வியாழன், 31 டிசம்பர், 2009

நாளைய விடியலுக்காக..

உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம் வந்து
உலகமே தலைகீழாக மாறிப்போய்
எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்
என வியக்கும் அளவுக்கு உலகத்தின் நிலை ஆனது.

2008 ஜூலை, ஆகஸ்ட் முதல் ஏற்பட்ட
அமெரிக்க வங்கிகளின் நிலை,
வலுவடைந்து பெரும் சுனாமியை ஏற்படுத்தி உலகத்திற்கு இந்த அளவுக்கு ஒரு அழிவை ஏற்படுத்தியது..
அமெரிக்காவில் பல நகரங்களில்
மக்களின் வாழ்வே மாறியது.
அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தவர்கள்
எல்லாம் காடுகளில் சென்று வசிக்கும் நிலை.

எத்தனையோ முன்னனி நகரங்கள்
'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற
வள்ளுவனின் வாக்கைப்போல
அமைதியாக அடங்கிப்போனது.
இந்த பின்னடைவில் இருந்து இன்னும்
உலகம் எழவில்லை.
எனது நண்பர் ஒருவர் தகவல் தொழில் நுட்ப துறையில் புதியதாக தொழில் தொடங்கி
கையை சுட.. நிறுவனத்தை மூடிய நிலை..
இது நடந்தது சென்னையில் தான்.
அட என இதற்கே வியந்தா எப்படி?
இது போல ஏராள்னமா சம்பவங்களை சொல்லலாம்.
இந்த பொருளாதார தேக்கத்தில்
உலகம் முழுவதும் வேலை இழந்தோர்
எண்ணிக்கை சொல்லி உங்களை பயமுறுத்த விரும்பவில்லை.. இதற்காக பாதிக்கப்பட்டவர்களை,
நஷ்டமடைந்தவர்களை, சிரமப்பட்டவர்களை,
இறைவன் தண்டித்துவிட்டான் என நினைக்காதீர்கள்.
அப்படி சொல்லவும் வேண்டாம்.
ஏனென்றால்,
'காலச்சக்கரத்தை நாமே சுழலவிடுவோம்'
என்ற வேதவரிகளை மறக்கவேண்டாம்.
நம்ம தஞ்சாவூர்பக்கம் தான் சொல்வாங்களே?!
'முப்பது வருசம் வாழ்ந்தவனும் இல்லை
முப்பது வருசம் வீழ்ந்தவனும் இல்லை' என..'

ஆனால் உலகத்தின் நம்பிக்கை சற்றே துளிர்கிறது.
டிஸம்பர் இறுதி வாரத்தில் தொடங்கிய விடுமுறைகள் தொடர்கிறது.
இந்த வருடம் போகட்டும் என...,
பலரும் காத்திருக்கிறார்கள்..
பலரும் புதிய தொழில் தொடங்க,
2010 வரட்டும் என இருக்கிறார்கள்.
எப்படியோ 2009 ஒரு நஷ்டமான வருடமாக இருந்தது
என்பதில் வியப்பில்லை,..
சரி போகட்டும் என உலகம்
உற்சாகத்திற்கு தயாராகி விட்டது.
குடந்தை போன்ற நகரங்களில் கூட
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விளம்பரங்கள்.
மக்கள் நாளைய விடியலுக்கு தயாராகி
ஆட்டம் போட தயாராகி விட்டனர்.

ஆஸ்திரேலியாவின் ஒபேராய் ஹவுஸில் தொடங்கி
ஹாங்காக், ஷங்கைய், சிங்கை, சென்னை ,
துபாய் வழியாக
ஐரோப்பிய நாடுகள் வழியாக
அமெரிக்க நகரங்களை
இந்த புத்தாண்டு செல்ல இருக்கிறது.
காலத்தை குறை சொல்லாமல்
இறைவனை மறக்காமல்
வட்டி இல்லா பொருளாதரத்தை தேடி
இந்த உலகம் சென்று
ஆரோக்யமான காற்றை சுவாசிக்கட்டும்.

'every sunset gives us one day
less to live! but,
every sunrise give us,
one day more to hope!
so, hope for best.
have a lovely day!'

செவ்வாய், 22 டிசம்பர், 2009

அன்புள்ள பிரதமருக்கு

அன்புள்ள பிரதமருக்கு

அன்புடன் எழுதிக்கொண்டது..
நலம் நலமறிய பேராவல்...
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?

தாங்கள் அமெரிக்கா சென்ற போது
அங்கே கூறினீர்கள்..
வெளி நாடு வாழ் இந்தியர்கள்
அனைவரும் இந்தியா திரும்ப வேண்டும்.
இன்னும் சொன்னீர்கள்
அறிவுசார்ந்த இந்தியர்கள் இந்தியா வரவேண்டும்.
நீங்கள் வெளிநாடு சென்றதால் இந்தியாவில் பின்னடைவு ஏற்பட்டது ..
இன்னும் சொன்னீர்கள்
உங்களுக்கு இதேபோல பதவிகள் இந்தியாவில் கிடைக்கும் என..
நன்றி .. மன்மோகன் ஜி.. நன்றி..



நாங்கள் அறியாமை காலம் முதல்
இன்று வரை வெளிநாடுகளில் வாழ்ந்து
பழக்கப்பட்டு விட்டோம்.
காலையில் எழுந்து மஸ்கா சிலைஸ் தின்றே எங்களுக்கு பழக்கமாகி விட்டது.
இன்னும் நாங்கள் ஊரில் இருந்தால்
எங்கள் குடும்பங்களில் பிரச்சனையே இருக்காது...??!!
சரி அது போகட்டும்..
நீங்கள் சொன்னீர்கள்
அறிவு சார்ந்த இந்தியர்கள் வரவேண்டும் என...

முதல் பயணம் வந்து ஊர் திரும்பும் போது நிச்சயமும்,
இரண்டாவது பயணத்தில் திருமணத்தை முடித்தும்,
மூன்றாவது பயணத்தில் குழந்தையை பள்ளியில் சேர்த்தோம்,
நான்காவது பயணம் போகும் போது சொன்னார்கள்
பிள்ளை பெரிய மனுசியாகி விட்டாள்...
பின்னர் மாப்பிள்ளை பார்த்து
பண்டிகைக்கு கைலியும் சட்டையும் எடுத்து கொடுத்து..
அப்படியே வழக்கமாகி
வெளி நாடுகளிலேயே வாழ்க்கையை தொலைத்த
எங்களை போன்றவர்களை என்ன செய்ய சொல்றீங்க?

எங்களுக்கு உட்வர்ட்ஸ் வாங்குவதற்கு முன்னால்
கடவுசீட்டு தான் எடுத்து தந்தார்கள்.


அறிவுசார்ந்த மக்களுக்கு மட்டும் அதேபோல பதவியா?
அப்போ எங்க குஞ்சாலிக்கும்,
மூஸா காக்கவுக்கும் ஒரு கப்டீரியா(tea stall) கிடையாதா?



சரி அறிவு சார்ந்த மக்களை கூப்பிடுறீங்க
நாங்களும் சென்னை அல்லது புனே,
அல்லது பெங்களூரு, அல்லது மாதப்பூருக்கு பெட்டிக்கட்ட தயார்.
அதற்கு முன் எங்களுக்கு சில வேண்டுவன இருக்கே..
* லஞ்சம் இல்லாத இந்தியா
* ஜாதி சண்டைகள் இல்லாத இந்தியா
* கூலிப்படைகளின் அச்சுறுத்தல்
* அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள்
* மின்வெட்டு இல்லாத தமிழகம்
என இப்படியே பட்டியல் எங்களிடம் இருக்கு..
இருந்தாலும் நல்ல இந்தியர்களாக
எங்களை இனம் கண்டு
நேர்மையான அரசியல் செய்யவும்,
நல்ல நிர்வாகம் செய்யவும்,
பரந்து விரிந்த இந்த பாரத பூமியிலே,
நீங்கள் விரும்பியவாறு தொழில் செய்யுங்கள்
உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும்
எமது அரசாங்கம் செய்யும் என,
நம்பிக்கையின் மேல் நம்பிக்கை வைத்து
நல்ல தொழில்கள் தொடங்கி,
நிம்மதியாக உற்றர் உறவினர்களோடு,
மனைவி குழந்தைகளோடு,
நிம்மதியாக தாய்பூமியில் வாழுங்கள் என,
அக்கரையில் எங்களை பார்த்து
அக்கறையுடன் அழைத்த
முதல் இந்திய பிரதமரே,
உமது பாசத்திற்கும், அன்பிற்கும்,
புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் சார்பாக 'சல்யூட்'.
என்றும் அன்புடன்..

திங்கள், 7 டிசம்பர், 2009

அவஸ்தைகள் பலவிதம்

தமிழகத்தில் நடைபெறும் அன்றாட
குடும்ப சூழல் ஒரு பார்வை.

அன்றைய காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும்
குறைந்தது 5,6, பிள்ளைகள், பாட்டிகள், பெரியவர்கள்,
அடிக்கடி பார்க்கவும், குசலம் விசாரிக்கவும் உறவுகள்..
எத்தனை எத்தனை ஆனந்தம்..
அட்டகாசமான நினைவுகள்..

அன்றைய காலங்களில் மருமகள்களாக வந்த பெண்களும்
தனது மாமியார் வீட்டின் கெளரவத்தை தூக்கி தலை நிமித்தினார்கள் என்றால் மிகையல்ல.
அன்றைய மருமகள்கள் தனது நாத்தனார்களுக்கு கொடுத்த மரியாதை,
நாத்தனாரிடம் நயந்து கொண்டது,
அதேபோல சின்னமாமியார்களுக்கு மரியாதை
அவர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை கொண்டாடும் விதம் அற்புதம்...அற்புதம்...

அன்றைய பெண்களின் மன நிலை எப்படி இருந்தது என்றால்,
புகுந்த விட்டுக்கு சென்றால் அங்கே உள்ள நல்லது கெட்டது
சுக துக்க நிகழ்சிகளில் பங்கு கொண்டு, நல்லவை கெட்டவை அனைத்தையும்
தனது தோளில் சுமந்து, தனது கணவன் வலதா, இடதா என தடுமாறும்போது,
அவனுக்கு சரியான திசையை சொல்லி,
அந்த குடும்பத்தை சீர்தூக்கி,
இன்னார் வீட்டு பெண் இந்த வீட்டில்
இப்படி வந்து வாழ்கிறது
என பலரிடமும் பெயர் பெற்ற
மருமகள்கள் இருக்கிறார்கள்.
அதேபோல மாமியார் மெச்சும் மருமகளும்
இந்த தமிழகத்தில் இல்லாமல் இல்லை.
கணவன் மனைவியின் அற்புதமான உறவை
அவர்களின் நடைமுறையை கூட
கண்ணதாசன் ஆபாசம் இல்லாமல்
அழகாக ஒரு பாடலில் வர்னித்து இருப்பார்.
எப்படி என பாருங்கள்...

'காலளந்த நடையினிலே
காதலையும் தான் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே தான் மலர்வாள்'

என்ன ஒரு அழகான குடும்ப நடை
கணவன் மனைவி உறவை அழகாக சொல்கிறார்.

இன்றைய காலங்களில் இதுபோல
நடைமுறை தமிழகத்தில் ஒரு சில
குடும்பங்களில் தான் பார்க்கலாம்.
பெரும்பாலும் மருமகள்கள் மாமியார் வீட்டில் குடும்பம் நடத்த செல்வதில்லை.
சில மருமகள்கள் சுக, துக்க நாட்களில்
மட்டும் சும்மா ஒரு விசிட்.
இன்னும் சில மருமகள்களுக்கு
அந்த பக்கமே அலர்ஜி.
இன்னும் சிலர் அட்டகாசம்
நாற்பது நாட்கள் மாமியார் வீட்டில்
குடும்பம் நடத்தியதில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைக்க
என்ன என வினவினேன்.. ஒரு முக்கியமான சேதி பேசவேண்டும்.
நேரில் வந்து பேசனும் ..
என்ன என வினவினேன்..
அவர் சொன்ன சேதி இதான்
மனைவியின் விவகாரம்
மாமியார் வீட்டுக்கு செல்வதில்லை.
இதை கணவர் சொன்னாலும் அவனை மதிப்பதில்லை.
இதை சொல்கிறான் என்பதால் அவன் போன் செய்தாலும் போனை எடுப்பதில்லை..
அட என இதற்கே ஆச்சர்யபட்டால் எப்படி?
இன்னோரு சம்பவம் பாருங்கள்
நான்கு, ஐந்து, ஆண்பிள்ளைகள் உள்ள ஒரு பெரியவீடு
ஆனால், அந்த வீட்டில் எந்த மருமகளும் இல்லை.
இதைவிட ஒரு உண்மை என்னவென்றால்,
அந்த பெண்களுக்கு அறிவுரை சொல்லாமல்
முழு சுதந்திரமும் கொடுப்பது யார்
தெரியுமா?! அந்த பெண்களின் தாய்மார்கள் தான்.
என்னமோ போங்க?!
இந்த விசயத்தை பொறுத்த வரை
பொறுப்பு யாருக்கு வரவேன்டும் என்பது
மருமகளுக்கு மட்டுமல்ல
அந்த பெண்களின் தாய்மார்களுக்கு தான்.
தனது பெண் இன்னார் வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து
பெயரெடுத்து அதைப்பார்த்து உள்ளம் பூரிக்கவேண்டும்..
இல்லயேல் அதுவரை
மீனாட்சி ஆட்சி தான்...
அப்போ??
திருப்பாச்சி
துருப்பிடிச்சிப்போய்டும்...)))))j/k

டிஸம்பர் - 6

டிஸம்பர் - 6 வந்தாலே நம்மிடம்
இறையில்லச் சிந்தனை வந்து
நம்மிடம் ஒரு சோகம்
நம்மை அறியாமல் வந்து சேரும்.
இது சுதந்திர இந்தியாவில் நடந்த
கேவலம் என்றால் மிகையல்ல.
இன்றைய தினத்தில்
ஏராளனமான நமது அமைப்புகள்,
ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும்,
கையெழுத்து வேட்டையும்,
கண்டன போஸ்டர்களும் என
தனது எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.

இதை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை.
இறைவனை தொழக்கூடிய ஆலயங்கள்
இடிப்பதை கண்டிக்காமல் இருக்கமுடியாது.
அதை மீட்கவும் முயற்சிகள் தொடரவேண்டும்...




ஆனால் இங்கே சில சிந்தனைகள் சொல்லவேண்டும்
இறைவனின் இல்லத்திலிருந்து
தினமும் ஐந்து நேரம் இறைவனை வணங்குவதற்காக
அழைப்புகள் வந்து கொண்டே
இருந்தது.. இருக்கிறது..இருக்கும்..
அந்த அழைப்பை காதில் வாங்கி கொள்ளாமல்
எருமைமாட்டின் மேலே
மழை பெய்த மாதிரி சென்றுவிட்டு
இடித்தபின் ஆர்ப்பாட்டங்களுக்கு செல்வது
எந்த விதத்தில் நியாயம்?!
அந்த ஒரு தினத்தில் கூடி
தமது உணர்வை வெளிப்படுத்துவது
எந்த விதத்தில் நியாயம்..?!
எங்கே அல்லாஹ்வின் நல்லடியார்களே
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..
இறை இல்லத்தில் இருந்து வரக்கூடிய அழைப்பை
ஏதோ மோதினாரின் அழைப்பு என கருதாமல்
இறைவனை வணங்க பள்ளிக்கு செல்லுங்கள்
தொழுகையால் இறைஇல்லத்தை அலங்கரியுங்கள்.
'மூமினான ஆண்களுக்கும்
மூமினான பெண்களுக்கும்
குறிக்கப்பட்ட நேரத்தில்
தொழுகை கட்டாய கடமையாகும்.'