வியாழன், 26 பிப்ரவரி, 2009

வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..


இந்திய சங்கீதத்தின் ராஜசிற்பி







வின்னைத்தான்டி நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடுதான் என்னாளுமே கொண்டாட்டமோ...கும்மாளமோ...



(புகைப்படங்கள் உதவி இனையங்கள்)

புதன், 25 பிப்ரவரி, 2009

போர் நிறுத்தம்: யுஎஸ்-ஐ.நா-ஐரோப்பிய யூனியன் கோரிக்கை


வாஷிங்டன்: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போரை உடனடியாக நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என அமெரிக்கா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை தனித் தனியாக கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை போர் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தற்காலிக செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் கூறுகையில், இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போரை கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

மனித உரிமை மீறல்களும், மனிதாபிமான சிக்கல்களும் எங்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

அகதிகளாக இடம் பெயர்ந்து தங்கியிருக்கும் மக்களின் நிலை பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. அவர்களுக்கு நடைபெறும் இன்னல்கள் எங்களை கவலையில் ஆழ்த்துவதாக உள்ளன. இரு தரப்புக்கும் இடையில் சிக்கி பெரும் துயரத்தில் அவர்கள் மூழ்கியுள்ளனர்.

இரு தரப்பும் அரசியல் ரீதியிலான தீர்வுக்கு முயற்சிக்க வஏண்டும். பல்வேறு நாடுகள் பரிந்துரைத்துள்ள சமரச முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு பார்க்க வேண்டும்.

இரு தரப்பும் உடனடியாக போரை கைவிட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். போர்ப் பகுதியிலிரு்நது அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகள், நிவாரணங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இரு தரப்பும் தங்களது சண்டையைக் கைவிட வேண்டும் என்பதே எங்களது ஒரே வேண்டுகோள். இந்தப் பிரச்சினைக்கும், அங்கு தற்போது நடைபெற்று வரும் சிக்கல்களுக்கும் முடிவு காணப்பட வேண்டும். இரு தரப்பும் பேச வேண்டும்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரும், வெளியுறவு அமைச்சகத்தின் தெற்காசிய பிரிவும் இதுதொடர்பாக இலங்கை அரசுடன் தொடர்புகள் கொண்டுள்ளன. மேலும் சில சர்வதேச நாடுகளும் கூட இதுதொடர்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த வருமாறு அமெரிக்காவுக்கு இதுவரை யாரும் அழைப்பு விடுக்கவில்லை.

போர் முடிவுக்கு வர அமெரிக்காவால் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். ஆனால், முடிவு ஏற்படுவது சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் இடையில்தான் உள்ளது. போரை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது, பேச்சுவார்த்தைகளை எப்படித் தொடங்குவது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் உட்.




ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்

இதேபோல ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு போரில் ஈடுபடும் இரு தரப்பும் அனைத்துலக மனிதாபிமான விதிகளையும், போரியல் விதிகளையும் மதித்தல் வேண்டும். சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இதனை மதிக்க வேண்டும்.

வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் மக்களை வெளியேறவிடாது தடுப்பது கண்டனத்திற்கு உரியது.

வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு வரும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்துலகத்தின் தராதரத்துடன் இருத்தல் வேண்டும் என்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியாற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

இந்த முகாம்களுக்கு செல்லும் முழு அதிகாரங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் போன்றவற்றுக்கு வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் நீண்டகாலப் போருக்கு படைத்துறை ரீதியாக தீர்வுகாண முடியாது. விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போரை நிறுத்த பான் கி மூன் வலியுறுத்தல்

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனும் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

வன்னிப் பகுதியில் மோதல்களில் சிக்கி பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக அங்கு நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்

நன்றி: வணக்கம்மலேசியா

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

முத்தங்கள் மலிவது ஏன்?!

'ரத்தினமே முத்தம் வைக்கவா
அதற்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா?!'
என்று நமது நாட்டு பண்பாட்டுடன் இனைந்து பாடிய காலங்கள் போய்,
இன்று என்னடாவென்றால் , முத்தங்கள் கொஞ்சம் கூட பயமில்லாமல்,
வெட்கமும் இல்லாமல், பல இடங்களில் சர்வ சாதாரனமாக, பரிமாற படுகிறது.

சமீபத்தில் எய்ட்ஸ் சம்பந்தமாக தில்லியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட ஷில்பாஷெட்டிக்கு, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே, முத்தம் கொடுக்க தொடங்கி,
பல பேர் மத்தியில், ஆயிர கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில்,
தொடர்ந்து கட்டி அனைத்து, தொடர்ச்சியாக முத்தங்கள் கொடுத்து,
அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அதேபோல சமீபத்தில் கேரள மாநிலம்
எர்னாகுளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்
வெளி நாட்டு விருந்தினர் எர்னா மாவட்ட ஆட்சியர் பீனாவுக்கு
கொடுத்த முத்தங்கள் ஊடகங்களில் சர்ச்சையானது?!
இது போன்ற முத்தங்கள் இந்திய பெண்களின் மீது
வெளி நாட்டினருக்கு உள்ள மோகமா?
இல்லை இது பெருமையாக நினைத்து செய்கிறார்களா
எனத்தெரியவில்லை.. இது இப்படி இருக்க,




நமது இந்திய மக்களிடமும்
அன்பையும்,பாசத்தையும் பகிர்ந்து கொள்ளும் பழக்கம்
கொஞ்சம் கொஞ்சமாக பரஸ்பரமாக மாறிவருகிறது.
அதாவது விலாவாரியாக சொல்லவேன்டுமானால்
இப்போது முத்தங்கள் பரிமாறுதலில் வந்து நிற்கிறது. அட தேவுடா..?!

அதாவது பல நாட்கள் கானாத அவர்கள் தேட்டத்தை
கட்டித்தழுவி முத்தத்தில் முடியும் பாசமாக கான்கிறோம்.
இது மட்டுமல்ல..
இன்றும் தொலைபேசியில் உரையாடும் நட்புகளிடமும்,
அதேபோல செல்லிடைபேசியில் உறவாடும் பலரிடமும்
உறவாடலை முடிக்கும்போது
முத்தங்கள் பரிமாறுவது சகஜமாக பழக்கமாக இருக்கிறது.

அதேபோல ஒன்றாக படிக்கும் நட்புவட்டங்களிடமும்
அவர்கள் பிரியும்போதும்,
அதேபோல அலுவல் நிமித்தமாக பணிக்கு செல்லும் யுவதிகள்,
சுக துக்கங்களில் பங்குகொள்ளும் யுவதிகளிடமும்
ஒருவரை விட்டு ஒருவர் பிரியும் போது
ஆறுதலாக முத்தங்கள் பகிர்வது இன்று வழக்கமாக உள்ளது.
பலருக்கும் இதுபோன்ற செய்திகள்
வியப்பாக இருக்கலாம்.


இது என்ன இந்திய பண்பாடா?
இல்லை இந்திய பாரம்பர்யமா?
இல்லை தமிழக கலாச்சாராமா?

தமிழக கவி எழுதிய பாடலை பாருங்கள்
தலைவன் தலைவியிடம் முத்தம் கேட்க
எப்படி வினவுகிறான் என?
'ரத்தினமே முத்தம் வைக்கவா
அதற்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா?!'
அதற்கு அவள் சொல்லும் பதில்
வெட்கத்தையும் ஒத்தி வைக்கவா
அதற்காக மந்தியிலே பந்தி வைக்கவா?!!!'

நமது பண்பாடும் கலாச்சாரமும், அன்னிய நாட்டு கலாச்சாரத்துக்கு அடிமை பட்டு,
இல்லை ஆசைப்பட்டு, இந்திய பாரம்பர்யமே தொலைந்து விடுமோ?
என்ற அச்சம் இதை படிக்கும் நம்மில்
பலருக்கும் வந்தாலும் ஆச்சர்யமில்லை.

வியாழன், 19 பிப்ரவரி, 2009

தமிழ் கலாச்சாரம் எங்கே போகிறது ?!

சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் செயல்கள்
நமது தமிழ் கலாச்சாரம் எங்கே போகிறது என நம்மை எழுதவைக்காமல் இல்லை..
அப்படி என்னதான் என்று தானே கேட்குறீர்கள்?
அன்றைய காலங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும்
அந்த திருவிழாக்களில் கலந்துக்கொள்ள ஏராளனமான பக்தகோடிகள்
திருவிழா நிகழ்ச்சிகளில் காண பலரும் வருவார்கள்.

அந்த திருவிழாக்களில் முக்கியமாக சங்கீத கச்சேரிகள் பலே..பலே..
அந்த பனிபொழியும் இரவுகளிலும், நிலாக்கால பொய்கைகளிலும்,
நடக்கும் சங்கீத கச்சேரிகளின் அருமையை இந்த சிறு கட்டுரையில் சொல்லியடங்காது.
அது நாதஸ்வரமாக இருக்கட்டும், இல்லை வாய்ப்பாட்டாக இருக்கட்டும்.
ஆனால் இன்றைய காலங்களில் இதன் போக்கே மாறிவிட்டது.



சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைத்தளத்தில் நாம் படித்த கட்டுரை
நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. என்ன எனில், இப்போதெல்லாம் விழாக்களில்
அதாவது சில ஊர்களில் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நடன நிகழ்ச்சிகளை
நீங்கள் பார்த்தால் நான் எழுதியது தப்பில்லை என சொல்வீர்கள்?!
அவரது வலைதளத்தில் சில புகைப்படங்களும் தந்துள்ளார்.

அதாவது மேடை நிகழ்ச்சிகளில் அப்படி ஒரு ஆபாசம்
இதோ அவரின் எழுத்துக்கள் சில... 'சமூக நலத்தோட பார்த்தால் இவர்கள் செய்வது மிகதவறு.ஆனால் இப்படியும் பெண்கள் பொது இடங்களில் தங்களை தொட அனுமதிப்பார்கள் என இதை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.ஆனால் அவர்கள் சூழ்நிலை என்ன என எனக்கு தெரியாது. இதை ஒரு பிழப்பாக தேர்வு செய்வது கையாலாகாதனம்.

இந்த நிகழ்ச்சி சில பேருக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.'
இது என்ன? இதை எப்படி மக்கள் அனுமதிக்கின்றாங்களே தெரியலை.
குஷ்பு சொன்னதற்காக துடைப்பத்தை எடுத்துச்சென்ற மகளிர்கள்,
இப்போ எங்கே போனாங்க என நம்மை கேட்க வைக்கிறது.
இது போல தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்கள்,
அது என்ன மானாட மயிலாட.. உருப்பட்ட மாதிரி தான்...
இதெல்லாம் தமிழ் இளைஞர்களை எங்கே போய் விடும்னு சொல்லமுடியாது.


செய்திதாள்களில் படிக்கிறோமே.. அங்கே இங்கே
யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிப்போவது,
கள்ளத்தொடர்புகள் என இது போன்றவைகள் நடைபெற என்ன காரனம்னு நினைக்கிறீங்க? இது போன்ற கலாச்சார சீரழிவுகளை அங்கீகரிப்பது தான்.
புயல் மழையில் நிவாரனம் கொடுப்பது,
தீ விபத்துகளில் பங்களிப்பது, இரத்ததான முகாம்கள் நடத்துவது மட்டும் தான்
தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்களின் கடமையா? இல்லையே?
இது போன்ற கலாச்சார சீரழிவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும்
நமது கடமையல்லவா?

என்னத்தே... கோஷ்டிகள்!

இன்றைய அவசர உலகில் எத்தனை எத்தனையோ மாற்றங்களால்,
நிதானமாக வாழ்ந்த மனிதன் சற்றே தடுமாறி தான் இருக்கின்றான் என்றால் மிகையல்ல... இயந்திரமயமான வாழ்க்கை, பிரிவுகள், பொருளாதார சிந்தனைகள், வேலைப்பளுவுகள்,இதனால் ஏற்பட்ட மன அழுத்தங்கள்
என இப்படியே அடுக்கலாம்..இதனால் என்ன மாறுதல்கள்
நம்மைப்போன்ற சமுதாயத்தில் ஒரு பின்னடைவு ..
என்னத்தே படிச்சி.. என்னத்தே..பார்த்து.. என..
அன்றாடம் வாழ்வில் பார்த்து வருகிறோம்.



நண்பர் ஒருவர் மலைவாழிடம் ஒன்றுக்கு விடுமுறையை கழிக்க சென்று
இரன்டே நாளில் திரும்பிவந்து விட்டார்.. என்ன என நாம் கேட்க,
அவர் சொன்ன பதில் ..ஆமா, நாம் பல தடவை பார்த்த இடம் தானே..
பாருங்கள் விடுமுறையை கழிக்க சென்றவரின் மன நிலையை..
அதே போல நமது நண்பர்கள் பலரும் இளனிலை அல்லது முதுனிலை படிப்பதற்காக
திறந்த வெளிபல்கலைகளில் சேர்ந்துள்ளனர்.. ஆனால், எப்போ முடிப்பார்கள் என அவர்களுக்கும் தெரியாது..அந்த பல்கலைக்கும் தெரியாது.
கேட்டால்...என்னத்தே..??!! தான்.. இப்படி பல சம்பவங்களை உதாரனமாக சொல்லலாம். ஆனால், இதே மாற்றம் நமது பெண்கள் சமுதாயத்தில் இல்லை.
அவர்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் உற்சாகமாக உலா வர துணிந்து விட்டார்கள்..



ஓருமுறை இனையத்தில் உறவாடிக்கொண்டிருக்கிற போது
அது ஒரு புத்தான்டின் தொடக்கம் வரும் நேரத்தில்..
உனது எதிர்கால எண்ணம் என்ன என,
தோழியிடம் வினவியபோது அவள் சொன்ன பதில்,
நான் கல்பன சாவ்லா போல உயர பறக்க வேனும் என...??!!!
அதே போல ஆசியாநெட் என்ற இந்திய தொலைக்காட்சியின் G.M. Middle east ஆக, பணிபுரிபவர் பிந்துமேனன் என்ற பெண் தான். எனக்கு ஒரு முறை
ஒரு தோழி குறுச்செய்தியாக அனுப்பிய வாழ்த்து செய்தி ...



'challenges are high,
dreams are new
world out there is waiting for u
dare to dream dare to try
no goal is distant
no star is too high..'
பாலகுமாரன் கதைகளில் தான் (சியாமளி, சுபத்ரா, காயத்ரி என)
இது போல துணிச்சலான பெண்களை பார்த்து இருக்கிறோம்.
ஆனால், நிஜ வாழ்வில் இப்போ பார்த்து வருகிறோம்.
இன்னும் சென்னை போன்ற நகரங்களில் பல உயர்மட்டங்களில் நமது பெண்கள்
பதவி வகிக்கிறார்கள் என்றால் மிகையல்ல. ஆனால், காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் இப்பொது சலிப்படைந்த நமது ஆண் வர்க்கம்
சற்றே தனது நட்பு வட்டத்தையும், வாழ்க்கை நடைமுறையையும்,
ஆன்மிகமும் கலந்து நல்ல மனவளத்துடன் உலகை உற்சாகமாக வெற்றிக்கொள்ளும்
நாட்கள் மிகதூரத்தில் இல்லை என்பது நிதர்சனம்.

நமது காதுகளில் பாரதியின் கவிதைகள் ரீங்காரமிட..

'மனதில் உறுதி வேன்டும்
வாக்கினிலே இனிமை வேன்டும்
நினைவு நல்லது வேன்டும்
நெருங்கின பொருள் கை படவேன்டும்..'

திங்கள், 16 பிப்ரவரி, 2009

தமிழனின் அடையாளம்

செந்நெல் மாற்றிய சோறும்,
அநெய் தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை,
கட்டித் தயிரோடு மிளகின் சாறும்,
கானில் நன்மதுரம் செய் கிழங்கும்,
நாவில் இனித்திடும் அப்பமும்
நம் எல்லாரையும் நலமுடன் வளர்ப்பன..'


அன்றைய காலங்கள் முதல்
இன்றைய காலங்கள் வரை
தமிழர்கள் உலகம் முழுவதும்
புலம் பெயர்ந்து வாழ்வதும்,
திரைகடலோடி திரவியம் தேடுவதும் புதிதல்ல..
ஆனால், தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும்,
அவர்களுக்கு உரிய அடையாளத்தை இழப்பதில்லை..


அந்த வகையில் தமிழர்கள் என்ன தான்
மிகப்பெரிய நகரங்களில் வசித்தாலும்
மிகப்பெரிய அலுவலகங்களில்
உயர்பதவிகளில் வகித்தால் கூட,,
உணவு விசயத்தில் தமிழக உணவை ரசித்து புசிப்பது
இவர்களுக்கு அலாதி ப்ரியம் என்றால் மிகையல்ல.


அது தோசையாக இருக்கட்டும்
இல்லை இட்லியாக இருக்கட்டும்.
இல்லை நல்ல சோறும் அதனுடன் சாம்பாரும்
தொட்டுக்க கூட்டுகறிகளும்
அப்பளம், ரசம், ஊறுகாய் என...

அதுவும் மீன்குழம்பு என்றால்,
இல்லை குறும்ப்பாட்டு கறிகுழம்பு,
நாட்டுக்கோழி பிரியானி...
செட்டி நாட்டு சிக்கன் வறுவல்
இடியாப்பமும் கோழிகறியும்
தலைப்பாகட்டு பிரியானி
கொக்கா மக்க....)))))))

வியாழன், 12 பிப்ரவரி, 2009

'முல்லை-பெரியார்'

இன்று தினமும் செய்திகளில் அடிபடும் பெயர் 'முல்லை-பெரியார்'.
சென்ற நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில்
மதுரை ராமனாதபுர ஜில்லா மக்கள், பட்டினியால் வாடுவதைக் கண்ட
ஆங்கிலேயர்களின் முயற்சியே, முல்லை-பெரியார் நதிகளிடையே இந்த அணை.

இந்த அணை கட்டும் போது திருவிதாங்கூர் சமஸ்தானமும்,
மதறாஸ் சமஸ்தானமும் போதிய அளவு நிதி ஒதுக்கவில்லை.
இந்த அணையை கட்டிய பொறியாளர் பென்னின் குயிக்,
தனது தாய் நாட்டுக்கு சென்று இந்த அனையை கட்ட தேவையான பொருளாதாரத்தை (தனது சொந்த பணத்தில்) கொண்டு வந்து, இந்த அணையை கட்டி முடித்தார்.
தமிழக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.


இன்றும் அந்த பகுதி மக்கள் (தேனி,கம்பம்,போடி,)
அந்த நன்றிக்கடனை செய்கின்றனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு
பென்னின் குயிக் பெயரை வைக்கின்றனர். நினைத்து பார்க்கவே அற்புதமாக இருக்கிறது.
என்ன ஒரு முயற்சி..என்ன ஒரு துணிச்சலான முடிவு.
அதுவும் சாதாரண கார்யம் அல்ல... ஒரு நீர்தேக்கம்.
தான் பிறந்த நாடும் அல்ல. வாக்கப்பட்ட பூமியும் அல்ல.
தன் கண் முன்னால் எத்தனையோ மக்கள் பசியாலும் பஞ்சத்தாலும் வாழ்வதை பார்த்து, பொறுக்க முடியாமல் இந்த நிரந்தர நண்மையை செய்து முடித்த
அந்த சீமைத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்.

காதலர் தினம்

புன்னை மரச்சோலையிலே
பொன்னளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி
அவர் கன்னல்மொழி பகிர்ந்ததெல்லாம்
நினைவுதானொடி..சகியெ
கனவு தானோடி....



இன்று காதலர் தினம் மேலை நாட்டு கலாச்சாரத்தால்
உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.. நாம் எழுத,
டைடானிக் முதல் உலக புகழ்பெற்ற ரோமியோ காதல் வரை எழுதலாம்.
நமது பார்வையில் தமிழத்தை மட்டும் பார்த்தமானால்,
நமது கலாச்சாரத்திற்கு இந்த காதலர் தினமும்,
இதன் கொண்டாட்டங்களும் பல பெற்றோர்களுக்கு பயத்தை கொடுக்கும்
என்பதில் ஐயமில்லை. காரனம் நமது கலாச்சாரத்திற்கு
இது ஒவ்வாத ஒன்று என சொல்லலாம். இருந்தாலும்,
நமது பக்கமும் நிறைய காதல் கதைகள் இருக்கு.
முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கவில்லை..
இதில் அழகி போல மறைத்த காதலும் இருக்கு.
ஆட்டோகிராப் போல அந்த காதலை மறந்து தனது வாழ்வை
இனிதே கொன்டு செல்பவர்களும் உண்டு.



காதலியை மையமாக வைத்து உலா வந்த பாடல்கள் தமிழகத்தில் ஏராளம் ..ஏராளம்..
'மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..'
தமிழ் கவிஞர்கள் எழுதாமல் இல்லை.. அதே போல,
1952 வாக்கில் தமிழ் மக்கள் மிகவும் ரசித்த பாடல் அசோக்குமார்
திரைப்படத்தில் ஒலித்த 'உன்னைக்கன்டு மயங்காத பேர்கள் உண்டோ..'
அதேபோல தில்லானா மோகனம்பாள் படத்தில் சிக்கல் சன்முகசுந்தரத்துக்கும்..
அந்த மோகனாங்கிக்கும் உள்ள காதல் தமிழக மக்களிடம் மிகவும் பிரசித்திபெற்றது.
இந்த காதலை ரசிக்காத தமிழக மக்களே இல்லை எனலாம்.
என்ன தான் பலவகை காதல் இருந்தாலும் தமிழ் நாட்டு தமிழக மக்களிடையே மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் ரசித்த காதல்
அது வந்தியதேவனும் -குந்தவை நாச்சியாருக்கும் உள்ள காதலேயாகும்.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

சீமையன் சீமையன் தான்

தமிழக வரலாற்றில் பல்வேறு காலங்களில் தடம் பதித்தவர்கள் பலர்.
அந்த வகையில் தமிழகத்தில் அமர்ந்த ஆங்கிலேய பிரபுக்கள்
அவர்களின் தலைமயிடமாக நீலகிரி மாவட்டத்தின்
கோத்தகிரியை வைத்து செயல்பட்டு வந்தார்கள்..
கோத்தகிரி இப்போதும் இதமான தட்ப வெப்பத்துடன் உள்ள கோடைவாழிடமாகும்.
அவர்கள் வந்து செல்ல வித்யாசமான பயனமாக அமைய
இரயில் வழி பாதையை அமைக்க முயற்சி செய்தார்கள்.
இது ஒரு சாதாரனமான முயற்சி என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால்,
கடல் மட்டத்திலிருந்து 7228அடி உயரம். வாவ்..
இது போன்ற வேலைகள் செய்வதில் சீமைத்துரைகளுக்கு அலாதி ப்ரியம். முயன்றார்கள்..வென்றார்கள்..இது அவர்களின் வாழ் நாள் சாதனை.



1845ம் வருடம் இதற்கான வேலைகள் தொடங்கினார்கள்.
அது பூர்த்தியாகி இரயில் மலை ஏற தொடங்கியது..1899.
மேட்டுபாளையத்திலிருந்து தொடங்கி கல்லார், அட்டர்லி, ஹில்குராவ்,ரன்னிமேடு,
காட்டேறி ரோடு, குன்னூர்,வெல்லிங்டன்,அரவங்காடு,கேத்தி,லவ்டேல் வழியாக,
ஊட்டியை வந்தடையும்..வாவ்..த்ரில்லிங்கான அதே சமயம்
என்ன ஒரு உற்சாகமான பயணம்.. அற்புதம்..அற்புதம்...
இது மொத்தம் 46 கி.மீ. 208குகைகள்,16 சுரங்கபாதைகள், 250 பாலங்களை கடந்து,
இந்த பயணம் தொடர்கிறது. வாவ்.... இதற்கான இரயில் ஆரம்பத்தில்
ஸ்விஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது.




2005ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பாரம்பர்ய சின்னமாக இதை அறிவித்து, இதை அமைத்த ஆங்கிலேயர்களுக்கு இது உலகின் மிக உயர்ந்த
கெளவரவ பட்டமாக கருதலாம். அவர்களின் திறமைக்கும் உழைப்புக்கும்
கிடைத்த மரியாதை என்று கூட சொல்லலாம். 1999ம் ஆண்டு இரயில்வே அமைச்சராக இருந்த நிதீஷ்குமார் இதை பாதுக்காக்க..4 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
ம்ம்.. என்ன சிந்தனை நமது வாழ் நாளில் நாமும் குடும்த்துடன் அல்லது
நண்பர்களுடன் சுற்றுலா சென்றால், கண்டிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து
ஊட்டி செல்லலாம். அப்படி போக முடியாதவர்கள் குன்னூரில் இருந்து ஊட்டி சென்று வாருங்கள். மலை வாசஸ்தலங்களில் வித்யாசமான அனுபவம்

ஆர் எஸ் பதி மருந்து

அன்றைய காலங்களில்
நமது வீடுகளில் இருந்த ஒரு சிறந்த நாட்டு மருந்து
அதான் ஆர் எஸ் பதி மருந்து.
எங்கள் வீடுகளில் எங்கள் பாட்டனார்
அந்த பதி மருந்தை எடுத்து வா என கேட்க,
நாங்கள் எடுத்து போய் கொடுத்து இருக்கிறோம்.
இப்போ தானே எதற்கெடுத்தாலும் வைத்தியசாலைக்கும்,
ஆங்கில மருந்துகளிலும், வாழ்க்கையை வீனாக்குகிறோம்.



அன்றைய காலங்களில் வீட்டுக்கு வீடு
நாட்டு மருந்துகள்தான். நாட்டு வைத்தியம் தான்.
ஆர் எஸ் பதியும் அன்று முதல் இன்று வரை
பல இல்லங்களில் கோலோச்சி வருகிறது.
இது 98 வருடங்களுக்கு மேலாக
பாரம்பர்யமிக்க குடும்ப மருந்து. அதுவும் இது

இந்த நோய்க்கு தான் என்று இல்லை,
'நானா கடை சால்னா' மாதிரி எல்லாத்துக்கும்.
அது தலைவலியா இருக்கட்டும்,
இல்லை ஜலதோஷமாகட்டும்,
வெட்டுகாயமாகட்டும்.. இது போன்ற
குளிர்காலங்களில் கொஞ்சம் நீலகிரி தைலவாடை உள்ள
பதி மருந்தை தடவிக்கொண்டு இழுத்து போர்த்தினால்..
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

தஞ்சாவூர் என்றாலே

தஞ்சாவூர் என்றாலே நினைவுக்கு வரும்
சலசலக்கும் காவிரியும் தென்னந்தோப்புகளும்
தலையாட்டி பொம்மையும், ஆங்காங்கே தெரியும் கோவில்களும்..
ஆனால் , வெளியே தெரியாமல் இந்த மண் செய்த வேலை தெரியுமா?
மறைந்து இருந்து சங்கீத உலகை பார்க்கும் இந்த ஜில்லாவிற்கு தான்
எத்தனை அமைதி!எத்தனை அழகு!!
'சரிகம பதநிஸ' என்று தொடங்கும் சங்கீதத்திற்கு இந்த மாவட்டம் செய்த
தொண்டுகளையும் ஆற்றிய பணிகளையும் சொன்னால் இந்த சிறுகட்டுரை இடம்பெறாது.



கொஞ்சும் சலங்கை படத்தில் ஒலித்த சிங்காரவேலனே தேவா..
என்ற பாடலை நாம் முனுமுனுக்கும்போது கூடவே அந்த பாடலுடன் ஒலித்த
நாதஸ்வர ஓசையையும் நமது உதடுகள் முனுமுனுக்காமல் இருப்பதில்லை.
அந்த பாடலுக்கு வாசித்தவர் நம்ம காருக்குறிச்சி என்றாலும்,
அவருக்கு குருவாக இருந்தவர் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை என்றால் மிகையல்ல.
அட அவர் மட்டுமா இங்கே பிறந்தார்?!
நம்ம மகாரஜபுரம் சந்தானம், செம்மங்குடி சீனிவாசய்யர்,
கும்பகோனம் ராஜன்னா, பந்தனல்லூர் தட்ஷீனாமூர்த்தி,
கொக்கு காதர்பாட்சா, அட இவ்வளவு ஏன்?
நம்ம தியாகராஜர் வாழ்ந்தது எங்கே?
நம்ம முத்துசாமி தீட்சிதர், பாப நாசம் சிவன்,
அது போவுது போங்க..
இந்த மண்ணில் பிறந்த, உருவான இசைமேதைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.
கர்னாடக சங்கீதம் என்றாலே பயப்படும்படியாக ஒன்றும் இல்லை.
இது மைசூரில் இருந்தோ பெங்களூரில் இருந்தோ வந்ததும் அல்ல.
அது நமது காதுக்கு அடக்கமானது இனிமையானது. அவ்வளவுதான்.

இதில் அளவுக்கு அதிகமான கீர்த்தனைகள்
தெலுங்கில் இயற்றியுள்ளதால் நமக்கு புரிவதில்லை.
தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்போது
நிறைய பாடல்கள் பாடிவருகிறார்கள்.



உதாரனமாக 'மரி..மரி.. நின்னே.. சிந்துபைரவியில்
பாடறியேன் படிப்பறியேன் என உருமாறியது..
நிழல்கள் படத்தில் ஒலித்த
பூங்கதவே தாழ்திறவாய் பாடல்
சுத்தமத்யம ராகங்களில் ஒன்றான
மாயமாளவ கெளளை ராகத்தில் ஒலித்தது தான்.
இதில் முக்கியமானது மேளகர்த்தா ராகங்கள் ஆகும்.
இதில் மொத்தம் 72 ராகங்கள் உள்ளது.
அதில் இருவகைப்படும்
1)ப்ரதிமத்யம ராகங்கள்
2)சுத்தமத்யம ராகங்கள்
இதில் மிக இலகுவான ராகமும் இசைப்பயிலும் போது
நமக்கு முதலில் சொல்லிக்கொடுப்பதும் மாயமாளவ கெளளை தான்.
இதில் சுத்த தன்யாசி போல பாடுவதற்கு மிக கடினமான ராகங்களும் இருக்கிறது.



தெலுங்கில் அதிகமான கீர்த்தனைகளை தியாகராஜரும்,
பாபனாசமும், முத்துசாமியும் இயற்றியுள்ளனர்.
தஞ்சையில் பிறந்த இசைமேதைகளை அத்தனை சீக்கிரம் சொல்லி விட முடியாது.
எத்தனை எத்தனையோ வித்வான்கள்.. எவ்வளவோ இசைமேதைகள்..
அன்றைய காலங்களில் நிலாப்பொய்கைகளிலும், பூந்தென்னல்களிலும்,
பனிபடர்ந்த இரவுகளிலும் ..மேடைகளிலும் அம்பலங்களிலும் இவர்கள்
பொழிந்த இசை அமுதத்திற்கு அளவே இல்லை.


எத்தனையோ கீர்த்தனைகள் .. அநாசயமான பிருகாக்கள்
குரல் என்பது கடவுள் கொடுத்த வரம்
அதை சாதகம் பன்னுவதின் மூலம் நாம் மெருகூட்டிக்கொள்கிறோம்.
சங்கீதத்தில் அதீத பற்று வைத்திருக்கும் எவ்வளவோ பேர்
இன்னும் இந்த மண்ணின் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்.
அந்தக்காலத்தில் மலைக்கோட்டை கோவிந்தசாமிபிள்ளை
திருவையாறுக்கு குதிரைவண்டியில் வருவாராம். ஆனால், திருவையாறு
பாலத்தினருகே வண்டியை நிறுத்திவிட்டு ஊருக்குள்ளே கால் நடையாகத்தான் வருவாராம்.
காரனம் தியாகராஜர் வாழ்ந்த அந்த ஊரின் மேல் அவ்வளவு பாசம்.
இன்றும் தஞ்சையில் நாம் பயணம் செய்யும் காலங்களிலும்,
அந்த மக்களிடம் நாம் பழகும் போதும்,
அவர்களின் வாழ்வில் சங்கீதமும், கலையும் கலாச்சாரமும்
அவர்களோடு கலந்திருப்பதை நம்மால் உணராமல் இருக்கமுடியவில்லை.
சங்கீத தஞ்சை என்றும் மறவாத பசுமையான நினைவுகளில்...