வியாழன், 31 டிசம்பர், 2009

நாளைய விடியலுக்காக..

உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம் வந்து
உலகமே தலைகீழாக மாறிப்போய்
எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்
என வியக்கும் அளவுக்கு உலகத்தின் நிலை ஆனது.

2008 ஜூலை, ஆகஸ்ட் முதல் ஏற்பட்ட
அமெரிக்க வங்கிகளின் நிலை,
வலுவடைந்து பெரும் சுனாமியை ஏற்படுத்தி உலகத்திற்கு இந்த அளவுக்கு ஒரு அழிவை ஏற்படுத்தியது..
அமெரிக்காவில் பல நகரங்களில்
மக்களின் வாழ்வே மாறியது.
அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தவர்கள்
எல்லாம் காடுகளில் சென்று வசிக்கும் நிலை.

எத்தனையோ முன்னனி நகரங்கள்
'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற
வள்ளுவனின் வாக்கைப்போல
அமைதியாக அடங்கிப்போனது.
இந்த பின்னடைவில் இருந்து இன்னும்
உலகம் எழவில்லை.
எனது நண்பர் ஒருவர் தகவல் தொழில் நுட்ப துறையில் புதியதாக தொழில் தொடங்கி
கையை சுட.. நிறுவனத்தை மூடிய நிலை..
இது நடந்தது சென்னையில் தான்.
அட என இதற்கே வியந்தா எப்படி?
இது போல ஏராள்னமா சம்பவங்களை சொல்லலாம்.
இந்த பொருளாதார தேக்கத்தில்
உலகம் முழுவதும் வேலை இழந்தோர்
எண்ணிக்கை சொல்லி உங்களை பயமுறுத்த விரும்பவில்லை.. இதற்காக பாதிக்கப்பட்டவர்களை,
நஷ்டமடைந்தவர்களை, சிரமப்பட்டவர்களை,
இறைவன் தண்டித்துவிட்டான் என நினைக்காதீர்கள்.
அப்படி சொல்லவும் வேண்டாம்.
ஏனென்றால்,
'காலச்சக்கரத்தை நாமே சுழலவிடுவோம்'
என்ற வேதவரிகளை மறக்கவேண்டாம்.
நம்ம தஞ்சாவூர்பக்கம் தான் சொல்வாங்களே?!
'முப்பது வருசம் வாழ்ந்தவனும் இல்லை
முப்பது வருசம் வீழ்ந்தவனும் இல்லை' என..'

ஆனால் உலகத்தின் நம்பிக்கை சற்றே துளிர்கிறது.
டிஸம்பர் இறுதி வாரத்தில் தொடங்கிய விடுமுறைகள் தொடர்கிறது.
இந்த வருடம் போகட்டும் என...,
பலரும் காத்திருக்கிறார்கள்..
பலரும் புதிய தொழில் தொடங்க,
2010 வரட்டும் என இருக்கிறார்கள்.
எப்படியோ 2009 ஒரு நஷ்டமான வருடமாக இருந்தது
என்பதில் வியப்பில்லை,..
சரி போகட்டும் என உலகம்
உற்சாகத்திற்கு தயாராகி விட்டது.
குடந்தை போன்ற நகரங்களில் கூட
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விளம்பரங்கள்.
மக்கள் நாளைய விடியலுக்கு தயாராகி
ஆட்டம் போட தயாராகி விட்டனர்.

ஆஸ்திரேலியாவின் ஒபேராய் ஹவுஸில் தொடங்கி
ஹாங்காக், ஷங்கைய், சிங்கை, சென்னை ,
துபாய் வழியாக
ஐரோப்பிய நாடுகள் வழியாக
அமெரிக்க நகரங்களை
இந்த புத்தாண்டு செல்ல இருக்கிறது.
காலத்தை குறை சொல்லாமல்
இறைவனை மறக்காமல்
வட்டி இல்லா பொருளாதரத்தை தேடி
இந்த உலகம் சென்று
ஆரோக்யமான காற்றை சுவாசிக்கட்டும்.

'every sunset gives us one day
less to live! but,
every sunrise give us,
one day more to hope!
so, hope for best.
have a lovely day!'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக