வியாழன், 11 ஜூன், 2009

இயற்கை அழகி..!


என்னப்பா இதற்கே அசந்தா எப்படி?
அடுத்தது பார்க்க வேன்டாமா?





எங்கே கண்கள் சோம்பலாக இருந்தது போக
இப்போ எப்படி இருக்கு?
ஆமா ஏதோ கண்ல எரிச்சல் என்றாயே எப்படி இருக்கு?




சரி உனக்கும் நேரம் கிடைக்கும் போது
வீன் அலைச்சல் இல்லாமல்
ஒரு வாரம் இல்லை 4 நாள் ஓய்வு எடு
மச்சான் வாழ்க்கையில் ஓய்வும் வேனும்


அப்போதான் நாம் அடுத்த திட்டத்திற்கு
நமது மனமும் உடலும் தயாராகும்...
ஹா..ஹா... வாழ்க வளமுடன்...

ஊட்டியின் அழகை நாமும் ரசிக்கலாமே..!

இறைவன் நமக்கு அள்ளித்தந்த
இயற்கை வளத்தை நாம் கொஞ்சம் ரசிப்போமா?


ஊட்டியின் இயற்கை அழகை பாலுமகேந்திரா மட்டும்தான் படமாக்குவாரோ?
ஏய் மக்கா? பாரு இந்த படங்களை....






எப்படி கீது?
மெய்யாலுமே நல்லா இருக்கா?

நாமும் கேமராவை உங்களுக்காக சுத்திச் சுத்தி எடுத்த
அசத்தலான கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள்





உண்மையில் இயற்கையை ரசிக்க..
மனம் விட்டு நிம்மதியாக வாழ
மன அமைதிக்கு நாம் சற்றே ஓய்வு எடுக்க..


நீலகிரி இறைவன் தந்த வரப்பிரசாதம்...

புதன், 10 ஜூன், 2009

செஞ்சிலுவை சங்கம்

இன்றைய அவசர உலகில்
பலருக்கும் அவசியமான ஒன்று..
ஏதாவது சிரமங்களில் அவசர உதவிகள்
இந்த உதவிகள் மதம் பார்ப்பதில்லை,
நிறம் பார்ப்பதில்லை,
அவனது இல்லை அவளது தோற்றம் பார்ப்பதில்லை.

உதவிகள் செய்து முடித்த பின் அவர்களின் மனதார நன்றிகள்
இல்லை பிரார்த்தனைகள் அதற்கு ஈடு இனை எதுவும் இல்லை.
இன்னும் சிலபேர் அந்த நன்றிகள் மறவாமல்
தனது வாழ்னாள் முழுவதும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
அரபிய நாடுகளில்
இறைவன் உனக்கு நற்கூலியை தருவானாக! என்பார்கள்.





உலகில் பல நாடுகளில் செயல்படும் ஒரு அமைப்பு
இதன் கிளை நமது ஊரிலும் இருக்கிறது..
சற்றே ஒரு பார்வை பார்ப்போம்.

பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களின் மனதில் சேவை எண்ணத்தை விதைக்க,
ஒவ்வொரு பள்ளி, கல்லூரியில் நூறு மாணவ, மாணவியரை தேர்ந்துடுத்து முறையாக
அவர்களுக்கு முதலுதவி, இடர்ப்பாடு மீட்புப் பயிற்சி, போக்குவரத்து விதிகள்,
இரத்ததானம், கண்தானம், பார்வையற்ற மாணவர்களுக்கு பாடங்களை படித்துக்காட்டுதல்
போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றோம்.





தஞ்சாவூரில் ஒரு ரத்த வங்கியை உருவாக்க முன்வந்தோம்.
மலேசியத் தொழிலதிபர் சிராஜ்தீன் 35 லட்சம் செலவில் கட்டிடம் கட்டித் தந்தார்.
இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஒன்பது லட்சம் மதிப்புள்ள ரத்த வங்கிக்கு
தேவையான சாதனங்கள் நன்கொடையாக கிடைத்தன.
இதைப்போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்களின் நல்ல முயற்சியால்
இரத்தவங்கி சிறப்பாக செயல்படுகிறது.



இரத்த வங்கி சேவையை மேம்படுத்துவது,
ஆம்புலன்ஸ் சேவையை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்துவது,
இரத்ததான திட்டம், எய்ட்ஸ் விழிப்புனர்வுத் திட்டம்,
குழந்தை நலன், மகளிர் நலன், ஊனமுற்றோர் மேம்பாட்டு நலன்..
போன்ற நலத்திட்டங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்லப்போகிறோம்.

சமீபத்தில் தஞ்சாவூர் செஞ்சிலுவை சங்கத்தின் கெளரவச் செயலாளர்
கோவி. ராஜமகேந்திரன் அவர்களிடம் உரையாடிய போது



ரெட்கிராஸ் அமைப்பில் தன்னார்வமிக்க எவரும் உறுப்பினராகச் சேரலாம்.
தனிநபர், வாழ்னாள் உறுப்பினர், புரவலர், துனைப்புரவலராகவும் சேரலாம்.

திங்கள், 8 ஜூன், 2009

நெல்லை ஜில்லாவில் ஒரு உலா

நெல்லை மாவட்டத்தில்
ஒரு உலா வந்த போது
நமது புகைப்படச் சுருள்கள் உங்களுக்காக..


மணிமுத்தாறு அனை


பயணங்களின் வழியே..


நட்பு வட்டங்கள் நொங்கு குடித்தபோது


நெல்லையில் ஒரு தஞ்சை..
ஆமாங்க இந்த மே மாத கோடையிலும்
தண்ணீர் பாசனத்தில் செழித்த அழகான வயல்வெளிகள்

வியாழன், 4 ஜூன், 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

சமீபத்தில் நடந்த முடிந்த தேர்தலில்
திமுக கூட்டணியில் வேலூர் தொகுதியில் மட்டும்
ஒரு இடத்தை மட்டும் வாங்கி நின்று யாரும் எதிர்பாராதவிதமாக வெற்றியைப்பெற்ற
அன்பு சகோதரர் ஈமான் பொதுச்செயலாளர்
அண்ணன் முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு இனயம் சார்பாக
மனமார வாழ்த்துகிறோம்.

கேரளாவில் முஸ்லீம் லீக்
அவர்கள் தமது வாக்குகளை
கனிசமாக வைத்துள்ளார்கள்..
அவர்கள் தமது வேட்பாளர்களை
நிறுத்தி வைத்து வெற்றி பெறுகிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் இந்த நிலையா?
இதற்கு என்ன காரனம்?
தன்னார்வ தொண்டு நிறுவனமான த.மு.மு.க.
அரசியல் கட்சியாக மாறியது ஏன்?
இது தமிழக தலைமை சிந்திக்க வேன்டும்?




இது தமிழகத்தில் கட்சி புத்துணர்வு பெற
நல்ல காலம் என்று கூட சொல்லலாம்.
காரனம், காதர்மைதீன் நின்றால் இத்தனை ஓட்டுக்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே?
ஆனால், அப்துல் ரஹ்மானுக்கு கிடைத்தது
என்ன காரனம்?
இள ரத்தம் , புதுமுகம்,
துபாயில் அனைவருடனும் நல்ல பழக்கம்,
பல உயர் அதிகாரிகளை தெரியும்.
மக்களுக்கும் ஒரு நம்பிக்கை.
அதான் ஒரு லட்சத்திற்கு மேல்
வாக்கு வித்தியாசம்..
பல அரசியல்வாதிகளே தினறிய இந்த தேர்தலில் இவருக்கு எப்படி கிடைத்தது?
இந்த மக்களின் நம்பிக்கை வீண்போகக்கூடாது.
இன்னும் கொஞ்சம் ஓவராக சொல்லப்போனால்,
தமிழகத்தில் இருந்து சென்ற எம்.பி.க்களில் மக்களுக்காக பேசக்கூடியவர்கள்
என நாம் பார்த்தோமானால்,
திரு. தொல்.திருமாவளவனையும்,
அப்துல் ரஹ்மானையும் சொல்லலாம்.



இது வைக்கோவும், ஜவாஹிருல்லாவும்
இல்லாத குறையைப்போக்கும்
என்பதில் சந்தேகமில்லை.

அப்துல் ரஹ்மானின் வேலை
பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் இல்லாமல்
தமிழத்தில் பட்டி தொட்டியெங்கும்
அனைத்து ஊர்களிலும் நிர்வாகிகளை தேர்ந்து எடுத்து
கட்சியை வளர்க்க வேன்டும்.
பொன்விழா கண்ட ஒரு அரசியல் கட்சி
அழிவின் பாதையில் இருந்து மீன்டு
மீன்டும் செழித்தோங்க நல்ல பாதைகள்
அமைய வேன்டும்.

என் கல்யாண வைபோகம்..

அந்த காலத்தில் செல்லாது என்று சொன்ன மணமுறையை செல்லும் என்று ஆக்கியவர்கள் தந்தைபெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தான்,
என சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் கி.வீரமணி இவ்வாறு பேசினார்.

அதான் சுயமரியாதை திருமணங்கள்
திருமண நடைமுறையில் தாம்பளத்தில்
மஞ்சளில் கிளறிய அரிசியை வைத்து
அதன் மீது தேங்காய், பழம், தாலியை வைத்து,
அதை அனைவருக்கும் காட்ட
அரிசியை அனைவரும் எடுத்துக்கொண்டு
அட்சதை போடுவார்கள்.. இதில் பெரும்பாலும்
அட்சதை மணமக்களில் மேல் விழாது..
தனக்கு முன்னே யார்
இருக்கிறாரோ அவர்கள் தலையில் தான் விழும்..
இதை தான் பெரியார் மாற்றச்சொன்னார்..


அதே போல பல சடங்குகளை இது போல சுயமரியாதை திருமணங்களில் பார்க்க முடியாது.

சுயமரியாதை திருமணங்கள் குறித்து
பேராசியர் அன்பழகன் எழுதிய புத்தகம்
நேரம் கிடைக்கும்போது ஒருமுறை படித்துப்பாருங்கள்


நமது பகுதிகளிலும் திராவிட கழகத்தினர்
அதிகமாக இருக்கின்றனர். பல சுயமரியாதை திருமணங்கள் நமது பகுதிகளிலும் நடந்துள்ளது..

ஆனால், சமீப காலமாக நமதூரில்
பல இளைஞர்கள் (இஸ்லாமிய இளைஞர்கள்)
பலரும் எதிர்பாராத வன்னம்
சீர்திருத்த திருமணம் செய்கிறார்கள்
என்பது ஆச்சர்யமான செய்தி.
சமீபத்தில் நான் ஊரில் இருந்த காலத்தில்
ஒரு சில திருமணங்கள்..
மாப்பிள்ளைகள் ஆடம்பர
திருமண ஊர்வலத்தை விரும்புவதில்லை.
அதே போல வரதட்சனை,
பெண் வீட்டாரை கசக்கி பிழியும் சீர் வரிசைகள்,
இப்படி எதுவும் இல்லை. வீட்டில் உள்ளவர்கள் அழைத்துப்பேசி, திருமணம் நிச்சயம் செய்து,
பயணத்தில் இருந்து வந்து
ஊரை அழைத்து விருந்து நடத்தி,
அங்கே அழகான சீர்திருத்த திருமணம்
அமைதியாக நடைபெறுகிறது.
நாம் எதிர்பார்க்கதவர்கள் எல்லாம்...
என்ன அழகாக தமது திருமணத்தை முடித்தார்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே...

இதில் இன்னும் சொல்லவேன்டுமானால்
இஸ்லாம் சொல்லிய வன்னம்
மஹர் கொடுத்து மணம் முடிக்கிறார்கள்.

உலக கல்வியும் மார்க்க கல்வியும்
பயில இன்றைய மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
எங்கே நல்ல பாடங்கள் புகட்டப்படுகிறதோ..
அங்கே எல்லாம் சென்று பாடங்கள் பயில்கிறார்கள்.
உலக கல்வி படித்து உயர்ந்த பதவிகளில் வகித்தாலும் நபிகளாரில் வாழ்க்கை நடைமுறையை இவர்கள் பயில தவிறியதில்லை.
தனது வாழ்வில் அதை நடைமுறை படுத்த தயக்கமும் இல்லை.
இப்படி பல இளைஞர்கள் வழிகாட்டும் சீர்திருத்த திருமணங்கள் இனியும் தொடர்ந்து நடைபெறும் என்பதில் ஐயமில்லை.