ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

திருவனந்தபுரம்

சேர நாட்டின் பயணங்கள்

நீண்ட நாளாச்சி மலை நாட்டுக்கு போய்
நம்ம நட்புகளையும் உறவுகளையும் பார்க்கலாம் என ஒரு பயணம்.
நமதூரில் இருந்து புதுக்கோட்டை, மதுரை வழியாக நாகர்கோவில் போய்,
மலை நாட்டின் தலஸ்தானமாகிய திருவனந்தபுரம் செல்லனும்..

மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் சென்றால்,
அங்கே 8ம் நம்பர் வரிசை சென்று நாகர்கோவில் பேருந்து கிடைக்கும். அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லனும்.
கிட்டத்தட்ட 13மணி நேரப்பயணம்

நாம் செல்லும் போது கடைசியாக தமிழக எல்லை
களியக்காவிளை வரும். அதற்கு அப்புறம் பரஸ்ஸல.
இதான் கேரளாவில் தொடக்கத்தில் உள்ள ஊர்.
அப்புறம் ' நெய்யாற்றிங்கர' என போய்
கைமணம்.. பாலராமபுரம் வந்தால்
திருவனந்தபுரம் தான்..
பெயர் தான் சேர நாடாக இருந்தாலும்
அதிகம் வாழ்வது நமது தமிழினம் தான்.



கன்யாகுமரி மக்கள் நிறைய பேர் தொழில் நிமித்தம் காரனமாக புலம் பெயர்ந்துள்ளார்கள்.
தலஸ்தானம் சென்றதும் நம்மை முதலில் வரவேற்பது
தம்பனூர் பேருந்து நிலையம். இதன் எதிரே புகைவண்டி நிலையம். பத்து வருடங்களுக்கு பார்த்த அதே தம்பனூர் தான். எந்த மாற்றமும் இல்லை. அதே சர்க்காரின் பான்ட பஸ்கள்.
பிறக்கும் போதே செங்கொட்டி சிந்தாத்துடன் பிறக்கும் மக்கள்.
தனது தோழர்களை சகாவே என
அழைக்கும் பழக்கம் அவர்களுக்கு.
எனது நண்பரின் இல்லத்திற்கு
ஆட்டோவில் செல்லும்போது
சாலையின் இருபக்கமும் பள்ளம்
தோண்டி இருக்கிறது.
அதை கூறும் ஆட்டோ ஓட்டுனர் எப்படி?
இந்த பக்கம் ஜப்பான்காரன் பள்ளம்,
அந்த பக்கம் அமெரிக்காகாரன் பள்ளம்
நடுவில் கேரளத்தில் சாலைகள் என .. அட பேச்சிலுமா சித்தாந்தம்.?!
திருவனந்தபுரம் மாநகராட்சி வெளி கம்பெனிகளுக்கு
சில ஒப்பந்தங்கள் வழங்கியுள்ளது.




தலஸ்தானம் நிறைய மாற்ற்ம்
பார்க்க நமக்கே சந்தோஷம்.
ஆனால், பெரிய பெரிய கட்டிடங்கள் இல்லை.
அதே போல செலவுகளும் கூடுதல் இல்லை.
திருவனந்தபுரம் பண்பாட்டின் நகரம்.(culture city)
ஆகவே பெரிய கட்டிடங்கள் வர வாய்ப்பு இல்லை.
அவை எல்லாம் கொச்சினுக்கு கொடுத்து விட்டார்கள்.
அமைதியாய் அழகாய் அடக்கமாய்
பசுமையாய் ஒரு நகரம்.

நான் தங்கி இருந்த இடத்தின் பெயர் அட்டகுளங்கர.
இந்த இடத்தைப்பற்றி சொல்லவேன்டுமானால்,
அட்டகுளங்கர முழுதும் நம்ம
தமிழ் மக்கள் இல்லங்கள்.
இதன் பின்னால் இருக்கும் இடம் சாலை. (chalai)
இது முழுக்க நம்ம மக்கள்
தொழில் செய்யம் கடைவீதி.
அதே போல இதன் எதிரே கோட்டைக்ககம்.(east fort)



இது முழுக்க தமிழ் பிரமாண குடும்பங்கள்..
ஆமாங்க ஆச்சர்யம் வேண்டாம்
நான் தமிழகத்தில் கூட
இன்று வரை இவ்வளவு பெரிய
அக்ரஹாரத்தை பார்த்ததில்லை.
அன்று தான் பார்த்தேன்.
அந்த அக்ரஹாரத்தில் ஒரு வீட்டில்
மெஸ் ஒன்று நடக்கிறது.
சேர நாட்டு சிகப்பரிசி இல்லாமல்
நம்ம தஞ்சாவூர் அரிசியில் தமிழக சுவையுடன்
சுத்தமான ஒரு சைவ சாப்பாடு
ஒரு வெட்டு வெட்ட வேண்டுமானால் ஒரு முறை சாப்பிடுங்கள்.

அதே போல 'சாலையில்' ஒரு பஸ் ஸ்டாப் இருக்கிறது.
இதில் இருந்து சுற்றிப்பார்க்க எங்கேயும் செல்லலாம்.
இதன் எதிரே கோட்டைக்ககம் பஸ் ஸ்டாப்.
இதில் இருந்து எங்கேயும் செல்லலாம்.



சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் எனச் சொன்னால்
கோவளம் கடற்கரை, சங்குமுகம் கடற்கரை, வேலி,
மியூசியம், நேப்பியர் மியூசியம், அரண்மனை, என இப்படியே நிறைய இடங்கள்..
திருவனந்தபுரம் அருகே நெய்யார் அணை,
அதன் அருகே பொன்முடி
பொன்முடி நம்ம ஊட்டி மாதிரி மலை வாழிடம்.


குறைந்தது ஒரு 3 நாள் குடும்பத்துடன் குதுகாலிக்க
நல்ல ஊர். நல்ல பருவனிலை. எங்கே போனாலும் தமிழ் தான்.
தொழுகையாளிகளுக்கு பள்ளிகளும் குறைவில்லை.
அதே போல ஷாப்பிங் விலை மலிவு தான்.
பாலராமபுரம் கைத்தறி புடவைகள் அழகு.. அழகு..
மன சந்தோஷ்த்துடன் ஒரு இனிமையான சுற்றுலா..
நாம் சில நாட்கள் பார்த்தாலும்
நம் கண்ணைவிட்டு அகலாத
அந்த பசுமையான நினைவுகளில்
அரபிக்கடலின் அழகிய கடற்கரையும்,
அந்த பசுமையான தென்னந்தோப்புகளும்..

கலையுட நிலையமே..
கதகளி தேசமே..-----

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

காவேரிமங்கை



வேற ஒன்னும் இல்லைங்க!
சமீபத்தில் காவிரி நதி
தனது அழகிய கூந்தலை அவிழ்த்து
தண்ணீரில் நனைத்தபடி ஆனந்த குளியல் போடும்
'பவானி'க்கு போயிருந்தேன்.





அதைத்தான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
இங்கே 'கூடுதுறை பவானி' என்ற ஆறுகள் சங்கமிக்கும் இடம் இருக்கிறது.
அங்கே ஆடி 18ம் பெருக்கு ரொம்ப விமர்சையாக நடக்குமாம்.



உள்ளங்கையில் உலகம்

சமீபத்தில் புத்தகம் ஒன்று எங்கள் ஊர் நூல் நிலையத்தில் கிடைத்தது.
சரி வேற ஒன்றும் கிடைக்கவில்லை. இதை ஒரு புரட்டு புரட்டலாம் என
புரட்டினேன். அடட... என்ன ஒரு அழகான ஒரு புத்தகம்
என்ன ஒரு அழகான மொழிபெயர்ப்பு.
ஆமாங்க இது வேற்று மொழியில் இருந்து
தமிழுக்கு வந்த நூல். இந்த நூலை எழுதியவர்
தனது வாழ்வில் நடந்த அனுபவங்கள்
பிரயாணத்தில் சந்தித்த அனுபவங்கள்
தனது வாழ்வில் சந்தித்த பெரிய மனிதர்கள்
தான் முதன் முதலாக வேலைப் பார்த்த டாடா குழுமம்
இன்னும் கர்னாடகாவின் வாழ்க்கைகள் , கிராமங்கள் என
அனைத்தையும் மிக அழகாக தொகுத்திருக்கிறார்.
வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!



இந்த நூலை எழுதியவர் சாதாரனமானவங்க இல்லை.
இன்பாசிஸ் பவுன்டேஷன் என்னும் அமைப்பை நடத்தி
இந்தியாவின் கிராம்ப்புறங்களில்
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளை திறந்துள்ளார்.
அட என இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படி?
இவங்க வேற யாரும் இல்லை,
இன்பாசிஸ் நாராயனமூர்த்தியின் மனைவி தான்
இவங்க பெயர் சுதாமூர்த்தி.

வியாழன், 10 செப்டம்பர், 2009

மெட்ரோ சிறக்க...

மெட்ரோ சிறக்க
மனதார வாழ்த்துகிறோம்.







புகைப்படங்கள் உதவி கல்ப் நியூஸ்

புதன், 9 செப்டம்பர், 2009

காதலர்களின் சங்கமம்

'பஞ்சு மிட்டாய் அஞ்சி ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்..'

'நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்..'

என்னன்னு கேட்குறீங்களா இதாங்க ரொமான்ஸ்
இப்போ எல்லாம் ரொமான்ஸ் ஒரு fashion
சமீபத்தில் பல ஊர்களில் நடக்கும் சம்பவங்கள்
ஊடகங்களில் நாம் படித்து வருகிறோம்.
இதை விட கொடுமை என்னவென்றால்
நாம் சுற்றுலா செல்லும் இடங்களில்
நேரிலே சில காதல் ஜோடிகளை பார்த்தோம்.
சமீபத்தில் ஒரு மதிய உணவு வேளையில்
தஞ்சை சிவகங்கை பூங்காவுக்கு சென்றபோது
ஏராளனமான ஜோடிகள் தனது காதலனுடன் கடலையில்,
நம்மை பார்த்ததும்
துப்பட்டாக்கள் காதலன் மடியில் முகம் புதைத்தது.

அதே போல புகார் நகர கடற்கரைக்கு சென்ற போது
அட இது என்ன இளங்கோவடிகள் காலமா என சந்தேகம்,
காரனம், பல காதலர்கள் ,
நமது நினைவுக்கு வந்தது
அவர் வர்னித்த கடலாடு காதல் தான்.
அதே போல தரங்கம்பாடி கடற்கரை
அடடா.. இப்படி ஒரு அமைதியான
அழகான ஆர்ப்பாட்டம் இல்லாத கடற்கரை
காதலர்கள் அமைதியாக எந்த வித கூச்சலும் இல்லாமல்
அங்கே கிடக்கும் கட்டுமரங்களில்
உலகை மறந்து கலிங்கத்து பரணியில் வர்னிப்பது போல
தலைவனும் தலைவியும் மனதால் மட்டும் உரையாட..
இதை விட அருகாமையில் மல்லிப்பட்டினம் மனோராவில்
இன்னும் சில காதலர்கள்
அப்படியே கைகோர்த்தபடி
காதலியுடன் மொக்கை போட்டுக்கொண்டு
என்ன அழகாக ஸ்டெப் போட்டு நடந்து செல்கிறார்கள்.
தம் தன தம் தன ஆ..ஆ..ஆ...
கல்யாணி ராகம் தான் போங்க...

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமாரர்க்கு மாமலையும் கடுகாம்
இது அந்தக்காலம்
இப்போ மாற்றிச்சொல்லனும் எப்படி
'பைக்கின் ஹாரன் சத்தம் காதலன் கொடுத்து விட்டால்
துப்பட்டாக்கள் எந்த பஞ்சாயத்தும் பயப்படுவதில்லை'
இதாங்க நிதர்சனமான உண்மை
பெண்ணை பெத்தவங்க
ஆணை பெத்தவங்க
எவ்வளவு கஷ்டப்பட்டு இவங்களை படிக்க வைக்கிறாங்க..
இதுங்க போடுற ஆட்டம் என்ன!
அடிக்கிற கூத்து என்ன?
இந்த இனக்கவர்ச்சி எப்போ போகுமோ?

இதைப்படிக்கும் நட்பு வட்டங்களே
இந்த இனக்கவர்ச்சியில் இருந்து இவர்கள் மீள
நல்ல ஆலோசனை சொல்லுங்கள்.
காலம் கெட்டு கிடப்பதால்
பெண்ணைப்பெத்தவங்க அதை வெளியே அனுப்பி
அது வீட்டுக்கு திரும்ப வரும் வரை படும் அவஸ்தைகளை எழுத முடியாது.

பாய்பிரன்ட் வேனும் என்ற சிந்தனை விட்டு
நல்ல நட்புகளுடன் குடும்பத்தின் கெளரவத்தை உயர்த்த
நல்ல வழித்தடங்களுடன் தங்கள் பாதங்கள் செல்ல
என்றும் வாழ்த்தியவனாக!