திங்கள், 18 ஏப்ரல், 2011

வாசனை வீசும் அகர்பத்திகள்

அன்று ஒரு நாள் நமதூரின் கடைவீதியில்
அமர்ந்து இருந்த போது ஒரு தம்பதியினர் வந்தனர்.
அதில் அந்த தம்பதியின் கணவருக்கு கண் தெரியாது.
அவர்கள் அக்ர்பத்தி வியாபாரம் செய்தனர்.
கண் தெரியாத தம்பதி என்பதால் மனது இரக்கத்தில் நாங்கள் பத்தி வேண்டாம்
என்று சொல்லி பணம் கொடுத்தோம் அதற்கு அந்த தம்பதிகள்
எங்களுக்கு சும்மா பணம் எல்லாம் வேண்டாம் பத்தி வாங்கிக்கொண்டு
பணம் கொடுங்கள் என்றனர். அட.டா என்ன ஒரு சுய கெளரவம்.

என்ன ஒரு மரியாதை
என்ன ஒரு தன்னம்பிக்கை
நாம் சும்மா எல்லாம்
நமது உடலின் ஊனத்தைச் சொல்லி
பணம் வாங்கி அதில் வாழவேண்டாம்.
தினமும் குறைந்தது நூறு ரூபாய் சம்பாதித்தால் போதும்.
அதற்காக ஒரு சிறு தொழில் செய்வோம்.
அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து
நாம் கெளரவமாக நிம்மதியாக வாழ்வோம் என எண்ணினார்களே..
அந்த தம்பதியை நினைத்து மனம் பல நாள் அசைபோட்டது.

நாம் வாழும் இந்திய நாட்டில்
சமீப காலமாக எத்தனை எத்தனை ஊழல்கள்
ரோடு பொட வரும் ஒப்பந்தக்காரர்கள் முதல்
2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ், சுடுகாட்டு ஊழல் என பட்டியல் நீளும்போது,
நமது நாட்டுக்கு வெளியே அடுத்த நாட்டின் எண்ணெய் வளத்தை
சுரண்டுவதற்காக கோட்டு சூட்டும் போட்டு பேசும் நாகரீக சீமான்கள் வரை..
எல்லோரையும் அசைபோடுங்கள்...
அன்னா ஹஸாரே மாதிரி ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும்
காந்தியவாதிகளையும் அசைபோடுங்கள்.
அப்படியே இந்த தம்பதிகளையும் அசைபோடுங்கள்.
ஊழலும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் .
உழைத்து சாப்பிடுவோம் என பீகாரில் கை ரிக் ஷா இழுக்கும் இந்திய மன்னர்களும் இருக்கிறார்கள்.
இதான் இந்தியா!

செவ்வாய், 8 மார்ச், 2011

மகளிர் நாள்

இன்றைய உலகில் தினங்களுக்கா பஞ்சம்
மேலை நாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி
அதற்கு தப்பாமல் எல்லா நாடுகளுமே
அதை கொண்டாடி வருகின்றன..

அந்த வகையில் இன்றைய தினமான
நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய வகையில்
ஏதாவது ஒரு பெண் / தோழி
இல்லாமல் இருக்க மாட்டார்கள்..

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு
எனது அலுவலத்தில் புதியதாக ஒரு பெண் வேலைக்கு சேர்க்கப்பட்டாள்.
வந்த இரண்டு மாதங்களில்
கணினியின் முன் அமர்ந்து
கணினியை பார்த்தவாறு வேலை
செய்து கொண்டு இருந்தாள்.
அது இன்று போல
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும்
அந்த அளவுக்கு நமக்கெல்லாம் தெரியாத நாட்கள்..
பின்னர் நாம் அவளிடம் பழகி நல்ல ஒரு நட்பாகி
அவள் என்ன படித்து இருக்கிறாள்,
என்ன வேலை செய்கிறாள்
என தெரிந்த பின் தான்
அந்த தோழியின் திறமைக்கு
நாம் மரியாதை மனதோடு
தெரிவிக்க ஆரம்பித்தோம்.
அவள் படித்து இருந்தது.. computer programmer
அதில் web developer
இனையதளம் வடிவமைத்து
அதை துணிகரமாக வெளியிடுவது...
அந்த நுட்பமான அறிவு தான் brilliance...
நம்மிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி
நம்மையும் படிக்க வைத்தது..
அதன் பின் இனையதளங்களில் இனைந்து
நாமும் பணியாற்றினோம்..
ஏராளனமான கட்டுரைகள் எழுதினோம்.

இன்று மகளிர் தினத்தில்
யாரை என யோசித்தபோது
எனது மனதில் தோன்றியது
அந்த தோழியின் தாக்கம் தாம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதலர் தினம்

அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை
அவளுக்கு யாரும் இனை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

உலகமே கலாச்சார சீரழிவில் சென்று கொண்டிருக்க
வெட்கம் அறியாத ஒரு தலைமுறை உருவாக
ஊடகங்கள் அதுக்கு வழி வகுக்கிறது என்றால் மிகையல்ல.

காதலர் தினம் என அதற்கு என சிறப்பு நிகழ்ச்சிகள்
அதற்கென சிறப்பு நேர்கானல்கள்
ஏன் இந்த நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத கொண்டாட்டங்கள்.

ரோசாப்பூவும், வாழ்த்து அட்டைகளும்,
நினைவில் நிற்க அன்பளிப்புகளும்
பரிமாறுதலில் இருந்தாலும்,
இன்னும் அறுவடைக்கு தயாராக இருக்கும்
தஞ்சை தரணியின் வயல்வெளிகளில்
கானும் நெற்கதிர்கள் நாணத்துடன் தலை சாய நிற்பது போல,

இன்னும் அச்சம் , நாணத்துடன்
அடக்கமாக வாழும் தமிழ் குடும்பங்களும்
அது செழித்தோங்க பண்பாடுகள் சிதையாமல் இருக்க
கல்லாமல் வரும் ஆச்சாராமான கலாச்சாரத்துடன் வாழும் மக்கள்
இந்த மண்வெளியில் உலவாமல் இல்லை.

சோசியல் நெட்வொர்க் எனும் பேஸ்புக்கில் கூட
தன் முகம் காட்டாத நாணத்துடன் வாழும்
தமிழ் சமுதாயம் இருக்கிறது என்றால் மிகையல்ல.
உலகம் கலாச்சார சீரழிவில் நாகரீக மோகத்தில் சென்றாலும்
விழிப்புணர்வு என்னும் பிரச்சாரத்தை நாம் செய்வோமாக!

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

அரபிக் கடலின் அழகி

அரபிக் கடலின் அழகி
என வர்னிக்கப்படும் அழகிய நகரம் தான்
கொச்சி என அழைக்கப்படும் எர்னாகுளம்.
ஐந்து சிறிய தீவுகளை கொண்ட நகரம் எனவும் சொல்லலாம்.
மிக நீண்ட சேர நாட்டில் தற்போது வளர்ந்து வரும் ஒரு நகரம்.

கொச்சியில் உள்ள மக்களுக்கும், மற்றும் ஏனைய பாகங்களில் உள்ள
மலையாளிகளும் மிகவும் எதிர்பார்த்த ஒன்று 'ஸ்மார்ட் சிட்டி.'
ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த திட்டம்,
இத்தனை காலமாக அச்சுதானந்தன் அரசின் மெத்தனத்தில் தள்ளி..தள்ளி.. செல்ல,
சில தினங்களுக்கு முன்பு தான் இந்த திட்டம் இறுதி வடிவம் பெற்றது.
இதற்காக இறுதியாக அரும்பாடு பட்டு இந்த திட்டத்திற்கு உறுதுனையாக இருந்த
'யூசுப் அலி' மலையாளிகளின் மனதில் கதா நாயகன் ஆனார்.



'ஸ்மார்ட் சிட்டி' என்றால் நமக்கு பழகிய பாஷையில் சொல்ல 'இன்டர்னெட் சிட்டி'.
இது தான் அங்கே உள்ள காக்கனாடு பகுதியில் வரப்போகுது.
இது வரப்போகுது என தெரிந்து இந்த பகுதியைச் சுற்றி
ஏராளனமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்க்கப்பட்டு
நல்ல வாடகைக்கு விட வாங்கியவர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இந்த பகுதி சுற்றிலும் ஏராளனமான வணிக வளாகங்கள்,
இன்னும் பல வியாபார முன்னேற்றங்கள் தயாராகி இருக்கின்றன.




இதன் வருகையால் வேலைவாய்ப்பு பெருகும்.
தொடக்கத்தில் ஸ்மார்ட் சிட்டியில் மட்டும்
தொன்னூறாயிரம் பேருக்கு வேலை கிடைக்குமாம்.
வாவ்வ்வ்வ்வ்..
ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர்.



அடுத்து கொச்சியில் வருவது வல்லார்பாடம் என்ற இடத்தில்
புதியதாக திறந்த container terminal .
இன்னும் இதை சொல்லவேண்டுமானல் transhipment container terminal என சொல்லலாம்.
உதாரனமாக இந்தியாவிற்கு வரும் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள்
கொழும்பு அல்லது சிங்கப்பூர் சென்று பின்னர் தான்
இந்தியா வருகிறது.. ஆனால், இந்த டெர்மினல் வந்த பின் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள்

எல்லாம் நேரடியாக இந்த துறைமுகம் வந்து
இங்கே இறக்குமதியாக சாலைவாழியாகவோ,
அல்லது சரக்கு இரயில் மூலமாகவோ
நாட்டின் பல பாகங்களுக்கும் செல்லும்.
துவக்கத்தில் பத்து இலட்சம் கன்டெய்னர் வருமாம்.
பின்னர் சில காலங்களில் அது முப்பது இலட்சமாகுமாம்.
நல்ல விஷயம் தானே.



ஆனால் ஐந்து வருடமாக
அச்சுதானந்தன் அரசால் இழுத்தடிக்கப்பட்ட
ஸ்மார்ட் சிட்டியை நமது தமிழர்கள்
நம்ம தமிழகத்திற்கு கொண்டு வர நினைத்து இருந்தால்
அந்த வேலை வாய்ப்புகள் நம்ம ஊருக்கு வந்து இருக்குமே..
தமிழன் வழக்கம் போல தூங்குகிறானா?
இல்லை போனால் போகுது என விட்டு விட்டோமா?!