிதல்ல. அந்த வகையில்
எங்கள் நட்பு வட்டங்கள் சென்ற புத்தாண்டு தினத்திற்கு
கூடலாம் என முடிவெடுத்து அனைவரும் ஷார்ஜாவில் உள்ள
எங்கள் நண்பர் இல்லத்தில் சந்தித்தோம்.

இந்த சந்திப்பில் எங்கள் நண்பர்
ஒருவரை அழைத்து அரபியர் வீடுகளில் செய்வது போல
நல்ல சுவையாக மசாலா கூடுதலாக இல்லாமல்
கம கம என நறுமணம் வர
எவ்வளவு தின்னாலும் திகட்டாத
மட்டன் பிரியானி செய்து





ஒரு வெட்டு வெட்டியதை தான்
இங்கே சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
ஏய் மக்கா சும்மா கண்ணு போடாதே
ஏதோ ஆசைப்பட்டு குழந்தை-பிள்ளைகள் சாப்பிடுறோம்.





அன்று உணவுக்காக தயார் செய்தது
பிரியானி தக்காளி சட்னி போல ஒன்று
அது கூட பகுதுர்னி...
பிரியானியின் நறுமணத்தை
நாங்கள் கூடத்தில் அமர்ந்து இருந்தபோது
நுகர்ந்த எனது நண்பர் வெற்றியின் சின்னத்தை
புன்னகையோடு சொல்கிறார் பாருங்கள்




சோறுன்னா சட்டி தின்போம்
சொன்ன பேச்சி கேட்க மாட்டோம்
ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடியற்காலம் முழிக்க மாட்டோம்
இளவட்டம் இளவட்டம் தான் ...ஹேய்ய்..

8 கருத்துகள்:

  1. அன்பு அன்வர் ஐயா...

    ரெண்டாவது படத்துல புகையோடு மேலே கிளம்பி வர்ற பிரியாணி.... பார்த்தவுடனே ஜலம் ஊறுதே.... வாசம் மூக்கில் ஏறுதே...

    ஆஹா...!

    பதிலளிநீக்கு
  2. அன்பு அன்வரே அரபியர் பிரியாணி எப்படி செய்வது என்று எழுதலமே நாங்களும் தெரிந்துக்கொள்ள்வொம்

    மயில்

    பதிலளிநீக்கு
  3. என்ன அப்பு அப்படி சொல்லிட்டீங்க?
    ஊருக்கு வாங்க
    பட்டை கிராம்பு போட்டு தாளிச்சிடலாம்.

    பதிலளிநீக்கு
  4. என்ன மயில்
    அதற்கு தான் அருசுவை இருக்கே?

    பதிலளிநீக்கு
  5. sir, if you don't mind can you please tell me the film name to which these lyrics belongs to... 'm desperate to download this song... please help me sir...

    "சோறுன்னா சட்டி தின்போம்
    சொன்ன பேச்சி கேட்க மாட்டோம்
    ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
    விடியற்காலம் முழிக்க மாட்டோம்
    இளவட்டம் இளவட்டம் தான் ...ஹேய்ய்.. "

    பதிலளிநீக்கு
  6. அந்த பாடல்
    இடம் பெற்ற படம் 'கன்னிராசி'
    பான்டியராஜன் இயக்கியபடம்
    பிரபு & ரேவதி நடித்தது

    பதிலளிநீக்கு
  7. அன்பு நண்பரே
    தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  8. ஏதோ புது வித ரெசிபி சொல்லப் போரீங்கன்னு பார்த்தா ஏமாற்றிட்டீங்களே!

    பதிலளிநீக்கு