வியாழன், 19 பிப்ரவரி, 2009

தமிழ் கலாச்சாரம் எங்கே போகிறது ?!

சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் செயல்கள்
நமது தமிழ் கலாச்சாரம் எங்கே போகிறது என நம்மை எழுதவைக்காமல் இல்லை..
அப்படி என்னதான் என்று தானே கேட்குறீர்கள்?
அன்றைய காலங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும்
அந்த திருவிழாக்களில் கலந்துக்கொள்ள ஏராளனமான பக்தகோடிகள்
திருவிழா நிகழ்ச்சிகளில் காண பலரும் வருவார்கள்.

அந்த திருவிழாக்களில் முக்கியமாக சங்கீத கச்சேரிகள் பலே..பலே..
அந்த பனிபொழியும் இரவுகளிலும், நிலாக்கால பொய்கைகளிலும்,
நடக்கும் சங்கீத கச்சேரிகளின் அருமையை இந்த சிறு கட்டுரையில் சொல்லியடங்காது.
அது நாதஸ்வரமாக இருக்கட்டும், இல்லை வாய்ப்பாட்டாக இருக்கட்டும்.
ஆனால் இன்றைய காலங்களில் இதன் போக்கே மாறிவிட்டது.



சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைத்தளத்தில் நாம் படித்த கட்டுரை
நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. என்ன எனில், இப்போதெல்லாம் விழாக்களில்
அதாவது சில ஊர்களில் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நடன நிகழ்ச்சிகளை
நீங்கள் பார்த்தால் நான் எழுதியது தப்பில்லை என சொல்வீர்கள்?!
அவரது வலைதளத்தில் சில புகைப்படங்களும் தந்துள்ளார்.

அதாவது மேடை நிகழ்ச்சிகளில் அப்படி ஒரு ஆபாசம்
இதோ அவரின் எழுத்துக்கள் சில... 'சமூக நலத்தோட பார்த்தால் இவர்கள் செய்வது மிகதவறு.ஆனால் இப்படியும் பெண்கள் பொது இடங்களில் தங்களை தொட அனுமதிப்பார்கள் என இதை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.ஆனால் அவர்கள் சூழ்நிலை என்ன என எனக்கு தெரியாது. இதை ஒரு பிழப்பாக தேர்வு செய்வது கையாலாகாதனம்.

இந்த நிகழ்ச்சி சில பேருக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.'
இது என்ன? இதை எப்படி மக்கள் அனுமதிக்கின்றாங்களே தெரியலை.
குஷ்பு சொன்னதற்காக துடைப்பத்தை எடுத்துச்சென்ற மகளிர்கள்,
இப்போ எங்கே போனாங்க என நம்மை கேட்க வைக்கிறது.
இது போல தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்கள்,
அது என்ன மானாட மயிலாட.. உருப்பட்ட மாதிரி தான்...
இதெல்லாம் தமிழ் இளைஞர்களை எங்கே போய் விடும்னு சொல்லமுடியாது.


செய்திதாள்களில் படிக்கிறோமே.. அங்கே இங்கே
யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிப்போவது,
கள்ளத்தொடர்புகள் என இது போன்றவைகள் நடைபெற என்ன காரனம்னு நினைக்கிறீங்க? இது போன்ற கலாச்சார சீரழிவுகளை அங்கீகரிப்பது தான்.
புயல் மழையில் நிவாரனம் கொடுப்பது,
தீ விபத்துகளில் பங்களிப்பது, இரத்ததான முகாம்கள் நடத்துவது மட்டும் தான்
தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்களின் கடமையா? இல்லையே?
இது போன்ற கலாச்சார சீரழிவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும்
நமது கடமையல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக