என்ன மக்களே
எப்படி இருக்கீங்க?
நாம் வெளினாடுகளில் சாலைப்பயணங்கள் மேற்கொள்வது வேறு
இந்தியாவில் சாலைப்பயணங்களில் வேறு.
அலுவல் நிமித்தமாக சென்னை வரை இரன்டு நாள் பயணம் மேற்கொன்டேன்.
நமதூரில் இருந்து சென்னை செல்ல..
இரன்டு வழிகள் தான்..
தஞ்சை திருச்சி வழியாக செல்லனும் அல்லது
குடந்தை வழியாக சேத்தியார்தோப்பு வழியாக செல்லனும்.
இதுல என்னா? பிரச்சனைன்னா?
அனைக்கரையில் பாலம் பழுதடைந்து விட்டதால்,
பல திருத்தலங்கள் வழியாக சாலைப்பயணம்.
ஆமாங்க, நீங்க சென்னை போகும் போது
மன்னை, குடந்தை சென்று..
அங்கிருந்து மாயாவரம், சீர்காழி, சிதம்பரம் போய்
பின்னர் சேத்தியார்தோப்பு சென்று மீன்டும் சென்னை நோக்கிப்பயணம்.
நமது பொறுமைக்கு எல்லையே இல்லை.
பஸ் போகுது.. போகுது,.. போகுது..
அட போங்கடாஆஆஆஆஅ...
இங்கே உள்ள பேருந்து ஓட்டுனர்களையும் சும்மா சொல்லக்கூடாது.
சாலையில் ஒரு ஈ, எறும்பு, ஆட்டுக்குட்டின்னு எதைப்பார்த்தாலும்
உடனே.. பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
ஹா..ஹா... அது ஏன்னு தெரியலை..
கிட்டத்தட்ட குடந்தையில் இருந்து
சென்னை எட்டு மணி நேர பயணம்.
இடையில் குடந்தையில் இருந்து சிதம்பரம் வரை..
பல திருத்தலங்கள்..
ஆன்மிக பெரியார்கள் வாழ்ந்த ஊர்கள்.
சங்கீத வித்வான்களின் ஊர்கள் என எல்லாம் பார்க்கலாம்.
வைத்தீஸ்வரன் கோவிலும் வருது..
அட நாடி ஜோதிடம் பார்க்கலாம்.
என்னமோ போங்க இது எல்லாம் தான்டி சென்னை போனால்,
அந்த டீஸல் நாகரிகத்தில்
அழகான வெயிலில் அடடா...
அதுவும் சென்னை நெரிசல்,
பரபரப்பான வாழ்க்கை..ம்ம்
ம்ம் அங்கே உள்ள அம்மணிகள் இரு சக்கர வாகனத்தில்
என்னா போடு போடுது...
என்னமோ சென்னை வருவதற்கு பதிலாக,
நாம ஏர் அரேபியாவில் கோவை வரலாம்..
இந்த பாலம் எப்போ சரி பன்னுவாங்களோ தெரியாது.
இந்த பாலம் வெள்ளைக்கார துரை கட்டினது.
அவர் இருக்காரா இல்லையான்னு தெரியாது.
இல்லை அவர் பிள்ளைகளிடம் இந்த பாலம் கட்டின சூட்சுமத்தை சொன்னாரான்னு தெரியலை.
போன வருடம் யாரோ கொத்தனாரிடம் சொன்னார்களாம்.
அவர் தன் பங்குன்னு கொஞ்சம் சிமென்டை பூசிட்டு,
அவர் வாயிலே சுன்னாம்பை பூசிட்டு
அப்படியே சித்தாளிடம் கடலை போட்டுட்டு பெயிட்டார்.
அல்லல் படுவது யாரு பொதுமக்கள்தானே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக