வியாழன், 4 ஜூன், 2009

என் கல்யாண வைபோகம்..

அந்த காலத்தில் செல்லாது என்று சொன்ன மணமுறையை செல்லும் என்று ஆக்கியவர்கள் தந்தைபெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தான்,
என சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் கி.வீரமணி இவ்வாறு பேசினார்.

அதான் சுயமரியாதை திருமணங்கள்
திருமண நடைமுறையில் தாம்பளத்தில்
மஞ்சளில் கிளறிய அரிசியை வைத்து
அதன் மீது தேங்காய், பழம், தாலியை வைத்து,
அதை அனைவருக்கும் காட்ட
அரிசியை அனைவரும் எடுத்துக்கொண்டு
அட்சதை போடுவார்கள்.. இதில் பெரும்பாலும்
அட்சதை மணமக்களில் மேல் விழாது..
தனக்கு முன்னே யார்
இருக்கிறாரோ அவர்கள் தலையில் தான் விழும்..
இதை தான் பெரியார் மாற்றச்சொன்னார்..


அதே போல பல சடங்குகளை இது போல சுயமரியாதை திருமணங்களில் பார்க்க முடியாது.

சுயமரியாதை திருமணங்கள் குறித்து
பேராசியர் அன்பழகன் எழுதிய புத்தகம்
நேரம் கிடைக்கும்போது ஒருமுறை படித்துப்பாருங்கள்


நமது பகுதிகளிலும் திராவிட கழகத்தினர்
அதிகமாக இருக்கின்றனர். பல சுயமரியாதை திருமணங்கள் நமது பகுதிகளிலும் நடந்துள்ளது..

ஆனால், சமீப காலமாக நமதூரில்
பல இளைஞர்கள் (இஸ்லாமிய இளைஞர்கள்)
பலரும் எதிர்பாராத வன்னம்
சீர்திருத்த திருமணம் செய்கிறார்கள்
என்பது ஆச்சர்யமான செய்தி.
சமீபத்தில் நான் ஊரில் இருந்த காலத்தில்
ஒரு சில திருமணங்கள்..
மாப்பிள்ளைகள் ஆடம்பர
திருமண ஊர்வலத்தை விரும்புவதில்லை.
அதே போல வரதட்சனை,
பெண் வீட்டாரை கசக்கி பிழியும் சீர் வரிசைகள்,
இப்படி எதுவும் இல்லை. வீட்டில் உள்ளவர்கள் அழைத்துப்பேசி, திருமணம் நிச்சயம் செய்து,
பயணத்தில் இருந்து வந்து
ஊரை அழைத்து விருந்து நடத்தி,
அங்கே அழகான சீர்திருத்த திருமணம்
அமைதியாக நடைபெறுகிறது.
நாம் எதிர்பார்க்கதவர்கள் எல்லாம்...
என்ன அழகாக தமது திருமணத்தை முடித்தார்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே...

இதில் இன்னும் சொல்லவேன்டுமானால்
இஸ்லாம் சொல்லிய வன்னம்
மஹர் கொடுத்து மணம் முடிக்கிறார்கள்.

உலக கல்வியும் மார்க்க கல்வியும்
பயில இன்றைய மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
எங்கே நல்ல பாடங்கள் புகட்டப்படுகிறதோ..
அங்கே எல்லாம் சென்று பாடங்கள் பயில்கிறார்கள்.
உலக கல்வி படித்து உயர்ந்த பதவிகளில் வகித்தாலும் நபிகளாரில் வாழ்க்கை நடைமுறையை இவர்கள் பயில தவிறியதில்லை.
தனது வாழ்வில் அதை நடைமுறை படுத்த தயக்கமும் இல்லை.
இப்படி பல இளைஞர்கள் வழிகாட்டும் சீர்திருத்த திருமணங்கள் இனியும் தொடர்ந்து நடைபெறும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக